இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, August 17, 2010

082- அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்


படம் :   நான் சொல்வதே சட்டம் ( Naan Solvathe Sattam )
பாடல் :   
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்...... ( Athi Kaalai Neram )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , திருமதி.ஆஷா போன்ஸ்லே 
இசை :   இசைஞானி இளையராஜா
வருடம் : 1988
நடிகர்கள் :
சரன்ராஜ்"நான் சொல்வதே சட்டம்" என்ற திரைப்படத்தில் "அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்" என்ற இனிமையான பாடலை நம் பாலுஜியுடன் இணைந்து திருமதி.ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிறார்கள். இந்த மாதிரியான அருமையான பாடலை யார் தந்திருக்க முடியும்... நம் இசைஞானியே தான்..... சிவரஞ்சனி ராகத்தில் ஒரு அருமையான மெலோடி பாடலை தந்திருக்கிறார்... 

ஆரம்ப ஹம்மிங்கை கேட்டால் ஏதோ தமிழ் பாடகிதான் பாடியிருக்கிறார் என்று என்ன வைக்கும்... மற்ற வரிகளிலும் அப்படித்தான்.. உற்று கவனித்தால் தான் தெரியும் பாடியவர் திருமதி.ஆஷா போன்ஸ்லே என்று.

இந்த படத்தில் இன்னும் இரண்டு பாடல்களை நம் பாலுவும் , ஆஷா போன்ஸ்லேவும் பாடியிருக்கிறார்கள்...  இன்னொரு பாடலை சித்ராவுடன் இணைந்து பாலுஜி பாடியிருக்கிறார்.. மிக விரைவில் அந்த பாடல்கள் பதியப்படும்....

அருமையான பாடல் .... கேட்டு மகிழுங்கள்.....


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Athikalai_Neram_Kanavinil.mp3

    Get this widget |     Track details  | eSnips Social DNA    


பாடல் வரிகள்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாழும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லலாஆஆஆஆஆ
லலலலா லலலலா லலாஆஆஆஆஆ


சரணம் 1

முல்லைப்பூவை மோதும் வெண் சங்குப்போல ஊதும்

காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் சேர்த்து

வீணைப்போல உன்னை கைமீட்டும் இந்த வேளை

நூறு ராகம் சேர்க்கும் நோயை கூட தீர்க்கும்

பாதி பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது

மீதம் இன்றி தந்தாள் உன்னை ஏற்றுக்கொண்ட மாது

தேவியை மேவிய தேவனே நீதான்

நீதரும் காதலில் வாழ்பவள் நான் தான்
நீயில்லாமல் நானும் இல்லையே ஏஏஏஏ

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாழும் இந்த அன்பிலே ஹோய்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்


சரணம் 2

மாலை ஒன்று சூடும் பொன்மேனியாகும் சூடு

மாதம் தேதி பார்த்து மனதை சொல்லி கேட்டு

வேளை வந்து சேறும் நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும்

காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சில் நீங்கும் தினம் அணலில் வெந்து வாடும்

வாடலும் கூடலும் மன்மதன் வேளை

வாழ்வது காதல் தான் பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தமல்லவோ ஓஓஓஓ

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லலாஆஆஆஆஆ
லலலலா லலலலா லலாஆஆஆஆஆ 3 comments:

anandhavalli said...

அருமையான பாடல் ... படத்தின் இயக்குநர் பெயர் என்க்கும் தெரியவில்லை....
தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்....

விஜய் மோகன் said...

இந்த பாடலை கேட்டதாக ஞாபகம் இல்லை...
பதிவிற்கு நன்றி

விஜய் மோகன்
சிங்கப்பூர்

நட்புடன் ஜமால் said...

அழகிய வரிகள்

அவர் குரலில் கேட்கையில் இன்னும் சுகமே

Post a Comment

Visitors of This Blog