படம் : ஆனந்த பைரவி ( Anandha Bhairavi )
பாடல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்.... ( Siriththal Andha Sirippil Oru Moham )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா
இசை : ஆர். ராமுஜம்
வருடம் : 1978
தயாரிப்பாளர் : மோகன் காந்திராம்
நடிகர்கள் : ரவிசந்திரன், ஸ்ரீ வித்யா கே. ஆர். விஜயா
Showing posts with label SPB With R.Ramujam (Music Director). Show all posts
Showing posts with label SPB With R.Ramujam (Music Director). Show all posts
Monday, August 2, 2010
068- சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் என்ற பாடலுக்கேற்ப பல சிரிப்புகளை இந்த பாடலில் நம் பாலுஜி சிரித்து அசத்தியிருப்பார்.
ரவிச்சந்திரனின் நடிப்பு மக அற்புதமாக இருக்கும் இந்த படத்தில். ஆனால் படத்தின் முடிவுதான் சிலருக்கு பிடிக்காமல் போனதென்னவோ உண்மை.
இந்த படத்தின் இயக்குனர் மட்டும் யார் என்று தெரியவில்லை..
அருமையான பாடலை நீங்களும் இங்கு கேட்டு மகிழுங்கள்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Sirithal_Antha_Siripil.mp3
Song Download Link : Sirithal_Antha_Siripil.mp3
பாடல் வரிகள்
SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
Susheela: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்
SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
Susheela: உங்களின் அன்பு நினைவினிலே
என் மனம் வாழும் உலகினிலே
கண்களின் ஜீவ ஒளியினிலே
சொர்கம் தோன்றுமோ
SPB: தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
Susheela: அத்தான்...
SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
SPB: குங்கும கோலம் முகத்தினிலே
மங்கள தாலி கழுத்தினிலே
சந்தண பேழை அழகினிலே
தெய்வம் மயங்குமோ
Susheela: காலமே ஓடி வா
காவியம் பாடி வா
காலமே ஓடி வா
காவியம் பாடி வா
Susheela: உயிரில்
SPB: ம்ம்
Susheela: உணர்வில்
SPB: ஓஓஓ
Susheela: கலந்தே
SPB: ஆஆஆ
Susheela: மகிழ்வோம்
Susheela: உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
SPB: அன்பே...
Susheela: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
SPB: கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
SPB & Susheela : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
Subscribe to:
Posts (Atom)


