இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, August 5, 2010

071- எனக்கொரு மகன் பிறப்பான் ........



படம் :   அண்ணனுக்கு ஜே. ( Annanuku Jay ) 
பாடல்
எனக்கொரு மகன் பிறப்பான்....... ( Enakkoru Magan ...)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை :   இளையராஜா  
வருடம் : 1989
இயக்குநர் : கங்கை அமரன்
நடிகர்கள் :
Arjun, Seetha, Pallavi


 
எனக்கொரு மகன் பிறப்பான்... என்று நம் மக்கள் திலகத்திற்காக T.M.சௌந்தரராஜன் ஐயா அவர்கள் வாலியின் வரியில் பணம் படைத்தவன் என்ற திரைப்படத்திற்காக அருமையாக பாடி இருப்பார்...
அதன் தக்கம் தானோ என்னன்வோ தெரியவில்லை ... நம் பாலுஜி இந்த பாடல் மூலம் அந்த குறையை தீர்த்துவத்து விட்டார்.
என்ன ஒரு அருமையாக ஒரு தந்தை தன் குழந்தையை பற்றி பாடும் நிலையை நம் பாலுஜி அருமையாக இங்கு பாடியிருப்பார்..

பாடலை கேட்டு மகிழுங்கள்............

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Enakoru_Magan_Pirapan.mp3

     Get this widget |     Track details  |         eSnips Social DNA   



பாடல் வரிகள்





எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்...
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக்குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக்கண்ணை திறப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்...
எனக்கொரு மகன் பிறப்பான்


சரணம் 1


கல்வியில் என் பிள்ளை கலைவானனோ
கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ
தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ
தேனிசைக் குழலூதும் சிறு கண்ணனோ
சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு நல்ல படி என்றும் வாழ்வான்
வெல்ல முடியாத வீரச் செருக்கோடு உள்ளத் துணிவோடு ஆழ்வான்
இல்லை எனும் வார்த்தை இல்லை
என்று செய்வான் என் பிள்ளை
தெள்ளத் தெளிவாக உள்ளக் கணிவாக திசை பல திசையிலும் இசை கடல் தின வலம் வர
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்...
எனக்கொரு மகன் பிறப்பான்




சரணம் 2


நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை
நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை
தாலாட்டவே நானும் தேவை இல்லை
தட்டாமல் கேட்பானே தாயின் ச்சொல்லை
இசையில் பல நாட்டை இழுத்து வசமாக்கும் இளைய ராஜாவைப் போலே
திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி ஏறி வருவானே மேலே
போற்றி நான் பெற்ற செல்வம்
மாற்றுக் குறையாத தங்கம்
ஏற்றுப் புகழ் மாலை சூட்டிப் புவி யாவும் ஜெயக் கொடி பறந்திட திருமகள் அருள் துணையுடன்


எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்...
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக்குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக்கண்ணை திறப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்...
எனக்கொரு மகன் பிறப்பான்



1 comments:

விஜய் மோகன் said...

கண்டிப்பாக அருண்... பாலு அண்ணா மற்ற பாடகர்கள் பாடி அவர் மனம் கவர்ந்த எத்தனையோ பாடல்களை தன் குரலால் பாடி வெளியிட்டிருக்கிறார்..

இந்த பாடலில் பாலு அண்ணாவின் குரலுக்கு ஒரு சலாம்

விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog