அட கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்ட சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டதப்போல்
சுண்டிச் சுண்டி வந்திழுக்கும்
கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
ஒரு சிங்கார பூங்கொடிக்கு
ஒரு சித்தாடை தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
சிறு வெள்ளி கொளுசெதுக்கு
கண்ணாலே சம்மத சொன்னா
கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணனுமின்ன வெக்கப்படுவா
வேறேதும் சங்கடமிள்ளே சங்கதியெல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டி புடிப்பா
வெட்ட வெளியில் அய்யய்யோ
ஒரு மெத்த விரிச்சேன் அயயாவ்
மொட்டு மலர தொட்டு பரிச்சேன்
மெல்ல சிரிச்சா
கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
அடி முக்காலும் காலும் ஒன்னு..
அடி உன்னோட நானும் ஒன்னு...
அடி என்னோட வாடி பொண்ணு
சிறு செம்மீன போல கண்ணு
ஓய் ஒன்னாக கும்மி அடிப்போம்
ஒத்து உழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக உம்மனச கொள்ளை அடிப்பேன்
கல்யாண பந்தள கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதெல்லாம் செய்ஞ்சு முடிப்போம்
தங்க குடமே புது நந்த வனமே
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்ப சுகமே
அட கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்த
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும்
அண்ணனோட பச்சைக்கிளி அது பறந்து வந்தா
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்ட சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டதப்போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
1 comments:
கடை வீதி மட்டும் அல்ல அருண் அண்ணா.. இந்த உலக வீதியே நம் பாலுஜியின் குரலுக்கு பல தடவை கல கலத்து போய் விடும்...
அதுவும் இந்த பாட்டைக் கேட்டால் சொல்லவே வேண்டாம்..
அண்ணா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.. இந்த படத்தை நாம் சற்று மாதங்களுக்கு( 8 மாதம் என்று நினைவு.. சரிதானா அண்ணா ? ) முன்னர் அத்தை வேட்டில் பார்த்தோம் ..அதுவும் இரவு 12 மணிக்கு அப்புறம்..
அந்த விடுமுறையை என்னால் மறக்கவே முடியாது...
அடுத்த விடுமுறைக்காக காத்திருக்கின்றேன் அண்ணா.
அன்புடன்
சத்யா
Post a Comment