இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, May 24, 2010

012 - ஒரு துளி இரு துளி மழைத்துளி

படம் :   ஆச்சார்யா (Aacharya) 
பாடல் :   ஒரு துளி இரு துளி (Oru Thuli Iru Thuli  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்.
இசை :   ஸ்ரீ காந்தேவா
வருடம் : 2006
நடிகர்கள்  : Divya, Vignesh
இயக்குநர் : ரவி

Download This Song Please Click Below the Link

Song Download Link  :  Oru Thuli Iru Thuli.mp3
ஒரு துளி இரு துளி மழைத்துளி விழுந்தது
இவனது பாலைவனம் பூ பூக்க
இதுவரை இதுவரை விலகிய வாழ்க்கை
வாசலில் வந்து வரவேற்க்க
ஒரு துளி இரு துளி மழைத்துளி விழுந்தது
இவனது பாலைவனம் பூ பூக்க
இதுவரை இதுவரை விலகிய வாழ்க்கை
வாசலில் வந்து வரவேற்க்க
மனிதர்கள் இவனை நேசிக்க
முதல் முறை உதடுகள் புன்னகைக்க
மனிதர்கள் இவனை நேசிக்க
முதல் முறை உதடுகள் புன்னகைக்க
ஊருக்குள் அன்று இவன் வந்த போது
உறவென்று சொல்ல யாரும் இல்லை
ஊரே இன்று உறவாய் போனது
இவன் துணை இன்றி எதுவும் இல்லை
போர்களத்தில் தேரை ஆள்கிறான்
புரிந்து கொள்ள கீதை சொல்கிறான்
போர்களத்தில் தேரை ஆள்கிறான்
புரிந்து கொள்ள கீதை சொல்கிறான்


இரண்டாம் கருவறை இங்கே பார்க்கிறான் இவளும்
இன்னொரு தாய் அல்லவா
இது என்ன உறவு தோழி மட்டும் இல்லை
அதையும் தாண்டி வேறல்லவா
இரண்டாம் கருவரை இங்கே பார்க்கிறான் இவளும்
இன்னொரு தாய் அல்லவா
இது என்ன உறவு தோழி மட்டும் இல்லை
அதையும் தாண்டி வேறல்லவா
தாயுக்கு மகன் செய்யும் ஈமச்சடங்கினை
தாயே பார்ப்பது வியப்பல்லவா
தீண்டிய பொருளில் ரேகைகள் தேடி
தொலைவதும் ஒரு வித சுகமல்லவா
கரடு முரடு நெஞ்சில் நுழைகிறான்
கற்றுக் கொடுத்து ஆசான் ஆகிறான்
கரடு முரடு நெஞ்சில் நுழைகிறான்
கற்றுக் கொடுத்து ஆசான் ஆகிறான்
தெருவினில் தொலைத்ததை தெய்வத்தின் மடியில் பார்த்ததும் 
ஒரு வகை சந்தோஷம்
கரைகள் உடைந்து காட்டாற்றைப் போல் அன்பால் 
நிறையுது இவன் தேசம்
தெருவினில் தொலைத்ததை தெய்வத்தின் மடியில் பார்த்ததும் 
ஒரு வகை சந்தோஷம்
கரைகள் உடைந்து காட்டாற்றைப் போல் அன்பால் 
நிறையுது இவன் தேசம்
இருவர் மட்டும் வாழும் உலகிற்க்கு
கூட்டிச் செல்லுது இவள் நேசம்
இவனது வழியும்
இவனது மொழியும்
யுத்தக்களத்தில் இதிகாசம்
இந்த நொடிகள் நீண்டால் நல்லது
இறைவன் வந்து வாழும் இடம் இது
இந்த நொடிகள் நீண்டால் நல்லது
இறைவன் வந்து வாழும் இடம் இது
0 comments:

Post a Comment

Visitors of This Blog