Sunday, July 18, 2010
048- புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா.
படம் : அமராவதி ( Amaravathi )
பாடல் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா.. ( puththam pudhu malarae )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : பால பாரதி
வருடம் : 1993
இயக்குநர் : செல்வா
நடிகர்கள் : Ajith Kumar, Sanghavi
பாடலாசிரியர் : வைரமுத்து
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Putham_Pudhu_Malare.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
சரணம் 1
செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலைவார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
சரணம் 2
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூ..ங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும்
கை-ஒடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
பாலு அண்ணாவின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று... என்ன ஒரு இனிமையான குரல்...
நம் கண்களை தழுவிச் செல்லும் இனிய காற்றாக இந்த பாடல் உலா வந்தது
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment