இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, August 17, 2010

081- நண்பனே எனது உயிர் நண்பனே



படம் :   சட்டம் ( Sattam ) 
பாடல் :   
நண்பனே எனது உயிர் நண்பனே..... ( Nanbane Enathuyir Nanbane )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , மலேசியா வாசுதேவன்
இசை :   கங்கை அமரன் 
வருடம் : 21 May 1983
இயக்குநர் : K. விஜயன்
நடிகர்கள் :
கமல் ஹாசன், மாதவி, சரத் பாபு
தயாரிப்பு :  சுஜாதா சினி ஆர்ட்ஷ்










1983ம் வருடம் கங்கை அமரன் இசையமைப்பில் வெளியான "சட்டம்" என்ற திரைப்பட்த்தில் இடம் பெற்ற இப்பாடலை நம் பாலுஜியும், மலேசியா வாசுதேவன் அவர்களும் இணைந்து பாடியிருக்கிறார்கள்...


பாடலின் முதல் வரியிலேயே இது எந்த வகை ரகம் என்பது புரிந்து விடும்... நண்பன் மற்றும் நட்பின் உறவை எடுத்துரைக்கும் இப்பாடல் பலரது விருப்பம்... இரண்டு நண்பர்கள் பாடும் இப்பாடலின் வரிகளும் அற்புதமான ஒன்று...


இப்படத்தில் இன்னொரு பாடலையும் பாலுஜியும், மலேசியா வாசுதேவன் அவர்கள் இணைந்து பாடியிருக்கிறார்கள்... இப்படத்தில் வரும் அணைத்து பாடல்களையுமே நம் பாலுஜிதான் பாடியிருக்கிறார்...


இந்த பாடலை இப்போது கேளுங்கள்... மற்ற பாடல்கள் விரைவில் பதியப்படும்...






Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Nanbaney_Enthuyir_Nanbane.mp3





    Get this widget |     Track details  | eSnips Social DNA    




பாடல் வரிகள்





நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சாலடும்
இரு மலர்கள் நீயும் நாணும்
பிரியாமல் நாம் உறவாடலாம்

ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ

இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஒசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை ஹேய்.. ஹேய்..

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
நண்பனே எனது உயிர் நண்பனே

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றாய்
அதற்காக நான் வழக்காடுவேன்

யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்

எனது மனமும் எனது னினைவும்
உனது வாசமே

நமக்கு யேது பிரித்து பார்க்க
இரண்டு மனமே ஹேய்.. ஹேய்..

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது



1 comments:

Unknown said...

நண்பர்களின் பயனப் பாடல் அருமையாக இருந்தது.. பழைய நினைவுகள் சட்டென்று வந்து சென்றது....
பதிவிற்கு நன்றி

Post a Comment

Visitors of This Blog