இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, August 19, 2010

084- அன்பு மேகமே இங்கு ஓடி வா


படம் :   எங்கம்மா சபதம் ( Enga Amma Sabatham )
பாடல் :   
அன்பு மேகமே இங்கு ஓடி வா..... ( Anbu Mehame ingu Odi va )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்,  வானிஜெயராம் 
இசை :   விஜய் பாஷ்கர்
வருடம் : 1974
இயக்குநர் : S.P.முத்துராமன் 
நடிகர்கள் : சிவக்குமார், மேஜர் சுந்தர்ராஜான்





பாலுஜியும் வாணி ஜெயராமும் இணைந்து “ எங்கம்மா சபதம்” அன்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். 1974-இல் S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்.

விஜய் பாஷ்கர் இசையமைப்பில் ஒரு அற்புதமான பாடல் என்றே சொல்லலாம். திரைப்படமும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. திரைப்படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை...

பாடலை இப்போது கேட்டி மகிழுங்கள்......


தறவிறக்கம் செய்ய கீழ்கண்ட .mp3 என்ர லிங்கை கிளிக் செய்யவும்.

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Anbu_Megame.mp3



    Get this widget |     Track details  |



பாடல் வரிகள்








அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா







Tamil Blogs & Sites



0 comments:

Post a Comment

Visitors of This Blog