காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதமும்...காதல் சந்தோஷமும்...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
சரணம் 1
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...
லாலா..லாலா..லலா...
மதன் உட்காரும் சிம்மாசனம்...
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...
மதன் உட்காரும் சிம்மாசனம்...
வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது...
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...
மலர் மஞ்சத்தின் ஆராதனை....
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...
மலர் மஞ்சத்தின் ஆராதனை....
பூ மேனி தான் தேவாலயம்...
பார்த்தால் இது தேஜோ மயம்...
வேறேது சொல் ஞானோதயம்..
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதம்...காதல் சந்தோஷம்...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் ஆனந்த வைபோகமே...
சரணம் 2
காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்...
கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்...
ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு
காதல் அது என் கண்ணில் தென்பட்டது...
எந்தன் கைதொட்டு மெய்தொட்டது...
நீரோட்டம் நான்... பூந்தோட்டம் நீ..
தேரோட்டம் நான்... தெய்வீகம் நீ...
நீங்காமல் நாம் உறவாடலாம்...
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
1 comments:
பாலு அண்ணாவின் குரலில் அந்த காதல் என்ற மூன்றெழுத்து மட்டும் அல்ல உலக மொழிகளின் எழுத்தெல்லாம் இனிக்கும்....
அருமையான பாடல்
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment