இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, July 19, 2010

050- பூமா தேவி போலே வாழும்படம் :   பஞ்ச கல்யாணி ( Panja Kalyani ) 
பாடல் :   
பூமா தேவி போலே வாழும்.... ( Bhooma Devi Pole Vzhalum )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   ஷ்யாம்
வருடம் : 1979
இயக்குநர் : N.சம்பந்தம் 
நடிகர்கள் :
Sivachandran, Vasanthi
தயாரிப்பு   : உடந்தை மணாளன்


மிக அருமையான பாடல்.... என்னுடைய வலைத்தளத்தின் இந்த 50-வது பாடல் திரு.கோவை ரவீ அண்ணாவின் விருப்பமாக இங்கு பதிந்திருக்கிறேன்...
அவரது விருப்ப பாடல் இங்கு 50-வது பாடலாக இருக்க வேண்டும் என்று நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்...
அவர் பஞ்ச கல்யாணி என்னும் படத்திலிருந்து பூமா தேவி போலே வாழும் என்ற பாடலை பதியுமாறு விருப்பம் தெரிவித்தார்..
உண்மையில் இந்த பாடலை இது வரை நான் கேட்டதில்லை.. இதை கேட்கவும் மற்றும் இங்கு பதியவும் காரணமாயிருந்த கோவை ரவீ அண்ணாவிற்கு மிக்க நன்றி..
திரு.பாலுவின் குரலில் ,நான் இந்த பாடலில் ,  
ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ ஊ நல்ல நாளும் வாறதோ...
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டேன்... அதை என்னவென்று பாராட்ட..அதற்கு புது மொழியை இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்...
 நேயர்களும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள்......Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Booma_Devi_Pole.mp3


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடல் வரிகள்

ஆஅ ஆஆ நானா ஆஆ
நநாஆஆஅ நானா ஆஆ
நநாஆ ஹெய்யேஏஏ

பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே

ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தனே....
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தேனே ஹோய்ய்ய்யி

பூமா தேவி போல வாழும்
ஜீவன் நீ தானே


சரணம் 1

தாகம் தீர்க்கும் மேகம் போலே
நீயும் வந்தாயே
தாகம் தீர்க்கும் மேகம் போலே
நீயும் வந்தாயே 


ஓடம் போலேஏஏஏஏஏ நநாஆஆ 
ஓடம் போலே ஓரம் சாய்ந்து சோஹம் தந்தாயே 
ஜாதி பேதம் ஊரை வாட்டும் 
காலம் மாறாதோ... நல்ல நாளும் வாராதோ 
நாளும் வாராதோ

பூமா தேவி போலே வாழும் 
ஜீவன் நீ தானே  


சரணம் 2

தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாலே
தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாலே
பாவி மனிதன்... நன்னன் நநநாஆஅ
பாவி மனிதன் பாவச் செயலை நீயும் மறப்பாயே

ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ ஊ நல்ல நாளும் வாறதோ
நாளும் வாராதோ

பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே 

ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே அஹாஆஅ
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே ஹோஓ

பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
ஜீவன் நீ தானே
ஜீவன் நீ தானே 


2 comments:

Arun Kumar N said...

This Comments i received from Covai Ravee Anna,

தம்பி அருண் குமார்..

வணக்கம்.. என்னோடைய விருப்பத்தை உடனே நிறைவேற்றிய உங்கள் அன்பு உள்ளத்திற்க்கு நன்றி.

இந்த பாடல் எப்போதும் என்னுடைய மனதை ஆக்ரமித்த பாடல் வரிகள் மற்றும் இனிமையான மெட்டு கொண்ட பாடல். தாஙக்ள் இப்போது தான்
பாடலை கேட்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்தீர்கள் அதனால் பாடல் காட்சி
தஙக்ளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இந்த பாடல் காட்சி ஒரு வாயில்லா ஜீவன் கழுதைக்கு பின்ண்ணி பாடியிருப்பார் நம் தலைவர்.

மனுசனுக்கு பின்ணணி பாடலாம் கதாநாயகன் எப்படி நடிப்பார் என்ற ஒரு யூகத்தில் பாலுஜி பாடலாம். ஒரு வாயில்லா ஜீவன் எபப்டி நடிக்கும் என்பதை நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இருந்தாலும் காட்சியில் பாலுஜியின் குரலுக்கு அந்த ஜீவன் கூட தடுக்கி விழுவது போல் மிக அமர்க்களமாக நடித்திருக்கும்.

ஒரு ஸ்வாரசியமான நிகழ்ச்சி இரண்டு வருடங்களூக்கு முன் நமது சாரிட்டி பவுண்டேசன் விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எல்லோரும் பாலுஜியின் முன் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சில பேர் அவர் பாடிய பாடல்களை நினைவு படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னவர் எனது நேரம் வந்ததும் மேடையில் நான் இந்த பாடலை கேட்டு தெரிந்தால் பாடவும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அவர் அதற்கு நீ சும்மா இருய்யா எப்பவோ பாடினதெல்லாம் கேட்டு வாதிக்கிறே என்று அன்புடன் கடிந்து கொண்டார். அது எனக்கு வருத்தமாக இருந்தாலும் என் உள்ளம் முழுக்க சந்தோசம் தொற்றிக்கொண்டது. வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள். அதுவே என் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. ஏனென்றால் பாடலின் சாரம்சம் எனர்ஜி கெமின்ஸ்ட்ரி என்று சொல்வார்களே அது நூறு சதவீதம் இருக்கும். சோகத்திலும் ஒரு சுகம் உள்ளது என்பர்களே அது இந்த பாடலில் முழுமையாக கேட்கலாம் காணலாம்.

அருண், முதலில் உங்கள் தளத்தில் பின்னூட்டம் செட்டீங்கிஸ் மாற்றுங்கள் என்னால் பின்னூட்டம் தரமுடியவில்லை ஆகையால் இதையே உங்கள் பின்னூட்டத்தில் சேர்த்து விடுங்கள். சிரமத்திற்க்கு மன்னிக்கவும். வாழ்த்த்க்கள் இன்னும் பல ஆயிரம் பாடல்கள் பதிய இறைவன் உங்களூக்கு உதவி புரியட்டும்.

- கோவை ரவி
Endrum Anbudan
Covai Ravee

Anonymous said...

மிக அழகான பாடல் வரிகள் அருமை....இனிய இசை. பாடும் நிலா பத்ம ஸ்ரீ Dr.SPB உம் இசைக்கடலில் நீந்தி என்னால் கரை சேர இயலாமல் போகிறேன்.

______________
இசைப்பிரியன்
ksb2u@yahoo.com

Post a Comment

Visitors of This Blog