இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, March 27, 2011

101- ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும் படம் :   மக்கள் என் பக்கம் ( Makkal En Pakkam )
பாடல் :  
ஆண்டவனை பார்க்கணும் ( Andavana Paarkanum )

பாடலாசிரியர் :   வைரமுத்து
பாடியவர் :   பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   சந்திர போஸ்
வருடம் : 14-04-1987
இயக்குநர் : கார்த்திக் ரகுநாத்
 

வசனம்            :   A.L.நாராயனன்
படத்தொகுப்பு   :  வாசு

கலை        :  தங்கப்பன்
தயாரிப்பாளர்     :   சுரேஷ் பாலாஜி
நடிகர்கள் : சத்யராஜ், அம்பிகா, ரகுவரன், மனோரம்மா, டெல்லி கனேஷ் மற்றும் பலர் 

நூறாவது பதிவுக்கு பிறகு என்ன பாடல் என்று நேயர்கள் கேட்கத்தொடங்கி விட்டனர்...

1987ம் வருடம் கார்த்திக் ரகுநாத் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ”மக்கள் என் பக்கம்” படத்தில் நம் பாலுஜி பாடிய இந்த பாடல் நேயர்களுக்காக இப்பொழுது...

படத்தின் கதை என்னவென்று எனக்கு தெரியவில்லை... ஆனால் இந்த பாடல் சத்யராஜ் குடித்து விட்டு மாளிகையில் பாடுவது போல் படமாக்கியிருக்கிறார்கள்..
குடித்துவிட்டு பாடுவது போன்ற பாடல் என்றாலே கையில் ஒரு பாட்டில் இருப்பது இயக்குநர்களின் முத்திரை போலும்....

வைரமுத்துவின் வரி பாடலுக்கு தனி அழகை தந்திருக்கிறது.... சந்திர போஸ் அவர்களின் இசை பாடலுக்கு முழு உயிரையும் அளித்திருக்கிறது.

போதை பாடல்களிலும் ஒரு தூக்கலுடன் நம் பாலுஜிக்கே உரித்தான அந்த சிரிப்பும் இந்த பாடலில் உள்ளது தனிச் சிறப்பு...

பாடலை கேட்டு ரசியுங்கள் அன்பர்களே.....


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Andavana_Parkanum-SPB.mp3Andavana Paarkanum | Upload Music

பாடல் ஒளிக்கோப்பு
பாடல் வரிகள்SPB : ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..(சிரிப்பு)


சரணம் 1

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல.ஸ்
பூவுக்கு அடிமை பதினாரு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல..
அடிமைகளா பொறந்துவிட்டோம்
அத மட்டும் தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  ஆ..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..


சரணம் 2


காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  டேய்ய்ய்..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா......7 comments:

சோஷபனா said...

பாடல் பகிற்விற்கு மிக்க நன்றி...
படங்களின் தகவல்களை அறிய வசதியாக இருக்கிறது.. தகவல்களுக்கு மிக்க நன்றி...


வாழ்த்துக்களுடன்,
சோஷபனா

Sampath said...

அருமையான பாடல்... பாடலில் பாலுஜியின் குரலில் உண்மையிலேயே ஒரு போதை இருப்பதை உணரமுடிகிறது.

அரசன் said...

super boss ...
nalla pagirvukku nandri ...

Arun Kumar N said...

@ஷோபனா மேடம்,
தகவல்கள் அணைத்தும் இணையத்தில் கிடக்கின்றன... நான் அதை தொகுத்து மட்டும்தான் தருகிறேன்..


@ சம்பத் சார்,
வருகைக்கு மிக்க நன்றி... பாலுஜியின் குரலில் என்ன தான் இல்லை... எந்த பாடலை பாடைனாலும் அதற்கேற்ற பாவத்தை தன் குரலில் கொண்டு வருவது
அவரது இசை ஆர்வத்தை வெளிக்கொணர்கிறது...

Arun Kumar N said...

@ அரசன் நண்பரே,
தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.. தங்களை தளத்தின் பின்னூட்டவாதியாக இணைத்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி..

இது போன்ற அருமையான பாடல்கள் அணைத்தும் விரைவில் பதியப்படும்... உங்களின் ஆதரவு இது போல் அணைத்து பதிவுகளுக்கும் தருமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

தங்களை இந்த தளத்திற்கும் எனக்கும் அறிமுகப் படுத்திய தமிழ்தோட்டத்திற்கு மிக்க நன்றி...

அன்புடன் ,
மதுரை அருண்

Hemalakshmi said...

மூங்கினிலே பாட்டிசைத்து ........படம் ராகம் தேடும் பல்லவி பாடல் வேணுமே அருண்.....

Arun Kumar N said...

@Hemalakshmi மேடம்,

கண்டிப்பாக உங்களின் விருப்ப பாடல் அடுத்த பதிவாக பதியப்படும்....

அன்புடன்
மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog