இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, May 18, 2010

005 -மண்ணில் இந்தக் காதலன்றி ...

பாடல்        : மண்ணில் இந்தக் காதலன்றி ...
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் கேளடி கண்மனி.





பத்ம ஸ்ரீ Dr.SPB அவர்களின் வாழ் நாள் சாதனையாக இந்த பாடல் அமைந்தது என்றால் அது மிகையல்ல....
இந்த பாடலின் சரணம் மூச்சு விடாமல் பாடப்பட்டதல்ல என்று SPB ஒரு பேட்டியின் போதும் மற்றும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு இரவு இன்னிசை நிகழ்ச்சியிலும் தெரிவித்தார்.





மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா



வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த )

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா

(மண்ணில் இந்த )

2 comments:

Ezhilkumar K said...

really nice post & nice song
u done a good job
keep it up !

விஜய் மோகன் said...

பாலு அண்ணாவின் பாடல்கஈல் நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்...
இப்படியொரு பாடல் வேண்டும் என்று இளையராஜாவை இத்திரைப்படத்தின் இயக்குனர் கே.வசந்த் நச்சரித்ததாக SPB-யே ஜெயா டீவியில் வரும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் கூறினார்
அந்த எபிசோடில் வசந்த்தான் சிறப்பு விருந்தினர்...

அருமையான பாடல்..............

விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog