இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, March 5, 2011

098- மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு

10 comments


படம்        :   தாயம் ஒன்னு (Dhayam Onnu)
பாடல்       :  
மனதிலே ஒரு பாட்டு (Manadhile Oru Paatu)
பாடியவர்    :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை        :   இசைஞானி இளையராஜா 
வருடம்   :  
1988

இயக்குநர்    :  பீட்டர் செல்வகுமார்
நடிகர்கள்    
Arjun, Pallavi, Nirosha



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Manadhile_Oru_Pattu.mp3

 அருமையான மெலோடி பாடல்..
அலுவலக பணி முடிந்து  நேற்று வீடு திரும்பும் பொழுது Hello FM(106.4)ல் இந்த பாடலை கேட்டேன்.. கேட்டவுடன் தெரிந்து கொண்டது பாடியவர் நம் பாலுஜியேதான் என்று.
குரலின் இனிமை அந்த பேருந்து பயணத்தின் களைப்பையும் மறக்கச் செய்துவிட்டது.

1988ம் வருடம் இசைஞானியின் இசையில் நம் பாலுஜி மற்றும் பி.சுசீலா அம்மாவின் குரலில் தாயம் ஒன்னு என்ற படத்துக்காக இந்த பாடல் பதியப்பட்டது.
பாடலின் இனிமை நம்மை ஒரு தனி உலகிற்கே கொண்டு சென்று விடுவது போல் தோன்றும்.

இனிமையாக நம் பாலுஜியின் குரல் தேன் போல் பாய்ந்து கொண்டிருக்கையில் முதல் சரணத்தின் இறுதியில் பி.சுசீலா அம்மாவின் குரல் கேட்டவுடன்
மயக்கத்தின் உச்சத்திற்கே சென்று விட்டது போல் தோன்றும்... நீங்களும் இப்பொழுது இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்...



Manathile_Oru_Pattu | Online Karaoke

பாடல் வரிகள்



மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோளம்..
விழி பூவும் மலரும் காலை நேரம்...
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

சரணம் 1

காற்று பூவோடு கூடும்
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்
பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இமைகளில் பல காலம்
இசைகளில் அது கூறும்
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

சரணம் 2

நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம் பூவே...
இசையிலே அழைத்தேனே...
இனைமைகள் தொடர்கதை.. இனி சோகம் ஏது சேரும் போது...

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோளம்..
விழி பூவும் மலரும் காலை நேரம்...
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு



Visitors of This Blog