தன் வானத்தை தேடுது ஒரு நிலவு..
அது வருமோ வாராதோ..
தன் கானத்தை தேடுது ஒரு வீணை..
அது வருமோ வாராதோ..
ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
மாமன் மகன் இல்லை..மாலையிடச் சொல்ல...
மாமன் மகன் இல்லை..மாலையிடச் சொல்ல...
அத்தை மகன் இல்லை...அன்பு மனம் கொள்ள..
அத்தை மகன் இல்லை...அன்பு மனம் கொள்ள..
காலம் வரும் என்று...காத்திருக்கும் என்று...
ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
மூன்று கனி ஒன்றாய்..மூடி வைத்த தேகம்...
பாவலர்கள் பார்த்து பாடி வைத்த ராகம்...
என் சிங்காரம் என்றெந்த சங்கீதம் எல்லோர்க்கும் சந்தோஷம் உண்டாக்கலாம்...
என் மோகங்கள் ஆனந்த லோகத்தில் சந்திக்கும் யோகத்தை உண்டாக்கலாம்...
என் உள்ளத்தில் அன்றாடம் உண்டாகும் போராட்டம் யார் கண்டதோ...
ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
ஆஆஆஆஆஆஆஆஅ.....ஆஆஆஆஆஆஆஅஅஅ....
உயரத்தில் உட்கார்ந்து... ஒருவன் எழுதுகின்றான்...
எழுதி வைத்த நாடகத்தில்.. எல்லோரும் நடிக்கின்றோம்...
நடித்து முடித்த பின்னர்.. வேடத்தை கலைக்கின்றோம்...
வேடத்தை கலைத்தவுடன்.. பாடத்தை மறக்கின்றோம்...
கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம்...
யாராலே இன்று ஊர் சேரக்கூடும்...
கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம்...
யாராலே இன்று ஊர் சேரக்கூடும்...
நீயாடும் போது நான் ஆடக் கண்டேன்...
உன் கண்ணில்..ஏ .. பொன் நிழல் ஆடக் கண்டேன்...
என் புண்ணான நெஞ்சத்தை கண்ணான கண்னே உன் கை கொண்டு தாலாட்ட வா...
என் உள்ளத்தை என்றென்னும் வெள்ளத்தில் என்னாளும் ஓயாமல் நீராட்டவா..
நீ நஞ்சள்ளித் தந்தாலும்.. தேன் நஞ்சள்ளித் தந்தாலும்..நான் உண்ணுவேன்...அ..ஹா..
நா ந ந நா.. நா ந ந நா..
நா ந ந நா.. நா ந ந நா..
ஒ...ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
0 comments:
Post a Comment