இந்த தளத்தின் ஒவ்வொரு பதிவிற்கும் வந்து தனது கருத்தையும் முழு ஆதரவையும்(சத்தியமா அவர் பொட்டி எதுவும் வாங்கல.. நானும் எதுவும் கொடுக்கல.. நம்புங்க மக்களே...) தந்து கொண்டிருக்கும்
ஹேமாலெஷ்மி மேடத்தின் விருப்ப பாடலாக இந்த பாடலை பதிகிறேன்....
1982ம் ஆண்டு திரு.விஜய T.ராஜேந்தர் அவரின் இயக்கத்தில் வெளியான படம் ”ராகம் தேடும் பல்லவி”.
Friday, April 1, 2011
102- மூங்கினிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்
படம் : ராகம் தேடும் பல்லவி ( ragam thedum pallavi )
பாடல் : மூங்கினிலே பாட்டிசைக்கும் ( moonginile paattisaikkum )
பாடியவர் : பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை : திரு.விஜய T.ராஜேந்தர்
இயக்குநர் : திரு.விஜய T.ராஜேந்தர்
பாடலாசிரியர் : திரு.விஜய T.ராஜேந்தர்
வருடம் : 12-03-1982
நடிகர்கள் : சங்கர், ரூபா மற்றும் பலர்
தயாரிப்பு : N.பாலகிருஷ்ணன்
எடிட்டிங் : தேவராஜன்
போட்டோகிராபி : A. சோமசுந்தரம்
இந்த தளத்தில் சற்றைய தினங்களுக்கு முன் பதிந்த என் 100வது பதிப்பான ”வாசமில்லா மலரிது..வசந்தத்தைத் தேடுது” என்ற பாடல் ”ஒரு தலை ராகம்” என்ற படத்தில் நடித்த கதாநாயகன் சங்கர் தான் இந்த படத்திலும் கதாநாயகன்.. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் திரு.விஜய T.ராஜேந்தர் மீண்டும் அவரை வைத்து ”ராகம் தேடும் பல்லவி” என்ற படத்தை இயக்கினார்.. படமும் அமோக வெற்றி பெற்றது...
இயக்குனர்,தயாரிப்பாளர், வசனகர்ததா, நடிகர், இசையமப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய திரு. விஜய் டி.ராஜேந்தர் இசையில்
நமது பாலுஜி பாடிய ஒரு அருமையான மெலோடி பாடல்..
குத்து பாடல்கள் மட்டுமல்லாமல் ஒரு மெலோடி பாடலிலும் தனது ஏற்ற இறக்க பேச்சு நடையை திரு.விஜய T.ராஜேந்தர் அழகாக வடிவமைக்கும் திறன் படைத்தவர்..
இந்த பாடலில் நம் பாலுஜியின் குரலில் மென்மையான ரிதத்தை உணர முடியும்....
பாடலின் இரண்டு சரணங்களும் முடியும் வரியில் திரு.விஜய T.ராஜேந்தரையா அல்லது பாடும் நிலா பாலுஜியை பாராட்டுவதா என்று மனதிற்கு புரியவில்லை..
இருவரும் செய்த ஜாலத்தில் மனம் மயங்கியதால்தான் இந்த குழப்பம்...
// மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது
ஹை ஹை ஹை ஹைய்ய்
அவள் வரம் தரவே செந்நிறமானது //
இந்த வரிகளை உண்ணிப்பாக கேட்டுப் பாருங்கள்.. முதல் சரணத்தின் ரிதத்திதிற்கும் இதற்கும் சற்று சிறிய வித்தியாசத்தி இந்த வரிகளில் நம் பாலுஜி
கொடுத்திருப்பார்...
அருமையான பாடலை விருப்பமாக கேட்டதற்கு ஹேமாலெஷ்மி மேடத்திற்கு என் நன்றிகள்...
பாடலின் கிடார் இசை மற்றும் அருமையான வயோலின் இசையோடு கலந்து நம் பாலுஜியின் குரலைக் கேட்கும் போது அந்த பௌர்னமியை ரசிக்க யாருக்குத்தான் மனம் வரும்...?
அப்படிப்பட்ட அருமையான மெலோடி பாடலை இப்பொழுது கேட்டு ரசியுங்கள்....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Moonginile_Pattisaikkum.mp3

Subscribe to:
Posts (Atom)