இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, March 27, 2011

101- ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்

7 comments Write Comments


 படம் :   மக்கள் என் பக்கம் ( Makkal En Pakkam )
பாடல் :  
ஆண்டவனை பார்க்கணும் ( Andavana Paarkanum )

பாடலாசிரியர் :   வைரமுத்து
பாடியவர் :   பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   சந்திர போஸ்
வருடம் : 14-04-1987
இயக்குநர் : கார்த்திக் ரகுநாத்
 

வசனம்            :   A.L.நாராயனன்
படத்தொகுப்பு   :  வாசு

கலை        :  தங்கப்பன்
தயாரிப்பாளர்     :   சுரேஷ் பாலாஜி
நடிகர்கள் : சத்யராஜ், அம்பிகா, ரகுவரன், மனோரம்மா, டெல்லி கனேஷ் மற்றும் பலர் 

நூறாவது பதிவுக்கு பிறகு என்ன பாடல் என்று நேயர்கள் கேட்கத்தொடங்கி விட்டனர்...

1987ம் வருடம் கார்த்திக் ரகுநாத் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ”மக்கள் என் பக்கம்” படத்தில் நம் பாலுஜி பாடிய இந்த பாடல் நேயர்களுக்காக இப்பொழுது...

படத்தின் கதை என்னவென்று எனக்கு தெரியவில்லை... ஆனால் இந்த பாடல் சத்யராஜ் குடித்து விட்டு மாளிகையில் பாடுவது போல் படமாக்கியிருக்கிறார்கள்..
குடித்துவிட்டு பாடுவது போன்ற பாடல் என்றாலே கையில் ஒரு பாட்டில் இருப்பது இயக்குநர்களின் முத்திரை போலும்....

வைரமுத்துவின் வரி பாடலுக்கு தனி அழகை தந்திருக்கிறது.... சந்திர போஸ் அவர்களின் இசை பாடலுக்கு முழு உயிரையும் அளித்திருக்கிறது.

போதை பாடல்களிலும் ஒரு தூக்கலுடன் நம் பாலுஜிக்கே உரித்தான அந்த சிரிப்பும் இந்த பாடலில் உள்ளது தனிச் சிறப்பு...

பாடலை கேட்டு ரசியுங்கள் அன்பர்களே.....


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Andavana_Parkanum-SPB.mp3Andavana Paarkanum | Upload Music

பாடல் ஒளிக்கோப்பு
பாடல் வரிகள்SPB : ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..(சிரிப்பு)


சரணம் 1

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல.ஸ்
பூவுக்கு அடிமை பதினாரு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல..
அடிமைகளா பொறந்துவிட்டோம்
அத மட்டும் தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  ஆ..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..


சரணம் 2


காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  டேய்ய்ய்..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா......Wednesday, March 16, 2011

100- வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

8 comments Write Comments


படம்        :   ஒரு தலை ராகம் (Oru Thalai Raagam)
பாடல்       
வாசமில்லா மலரிது..வசந்தத்தைத் தேடுது ( vaasamilla malaridhu...)
பாடியவர்     :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை        :   விஜய T. ராஜேந்தர் 
வருடம்   :  
12 Mar 1980

இயக்குநர்    :  E.M. இப்ராஹிம்
 தயாரிப்பாளர்       :   மன்சூர் கிரியேசன்ஷ்
வசனம்            :   விஜய. T.ராஜேந்தர்
ஒளிப்பதிவாளர்  :  
ராஜசேகர்

படத்தொகுப்பு    :  D.ராஜ்
கலை        :  V.கலை
நடிகர்கள்     சங்கர் , சந்திரசேகர், ரவீந்தர், ரூபா, உஷா ராஜேந்தர், விஜய T. ராஜேந்தர் மற்றும் பலர்
 
 

 


தளத்தின் நேயர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக 100வது பதிவை பதிவதில் மகிழ்ச்சியும் அதே தருணத்தில் தளத்திற்கு அடிக்கடி வந்தும், கருத்துக்கள் பதியும்
என் அன்பு நேயர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்...

இந்த பாடலை நம் பாலுஜி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த இரவு இன்னிசைக் கச்சேரியில் மதுரை நேயர்களுக்காக இந்த பாடலை பாடினார்...
பாடலின் முதல் வரியாய் ”வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது” என்று தான் ஆரம்பித்தார்.... அதனால் தான் இங்கு 100வது பதிவாக இந்த பாடலை பதியுமாறு என் மனமும் மதுரை நேயர்களும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த தளத்தின் அன்பு நேயர்களுக்காக இப்பொழுது..

நூறு பாடல்கள் பதிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.. ஆனால் பாலுஜி நாப்பதாயிரம் பாடல்கள் பாடியுருக்கிறார் என்றால் அவரது
தொழில் ஈடுபாட்டை என்னவென்று பாராட்டுவது.. அதுவும் இந்த பாடல் வெளிவந்து 31 வருடங்கள் ஆகியும் காலத்தால் அழிக்கமுடியாமல் காற்றலைகளில்  இன்றும் மிதந்து கொண்டிருக்கிறது.....


"ஒரு தலை ராகம் (1980)" படம் மற்றும் இந்த பாடலைக் கேட்டாலே அணைவருக்கும் ஹீரோ சங்கரும் அவருடைய பெல்பாட்டம் பேண்ட்டும் தான் நினைவிற்க்கு வரும்.
1970 முதல் 1985 வரை இந்த பெல்பாட்டம் பேண்ட்டுதான் பலரது விருப்பம். பிறகு  டைட்ஸ் பின்பு பேகி என்று ஸ்டைல் மாறி இப்பொழுது மறுபடியும் அந்த பெல்பாட்டம் பேண்ட்டும் அதே மாடல் ஜீன்ஷும் அணியத் தொடங்கிவிட்டனர்.
படம் வெளிவந்து இரு வாரங்கள் கடந்துதான் ஹிட் ஆனது..
பாடல்களின் மூலம் தான் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் T.M.செளந்தர்ராஜன் அய்யா, ஜேசுதாஸ் மற்றும் நம் பாலுஜியின் குரல்கள் கலந்ததால் அணைத்தும் மறக்கமுடியாதா
பாடல்கள்.இதில் நடித்த உஷா ராஜேந்தர் சிம்புவின் அம்மா என்று பலர் அறிந்த தகவல்தான். E.M. இப்ராஹிம் தான் இப்படத்தின் இயக்குநர் . இந்த படம்தான் அவருக்கு தமிழில் முதழும் கடைசி படமும்... விஜய. T.ராஜேந்தர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவார்... அவர் மேடையில் பாட வரும் காட்சியும் பேசிய வசனமும் அவருடைய தனி முத்திரை...

இந்த பாடலில்  முதல் வரியைப் பாடிவிட்டு, வரியின் முடிவில் பாலு ஒரு சிரிப்பை உதிர்ப்பார் . அது அவருக்கென்றே உள்ள ஒரு தனி முத்திரை...
இந்த மாதிரி சிரிப்பை பல பாடல்களில் இசையோடு பொருந்த பாடியிருப்பார்.  அந்த வரிகளை மட்டுமே பல தடவை கேட்கலாம்....


”பயணங்கள் முடிவதில்லை” என்ற படத்தில் வரும் "இளைய நிலா" என்ற பாடலும் இந்த பாடலைப் போன்றே படமாக்கியிருப்பார்கள்.இரண்டு பாடல்களிலுமே இருவரும் மைக்கைப் பிடித்துப்
பாடும் இந்தப் பாடல்கள் இனிமையான கிடார் இசையுடன் நம் பாலுஜியின் குரல்களில் மென்மையாக ஒலிக்கும்.

விஜய. T.ராஜேந்தர் இசையில் நான் விரும்பிக்கேட்கும் பல பாடல்களில் இந்த பாடலும் ஒன்று...
தளத்தின் வாசகர்களின் செவிகளுக்காக பாலுஜியின் மயக்கும் குரலில் இந்த பாடல் இப்பொழுது .... கேட்டு ரசியுங்கள்..
 பின்னூட்டம் அளிக்க மறந்து விடாதீர்கள் தோழர்களே....Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Vasamilla_Malaridhu-SPB.mp3

Vasamilla Malaridhu - SPB | Upload Music


பாடல் வரிகள்
வாசமில்லா மலரிது   ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


Lyrics in English

Vaasamillaa Malaridhu...(laughing)
Vasanthaththai Thaedudhu...
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Theduthu...
Vaigai Illaa Madhurai Idhu..Meenaakshiyai Thaedudhu..
Aedhaedho Raagam...Ennaalum Paadum
Azhaiyaadhaar Vaasal Thalai Vaiththu Odum...
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Thaedudhu...Paattukkoru Raagam Aetri Varum Pulavaa
Unakkaen Aasai Nilavaval Maelae
Meetti Varum Veenai Sottavillai Thaenai
Unakkaen Aasai Kalaimagal Polae...(Meetti Varum)
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Thaedudhu...

Enna Sugam Kandaai Indru Varai Thodarndhu
Unakkaen Aasai Rathiyaval Maelae
Vanji Aval Unnai Ennavillai Indrum
Unakkaen Aasai Manmadhan Polae...(Vanji Aval)
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Thaedudhu...
Maadhangalai Enna Pannirandu Varalaam
Unakkaen Aasai Maelondru Kootta
Maadhu Thannai Ariya Kannirandum Poyyae
Unakkaen Aasai Uravendru Naada...(Maadhu )
(Vaasamillaa)

Thursday, March 10, 2011

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

10 comments Write Commentsபடம்        :   மாதங்கள் ஏழு ( Mathangal ezhu )
பாடல்      
மணித்தூறல் போடும் மழைக்கால ( Manithooral Podum Mazhaikala)
பாடியவர்    :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை        :   வித்யாசாகர் 
வருடம்   :  
09-07-1993

இயக்குநர்    :  யூகி சேது
 தயாரிப்பாளர்        :   A.சுந்தரம்
பாடலாசிரியர்    :   வாலி
வசனம்            :   பாலகுமரன்
பதிப்பாளர்  :  
G.ஜெயசந்திரன்

படத்தொகுப்பு    :  நித்யன்
கலை        :  மோகனம்
நடிகர்கள்     Yogi sethu, Ramya Krishanan, Nazar, Poornam viswanathan, Manorama

இந்த பாடலின் ஒலி நாடாவையும்(MP3), படத்தின் தகவல்களையும் எனக்கு அளித்த திரு.விகாஷ் காம்ப்ளி(Vikas Kamble, Mumbai) அவர்களுக்கு என் முதல் நன்றி...

மனதை மயக்கும் ரம்மியமான இசைகலந்த பாடல்களை கேட்கும் போது அதற்கு என்ன விளக்கம், அதாங்க கருத்து  எழுதுவதென்றே புரியாது.
அப்படிப்பட்ட ரம்மையமான இசையோடு சேர்ந்து நம் பாடும் நிலாவின் குரல் சேர்ந்தால் என்ன செய்வது.
அப்படிதாங்க இந்த பாடலுக்கு நான் முழித்தேன். பாடலுக்கு கருத்து எழுத நினைத்தாலே பாடலும் பாடலின் இசையும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

யூகி சேது கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்றே இப்பாடலைக் கேட்டு படத்தின் தகவல்களை திரட்டும் போது தான் தெரிந்துகொண்டேன்.
அதோடு இப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார் என்பதும் அடுத்த ஆச்சரியம். படம் இயக்கும் அளவிற்கு அவர் திறமைவாய்ந்தவர் தான் என்றாலும் கதாநாயகன் என்பது அவரின் அதீத துனிச்சல்..
இப்பொழுதைய படங்களில் அவருடைய இணைக் கதாப்பாத்திரம் பலருக்குப் பிடித்தமான ஒன்று. அதுவும் அஜித் நடித்த அசல் படத்தின் காமெடியன் தோற்றம் அருமை.


Mani Thooral Podum-SPB-Mathangal ezhu | Upload Music


பாடல் வரிகள்SPB : மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே.....
ஆஆஆஆஆஆஆ.....
மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்


சரணம் 1

யார் எதற்கு மூலம் என்று
யாரும் சொல்லத்தான் சாத்தியம்...
வேர்இருக்கும் இருக்கமெல்லாம்
வேரைக் கண்களால் பார்த்திடும்...
ஆயிரம் செடி, கொடி, நாளும் காக்குது
யார் நடும் விதை, இதை, யாரைக் கேட்பது...
ஒரு தாய் எனைச் சுமந்தாள்...
அவள் தந்தை பேர் சொல்ல மறந்தால்...
இது என் தவறா... குளிர் காற்றே கூறு....

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்


சரணம் 2

மாளிகையோ மண் குடிலோ
ரெண்டும் சொந்தம் தான் எங்களுக்கு...
பூக்கடையோ சாக்கடையோ (சிரிப்பு)
வேதம் இல்லையே தென்றலுக்கு...
நான் அதன் இனம் என நாளும் வாழ்கிறேன்
காற்றென தினம் தினம் கானம் சொல்கிறேன்...
நடு வீதியில் நடப்பேன்...
வானம் பாடி போல் இசைப் படிப்பேன்...
மனம் போல் பிழைக்கும்.. ஒரு ஜீவன் நான் தான்...

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே.....Saturday, March 5, 2011

098- மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு

10 comments Write Comments


படம்        :   தாயம் ஒன்னு (Dhayam Onnu)
பாடல்       :  
மனதிலே ஒரு பாட்டு (Manadhile Oru Paatu)
பாடியவர்    :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை        :   இசைஞானி இளையராஜா 
வருடம்   :  
1988

இயக்குநர்    :  பீட்டர் செல்வகுமார்
நடிகர்கள்    
Arjun, Pallavi, NiroshaDownload This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Manadhile_Oru_Pattu.mp3

 அருமையான மெலோடி பாடல்..
அலுவலக பணி முடிந்து  நேற்று வீடு திரும்பும் பொழுது Hello FM(106.4)ல் இந்த பாடலை கேட்டேன்.. கேட்டவுடன் தெரிந்து கொண்டது பாடியவர் நம் பாலுஜியேதான் என்று.
குரலின் இனிமை அந்த பேருந்து பயணத்தின் களைப்பையும் மறக்கச் செய்துவிட்டது.

1988ம் வருடம் இசைஞானியின் இசையில் நம் பாலுஜி மற்றும் பி.சுசீலா அம்மாவின் குரலில் தாயம் ஒன்னு என்ற படத்துக்காக இந்த பாடல் பதியப்பட்டது.
பாடலின் இனிமை நம்மை ஒரு தனி உலகிற்கே கொண்டு சென்று விடுவது போல் தோன்றும்.

இனிமையாக நம் பாலுஜியின் குரல் தேன் போல் பாய்ந்து கொண்டிருக்கையில் முதல் சரணத்தின் இறுதியில் பி.சுசீலா அம்மாவின் குரல் கேட்டவுடன்
மயக்கத்தின் உச்சத்திற்கே சென்று விட்டது போல் தோன்றும்... நீங்களும் இப்பொழுது இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்...Manathile_Oru_Pattu | Online Karaoke

பாடல் வரிகள்மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோளம்..
விழி பூவும் மலரும் காலை நேரம்...
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

சரணம் 1

காற்று பூவோடு கூடும்
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்
பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இமைகளில் பல காலம்
இசைகளில் அது கூறும்
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

சரணம் 2

நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம் பூவே...
இசையிலே அழைத்தேனே...
இனைமைகள் தொடர்கதை.. இனி சோகம் ஏது சேரும் போது...

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோளம்..
விழி பூவும் மலரும் காலை நேரம்...
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டுVisitors of This Blog