இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Nijangal 1982. Show all posts
Showing posts with label Nijangal 1982. Show all posts

Thursday, October 21, 2010

094- உன் காதோடு காதொரு சேதி

2 comments
படம் :   நிஜங்கள் ( Nijangal )
பாடல் :   
உன் காதோடு காதொரு சேதி...... ( Unkaathodu Kathoru sethi )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், சைலஜா 
இசை :   எம்.பி.ஸ்ரீனிவாசன்
வருடம் : 1982
இயக்குநர் : K.S. சேதுமாதவன்
நடிகர்கள் :
சிவகுமார், சுமன், S.V. சேகர், மேனகா, தீபா, சோ
பாடலாசிரியர்: வாலி
வசனம் : வியட்நாம் வீடு சுந்தரம்















" நிஜங்கள் " 1982ல் வெளிவந்த திரைப்படம். படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்... அருமையான படமும் கூட.. 
இந்த படத்தை பற்றி எனது தந்தை மூலமாக தெரிந்து கொண்டேன்...

படத்தை K.S. சேதுமாதவன் இயக்கியுள்ளார். இந்த படம்தான் இசையமைப்பாளர்  எம்.பி.ஸ்ரீனிவாசனின் கடைசி தமிழ் படம்.
இது இவருக்கு கடைசி படமாக இருக்கும் என்று தெரியாமல் தானோ நம் பாலுஜியும் அவரது தங்கையும் இணைந்து இப்பாடலை ஒரு மிகப் பெரிய வெற்றி பாடலாக கொடுத்திருக்கிறார்கள்.

பாடலின் மயக்கம் நம்முள் ஏற்படுத்தும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.....





    Get this widget |     Track details  | eSnips Social DNA    



பாடல் வரிகள்


உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

கை சேர்த்தாலென்ன யார் பார்த்தாலென்ன
நான் பாராட்டும் பூந்தென்றலே

ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே

ஒரு நானமும் அச்சமும் நெஞ்சினில் மிஞ்சிடும் வேளையிலே

மனம் போராடுமோ இரு பூவாடுமோ

உனக்கும் எனக்கும் மயக்கும் கொடுக்கும் இளமை தான்

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்

மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு

இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு


உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே 




Tamil Blogs & Sites





Visitors of This Blog