இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, September 20, 2010

090- அழகே உன் பெயர் தானோ

படம் :   இறைவன் இருக்கின்றான் ( Iraivan Irukkindraan )
பாடல் :   
அழகே உன் பெயர் தானோ ( azhage un peyar thaanoo )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   சங்கர் கனேஷ்
வருடம் : 26-Jun-1973
இயக்குநர் : எச்.எஸ்.வேணு
நடிகர்கள் :
ஜெய்சங்கர், ஜெயா
வசனம் : V.C. குகநாதன்
“இறைவன் இருக்கின்றான்” என்ற திரைப்படத்தில் ”அழகே உன் பெயர் தானோ” என்ற இந்த பாடலை நம் பாலுஜியும் பி.சுசீலா அம்மாவும் இணைந்து பாடினார்கள்...   திரு. சங்கர் கனேஷ் அவர்களின் இசையமைப்பில் 1973ம் வருடம் இப்படம் வெளியானது.
”அழகே உன் பெயர் தானோ” என்ற வரிகளை பாலுஜி பாட ஆரம்பிக்கும் பொழுதே மனது மயங்க ஆரம்பித்துவிடும்.. பிறகு எங்குட்டு பாடலை கவனிக்க.... 


நானும் பல தடவை கேட்டு விட்டேன் முழு பாடலையும் முழு மனதோடு ரசிக்க முடியவில்லை... பாதியிலேயே எங்கோ மேகத்தில் பறப்பது போல இருக்கும்...


அப்படிப்பட்ட பாடல் இப்போது நமக்காக இங்கு......


    Get this widget |     Track details  | eSnips Social DNA    பாடல் வரிகள்

அழகே உன் பெயர் தானோ
அமுதே உன் மொழி தானோ
அழகே உன் பெயர் தானோ
அமுதே உன் மொழி தானோ


நடந்தால் சிந்துக் கவியோ
நடந்தால் சிந்துக் கவியோ
நீ அருந்தேன் தந்த சுவையோஓஓ


தலைவா என்றது நெஞம்
தனியே நின்றது கொஞ்சம்
தலைவா என்றது நெஞம்
தனியே நின்றது கொஞ்சம்
இது தான் பெண்ணின் மனசோ
இது தான் பெண்ணின் மனசோஓஓ
இதில் இயற்க்கை தந்த குணமோஓஓ


அழகே உன் பெயர் தானோ


பொன் பார்த்து மயங்கும்
உன் மேனி அழகை
கண்டாலும் போதை தரும்


என் கையோடு குழுங்கும்
சங்கீத வளையல்
ரீங்காரம் பாடி வரும்


கம்பன் எங்கு இருந்தான்
அவன் உன்னை அறிந்தான்


மனம் என்னென்ன பாட நினைக்கும்
அதை எங்கெங்கு பாட அழைக்கும்


தலைவா என்றது நெஞம்
தனியே நின்றது கொஞ்சம்


அழகே உன் பெயர் தானோ


நில் என்று நிறுத்தி உன்னை
சில் என்று தழுவி பாடும் ராகமும் என்ன


புன்னகை இதழ் விரித்து
மல்லிகை சரம் தொடுத்து
பார்த்தால் கோலங்கள் என்ன


மல்லிப்பூ உடலோ அன்னத்தின் சிறகோ


பிள்ளைப்போல் மழலை பேசுவதோ


அழகே உன் பெயர் தானோ
அமுதே உன் மொழி தானோ 
Tamil Blogs & Sites

0 comments:

Post a Comment

Visitors of This Blog