Friday, July 16, 2010
042- ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
படம் : அக்கரை பச்சை ( Akkarai Pachchai )
பாடல் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் (Oorgloam Poginra )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை : M S விஸ்வநாதன்
வருடம் : 1974
இயக்குநர் : S.P.முத்துராமன்
நடிகர்கள் : Sivaji Ganesan,Jayalalitha
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாலுவின் குரல் வளம் இப்படியும் இருக்குமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ஒரு பாடல்.. 1974-ல் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்காக சுசீலா அம்மாவுடன் இணைந்து பாடிய பாடல்...
ஆஹா..என்ன அருமை...
நீங்களும் கேட்டு மகிழுங்கள்...
Song Download Link : Orgolam_Pogindra.mp3
பாடல் வரிகள்
SPB : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
Suseela:ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
SPB : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
சரணம் 1
SPB : கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
Suseela:உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை
SPB : இது ஒரு வாழ்வு..இனிமையைக் காண...
இது ஒரு வாழ்வு..இனிமையைக் காண...
Suseela:அமைதியை நாடும்...இருவருக்காக
அமைதியை நாடும்...இருவருக்காக
தென்னையிலே கீற்று...மின்னலிடும் காற்று...
தென்னையிலே கீற்று...மின்னலிடும் காற்று...
SPB : கோவைவதைப் பார்த்து...கோவை ரசம் ஊற்று...
கோவை ரசம் ஊற்று...
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
Suseela:ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
சரணம் 2
SPB : பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வா...னம்
Suseela:ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ...டும்
SPB : நதியெனும் தேவி....
Suseela:ரகசியம் பேச....
SPB : நதியெனும் தேவி....
Suseela:ரகசியம் பேச....
SPB : மதனெனும் தேவன்....
Suseela:மடி விளையாட....
SPB & Suseela : நாதஸ்வரம் மேளம்... நதிகளிடும் தாளம்...
SPB & Suseela : நாதஸ்வரம் மேளம்... நதிகளிடும் தாளம்...
SPB & Suseela : தாலாட்டும் மேகம்...தாளவில்லை மோகம்...
Suseela:தாளவில்லை மோகம்...
SPB & Suseela : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான பாடலை இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி..
பாலுவின் குரல் வளத்தை இந்த பாடலில் கேட்டு சற்றே மெய்சிலிர்த்துவிட்டேன்..
பாலுவின் சிறந்த 100 பாடல்களில் இதுவும் ஒன்று (என்னுடைய ரேட்டிங் படி)
பாலு அண்ணாவின் குரலில் அந்த ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் சற்று நின்று இந்த பாடலைக் கேட்டு உலகமெங்கும் இருப்பவர்களுக்கு கூறியிருக்கும்
அவரது குரலின் இனிமையை...
அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி அருண்
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment