Sunday, July 18, 2010
046- ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
படம் : அம்மன் அருள் ( Amman Arul )
பாடல் : ஒன்றே ஒன்று நீ தர வேண்டும். ( Ondre Ondru Nee )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை : சங்கர் கணேக்ஷ்
வருடம் : 1973
இயக்குநர் : பட்டு
நடிகர்கள் : A.V.M. Rajan, Lakshmi, V.K. Ramasamy
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Ondre_Ondru_Nee.mp3
பாடல் வரிகள்
SPB :ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
Susheela:இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான்தானே
SPB :ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
சரணம் 1
SPB :பட்டுத் தளிர்க் கொடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும்.. சிந்து...
Susheela:புன்னை மர நிழலில் சின்னஞ்ச்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள்.. தந்து...
SPB :ஓடை நீரில் வாழை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
Susheela:ஓடும் தென்றல் பூவைப் பார்த்து
கூறும் கதைகள் என்னென்ன
SPB :ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
சரணம் 2
Susheela:உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம்.. கண்ணா...
SPB :இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம்.. ஒண்ணா...
Susheela:நாளில் ஒன்று நாணம் என்று
பெண் மனம் கொஞ்சம் அஞ்ச்சுவதென்னென்ன
SPB :அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து..
SPB :ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
Susheela:ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
SPB :ஏஏஏஏஏஎஎஎஎ
Susheela:ஆஆஆஆஆஆ
SPB :ஏஏஏஏஎஎஎஎ
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒன்றல்ல நூறல்ல... எத்தனை பத்தாயிரம் பாடல்கள் தந்தாலும் எங்களால் பாலு அண்ணாவிற்கு கொடுக்க ஏதும் இல்லை...
அருமையான பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி அருண்
Post a Comment