இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Friday, July 16, 2010

043- அட நானாச்சு.. நீயாச்சு..


படம் :   அமைதிப் படை ( Amaithi Padai )  
பாடல் :   
அட நானாச்சு.. நீயாச்சு.. ( Ada Naan Aatchu )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1994
இயக்குநர் : மணிவன்னன் 
நடிகர்கள் :
Sathiyaraj, Ranjitha, Manivannan


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ada_Nanachu_Neeyachu.mp3


பாடல் வரிகள்




அட நானாச்சு.. நீயாச்சு..
உன்ன நா ஒரு கை பாக்காம விடமாட்டேன்...
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாக காட்டாம விட மாட்டேன்...
நீ செய்யும் ராஜாங்கம் அப்போது மாறிப்போகும்...
உன்னோட பேரெல்லாம் தன்னாலே நாறிப்போகும்....ஓஹோ..ஓஓ
அட நானாச்சு.. நீயாச்சு..
உன்ன நா ஒரு கை பாக்காம விடமாட்டேன்...
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாக காட்டாம விட மாட்டேன்...


சரணம் 1

எத்தனை பேர் வாயில நீ மண்ண இரைச்ச...
பாருங்கடா சாமி கேளுங்கடா கேள்வி...
எத்தனை பேர் தோட்டத்துல முள்ள விதச்ச...
பட்டியல போட்டு பாட வந்தேன் பாட்டு...
கையெழுத்த பொய்யெழுத்தா போடுவேன்...
அதில் கள்ளப் பணம் கொள்ளப் பணம் தேடுவேன்...
நல்லவன் போல் வேஷமும் தான் போடுவேன்...ஒரு
கூடு விட்டு கூடு என்று மாறுவேன்...
ஜாதகமே என்னிடம் 
இருக்கு இருக்கு இருக்குது
இப்போதே ஊரெல்லாம் சிரிக்குது...
எத்தனை நாள் ஆடுவே...
தகடு தகடு தகடுதான்...
எங்க தப்பி ஓடுவே..எனது தலைவரே....
பாட்டுலெ சொன்னத நாட்டுலே காட்டுவேன்...
சரியான சாப்பாடு ஜெயிலுலே...
அட நானாச்சு.. நீயாச்சு..
உன்ன நா ஒரு கை பாக்காம விடமாட்டேன்...
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாக காட்டாம விட மாட்டேன்...
நீ செய்யும் ராஜாங்கம் அப்போது மாறிப்போகும்...
உன்னோட பேரெல்லாம் தன்னாலே நாறிப்போகும்....அடடடா..ஹோய்..
அட நானாச்சு.. நீயாச்சு..
உன்ன நா ஒரு கை பாக்காம விடமாட்டேன்...
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாக காட்டாம விட மாட்டேன்...


சரணம் 2

ஹா..துட்டு வச்சு வெட்டி பந்தா பேட்டி உண்டுடா...
வீட்டுக்குள்ளே ஜாலி.. நாட்டுப் பணம் காலி...
ரோட்டுக்குன்னு போட்டு வச்ச காச எடுத்து...
கட்டினது வீடு..கைய வச்சு மூடு...
ஆதியிலே சோத்துக்குத்தா லாட்டரி...
பல கோடியிலே கட்டிக்கிட்டே ஃபேக்டரி...
வீதியிலே ஏழை மகன் நிக்குறான்...
இவன் வேலைக்கொரு ரேட்டு வச்சு விக்குறான்...
ஆளுக்கொரு கட்சிதான்
கொடியும் தடியும் பறக்குது...
வேளைக்கொரு கொள்கதான் உதிருது... 
நாளுக்கொரு போஸ்டருதான்
கலரு கலரு கலருதான்...
மைக்கு மட்டும் கிடைச்சுட்டா... உலருடா...
வெள்ளிக்காப்ப நா மாட்டுவேன்...ஜீப்புலதான் ஏத்துவேன்...
சரியான சாப்பாடு ஜெயிலுலே...
அட நானாச்சு.. நீயாச்சு..
உன்ன நா ஒரு கை பாக்காம விடமாட்டேன்...
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாக காட்டாம விட மாட்டேன்...
நீ செய்யும் ராஜாங்கம் அப்போது மாறிப்போகும்...
உன்னோட பேரெல்லாம் தன்னாலே நாறிப்போகும்....அடடடா..ஹோய்..
அட நானாச்சு.. நீயாச்சு..
உன்ன நா ஒரு கை பாக்காம விடமாட்டேன்...
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாக காட்டாம விட மாட்டே...ஏஏஏஏன்...


0 comments:

Post a Comment

Visitors of This Blog