இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, February 27, 2012

109- ராக்கால வேளையில... ராசா நீ வாடயில...படம் :   மைதிலி என்னை காதலி (Maithili Ennai Kadhali)
பாடல் :  
ராக்கால வேளையில...ராசா நீ வாடயில... (Rakkala Veliyila)
பாடியவர்கள் :    பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம் , ஜானகியம்மா
இசை :   திரு.டி.ஆர்.விஜய ராஜேந்திரர் 
வருடம் : 1986
இயக்குநர் :
திரு.டி.ஆர்.விஜய ராஜேந்திரர் 
நடிகர்கள் :
திரு.டி.ஆர்.விஜய ராஜேந்திரர் , அமலா

அட உங்க கோபம் எனக்கு புரியுதுங்க... உங்களோட வேலைக்கு நடுவுளையும் நம் பாலுஜிக்காக உருவாக்கப்பட்ட இந்த தளத்தை எத்தனை தடவ வந்து பாத்திருப்பீங்க.. எந்த ஒரு புதுப் பதிவும் இல்லாம என்ன கொஞ்சம்  திட்டி கூட இருப்பீங்க இல்லையா.. அட விடுங்க பாஸ்.. ஊருக்குள்ள நம்மள பத்திக் கேட்டுப்பாருங்க..
நாங்க அசிங்கப்படாத இடமே இல்ல...

நம்ம பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும்... ரொம்ப நாளாச்சே.. என்ன பாடல் பதியாலாம் என்று கடந்த வாரம் சனிக்கிழமை ரேடியோ மிர்சி எப்.எம்-ஐ டியூன் பண்ணிய போது இந்த பாடலை கேட்டேன்... கேட்டவுடன் நம் பாலுஜிதான் என்று உள்ளம் ஒரு படபடப்புடன் ரசிக்க தொடங்க, அடடா யாருடையது
இந்த பெண் குரல் ? ஒருவேளை ஜானகி அம்மா இப்படி ஏதாவது வித்தியாசமாக பாடியிருப்பாரோ என்று அருகில் இருந்த
என் அண்ணணிடம் கேட்க , ஒருவேளை இல்ல.. இது ஜானகி அம்மாவின் குரலே என்று அவன் சொல்லி முடிக்கவும்,
நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடல் பற்றிய தகவல்களைக் கொடுத்துவிட்டார்..

1986-ம் வருடம்  திரு.டி.ஆர். ராஜேந்திரர் அவர்களின் இயக்கத்தில் அவரே இசையமைத்த படம் தான் “ மைதிலி என்னை காதலி ”. திரு.டி.ஆர். ராஜேந்திரர் அவர்களும் நம்முடைய அமலாவும் இணைந்து நடித்த இந்த படத்தில்தான் இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது..
ஒரு கிலு கிலுப்பான பாடல் என்றே சொல்லலாம்.. நம் பாலுஜிக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன ? இந்த பாடலை எவ்வாறு பாடுவது என்று..?
அவருக்கே உரிய தனி பானியில் கொஞ்சும் சுவையும் கொடுத்து அழகாக பாடியிருப்பார்.

உங்கலுக்காக இதோ அந்த பாடல்... கேட்டு ரசியுங்கள் அன்பர்களே......

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Rakkala_Velaiyila_Maithili_Ennai_Kathali_SPB,Janaki.mp3
 
 
 
 

Rakala_Velaiyila_Maithili Ennai kathali_SPB,Janaki | Online Karaoke
 
 
 
பாடல் வரிகள்


SPB : 
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில

இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது....அஹ்
இதம் தேடி போராடுது

ராக்கால வேளையிலே என்
ராசாத்தி ஆடையிலே
என் மேனி சூடாகுது
எத தேடி போறாடுது
ஏய்..ஏய்..ஏய்..ஏய்ய்.....ஏய்.ஏய்.ஏய்
ஆ..அட..ஓ..அட..ம்ம்..அட..ஏ.....ஹோ. ஹோ. ஹோ. ஹோ

தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ...ஹா..ஆ
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோ.வ்வ்..

ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
என் மேனி சூடாகுது
எத தேடி போறாடுது

ஹே...தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ..ஆ..ஆஅ
ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோ வ்வ்

அடி ராக்கால வேளையிலே
என் ராசாத்தி நீ ஆடையிலே
இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது

ராக்கால வேளையிலே
என் ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது
ஹ எத தேடி போராடுது

 


1 comments:

மதுரை பாண்டி said...

வாங்க அருண்... ரொம்ப நாட்களுக்கு பிறகு பதிவிட்டிருக்கிறீர்கள்..
அருமையான பாடல்.. பாலுஜியின் இந்த மாதிரியான
பாடல்களுக்கென்றே ஒரு தனி பட்டாளம் இருக்கிறது..

அன்புடன்.,
மதுரை பாண்டி

Post a Comment

Visitors of This Blog