இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, May 25, 2010

017 -தாமரைக் கொடி...தரையில்

படம் :   ஆனந்த கும்மி  (Anandha kummi) 
பாடல் :   தாமரைக் கொடி...தரையில் ...  ( Thamaraik Kodi...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை :   இளையராஜா 
வருடம் : 1983
இயக்குநர் : K.பாலசந்தர்


Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  : Thamarai kodi.mp3




தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...
தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...
உனை நாடி வாடினேன்...சுவர் ஏறி ஓடினேன்...
பலன் இல்லை என்பதால்...இன்று பாதை மாறினேன்...
தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...


சரணம் 1


காலை வேளை ஒரு கனவு வந்ததடி..உருகினேன்..
பாட நூலில் தினம் செல்வி துணை என்று..எழுதினேன்..
வீட்டுப் பூனை நான் வேங்கை போலவே மாறினேன்...
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்...
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே..ஹ ஹா..
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே...
அல்லி ராணி..அள்ள வா நீ...அர்ஜ்சுனன் நானே...
தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...
உனை நாடி வாடினேன்...சுவர் ஏறி ஓடினேன்...
பலன் இல்லை என்பதால்...இன்று பாதை மாறினேன்...
தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...


சரணம் 2


ஏ ஏ ஹோ ஹோ....
மூக்கின் மீது நிறம் மாறிப் போனதடி..கோபமோ...
என்னை மீறி ஒரு தந்தி வந்து விட..கூடுமோ...
பந்தம் உள்ளதில் சொந்தம் கொள்வதில் பாவமோ...
ஆசை கோபமாய் வேஷம் போடுது நியாயமோ...
லோகம் எங்குமே பனி தூங்கும் புல்வெளி...
பாடி வந்து நீ விளையாடு பைங்கிளி...
ஊடல் கொள்ள நேரம் இல்லை வரம் கொடு தோழி...ஹு..
தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...
உனை நாடி வாடினேன்...சுவர் ஏறி ஓடினேன்...
பலன் இல்லை என்பதால்...இன்று பாதை மாறினேன்...
தாமரைக் கொடி...தரையில் வந்ததெப்படி...
மல்லிகைக் கொடி...உந்தன் மனதில்என்னடி...

1 comments:

விஜய் மோகன் said...

அருமையான வரிகளை கொண்ட இந்த பாடல் இந்த திரைப்படல் என்று எனக்கு தெரியாது...
தகவலுக்கு நன்றி....

அருமையான பதிவு

விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog