Tuesday, August 17, 2010
083- ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
படம் : தீர்க்க சுமங்கலி ( Dheerga Sumangali )
பாடல் : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே.... ( Aayiram Aayiram Aandin Munbey )
பாடியவர்கள் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1974
இயக்குநர் : A.C. திருலோகச்சந்தர்
நடிகர்கள் : K.R. விஜய, முத்துராமன், நாகேஷ்
பாடல் : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே.... ( Aayiram Aayiram Aandin Munbey )
பாடியவர்கள் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1974
இயக்குநர் : A.C. திருலோகச்சந்தர்
நடிகர்கள் : K.R. விஜய, முத்துராமன், நாகேஷ்
அருமையான இந்த பாடல் "தீர்க்க சுமங்கலி" என்ற திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைஅமைப்பில் நம் செல்லம் பாலுஜியும் சுசீலா அம்மாவும் இணைந்து பாடிய பாடல் இது..
தீர்க்க சுமங்கலி என்ற தலைப்பே அற்புதமான ஒன்று.. இருந்தாலும் இந்த படத்தில் நம் பாலுஜி படிய இந்த பாடலை வானி ஜெயராம் அம்மா பாடிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் தான் பலரது நினைவுக்கு சட்டென்று வரும்.. வானி ஜெயராம் அம்மாவின் திரையுலக முதல் பாடல் அது... ஆனால் அப்படியா இருந்தது... பாடலில் என்ன ஒரு மயக்கம்... அந்த பாடலுக்கு நடித்த கே.ஆர்.விஜயா அம்மாவும் அதற்கு ஒரு காரணம்.. அவரது சிரிப்பே அந்த பாடலில் தனியொரு சுகம்...
”ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே” இந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் தத்துவமானதாக இருக்கும்...
நம் பாலுஜியின் குரலே இந்த பாடலில் வித்தியாசமாக இருக்கும்.. அந்த காலத்தைய பாலுஜியின் குரலுக்கு அப்படியொரு சக்தி...
அருமையான பாடல்.. நீங்களும் கேட்டு ரசியுங்கள்....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Ayiram_Ayiram_Andin_Munbey.mp3
பாடல் வரிகள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டு என்பேன்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம்
அதுதான் கேட்டது கடவுளிடம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம்
அதுதான் கேட்டது கடவுளிடம்
அன்னை தந்தை பிள்ளை என்று
அவர் தான் தந்தான் மனிதனிடம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
சரணம் 1
தேகம் என்பதை காத்திருந்தால்
தினமும் வயது வளருமடா
உள்ளம் ஒழுங்காய் வளர்ந்திருந்தால்
உலகில் அமைதி கிடைக்குமடா
தேகம் என்பது கோயிலடா
அதில் உள்ளம் என்பது தெய்வமடா
அம்மா அப்பா சொல்வது போலே
நாமும் கேட்பதனாலே
இன்பம் வளரும் துன்பங்களாலே
எல்லாம் உண்டு வாழ்க்கையிலே
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
சரணம் 2
கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே
முருகனுக்காக காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே
ஸ்ரீராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே
நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே
ஆறாம் வயதில் படித்தது தான்
அறுபது வரைக்கும் வளருமடா
சேரும் இடத்தில் சேர்வதுதான்
சீரும் சிறப்பும் வழங்குமடா
நல்லவர் நூல்களை படித்துவிடு
வரும் நண்பனை ஒழுங்காய் தேர்ந்து எடு
தென்னை மீது தேங்காய் வருது
வாழை மீது பழங்கள் வருது
அன்னை போல பிள்ளைகள் நாங்கள்
அப்பா போலே வளர்வோம் நாளை
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
காலங்களாலே கடவுள் தந்தான்
கண்ணிரு நாயகனை
கருணையானாளே மேகம் தந்தான்
கனிவுள்ள செல்வங்களை
ஆலமரம் போல் நாளும் வளர
அருள்வான் வாழ்க்கையிலே
அன்னையை தேடி ஆனந்தம் பாடி
வாருங்கள் பிள்ளைகளே
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
ஆரம்பமானது மனித இனம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மனதை மயக்கும் இனிமையான பாடல்.
அருமையான பாடல் ... பதிவிற்கு நன்றி....
வணக்கம் அருண்... அருமையான பதிவு...
நீங்கள் கூறியது போல் இந்த படத்தின் வெற்றிப் பாடல் “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் தான்..
அதில் சந்தேகமே இல்லை....
வானி ஜெயராமின் முதல் பாடலா என்று வியக்க வைக்கும் அளவிற்கு அந்த பாடல் அவருக்கு பெயரை வாங்கித் தந்தது...
அன்புடன்
விஜயகுமாரி
மனதிற்கு இதம் தரும் பாடல்...
நினைவை விட்டு அகழாத படல்...
விஜய் மோகன்
சிங்கப்பூர்
இந்த பாடல் எனது வலைத்தளத்தின் நூறாவது நாள் தினப் பாடல்...
ரவீ அண்ணா சொன்னது போல் இந்த பாடல் மனதை மயக்கும் பாடல் தான்....
வாங்க விஜய் மோகன்... உங்களின் பின்னூட்டங்களைப் பார்த்தேன்.... மிக அருமை..
தங்களின் பாராட்டலுக்கு மிக்க நன்றி....
விஜயகுமாரி மேடம் ....“மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடல் எல்லோரின் மனங்கவர்ந்த பாடல்தான்.....
மதுரை அருண்
Post a Comment