Sunday, August 8, 2010
077- காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ..
படம் : அன்புள்ள மலரே ( Anbulla Malare )
பாடல் : காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ...... ( Kaadhal Thegangal )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலாம்மா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : B.R.ரவி சங்கர்
நடிகர்கள் : சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யா
பாடல் : காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ...... ( Kaadhal Thegangal )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலாம்மா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : B.R.ரவி சங்கர்
நடிகர்கள் : சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யா
பாடலாசிரியர்: வைரமுத்து
சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் B.R.ரவி சங்கர் இயக்கத்தில் 1984ம் வருடம் ”அன்புள்ள மலரே” என்ற திரைப்படம் மே மாதம் வெளிவந்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் நம் பாலுஜியும் பத்மவிபூஷன் சுசீலா அம்மாவும் சேர்ந்து ஒருஅழகான சோக டூயட் பாடலை பாடியிருப்பார்கள்.
இதே படத்தில் ஒரு சோக பாடலும் வானி ஜெயராமுடன் இருக்கிறது.. அது ஒரு ரகம் என்றால் இந்த டூயட் பாடல் ஒரு ரகம்..
இந்த பாடலின் ஒளி வடிவத்தை நான் இன்னும் பார்த்த்தில்லை... இதை எப்படி படமாக்கியிருக்கிறார்கள் என்று பார்க்க ஆசைதான்.. ஆனால் வீடியோ பதிவு எங்கும் கிடைக்கவில்லை..
அருமையான இந்த சுகமான பாடலை கேளுங்கள்..
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Kathal_Thegangal.mp3
பாடல் வரிகள்
காதல் தேகங்கள்....
காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ..
வானம் வாழ்துக்கள் கூ..றாதோ
பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ
காற்றே சங்கீதம் பா..டாதோ
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்....
சரணம் 1
மாலை வானம் சாலை போடும்..ஊரே போ..கும்.
ஆஆஆஆ காதல் மீன்கள் துள்ளும் நேரம்..கண்ணீர் சூ..டாகும்
வாலிப வாரம் கொண்டாடவா...
மாங்குயில் ராகம் நா பாடவா...
பூங்காற்றே பேசாதே...
தீ அள்ளி பூசாதே...
ஆஆஆஆஆஆ
காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ..
வானம் வாழ்துக்கள் கூ..றாதோ
பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ
காற்றே சங்கீதம் பா..டாதோ
சரணம் 2
சேலை மூடும் சோலை என்று என்னை..பா..ராட்ட
ஆஆஆஆ பாவை பார்க்கும் பன்ணீர் பார்வை நெஞ்சை நீ..ராட்டா
ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன...
மார்கழி பூங்கா நனைந்தாலென்ன...
தீராதோ என் தேவை...
என் கூந்தல் உன் போர்வை...ஆ..ஆஹா...
ஆஆஆஆ
காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ..
வானம் வாழ்துக்கள் கூ..றாதோ
பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ
காற்றே சங்கீதம் பா..டாதோ
ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ...ம்ம்ம்ம்ம்ம்ம்
ஏஏஏஏஏ....ம்ம்ம்ம்ம்ம்ம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான பதிவிற்கு நன்றி...
அருமயான பாடல்....
என் மனதை மயங்கவைத்த பாடல். பகிற்விற்க்கு வாழ்த்துக்கள்.
Post a Comment