Monday, August 23, 2010
086- பூங்கொடியே.. பூங்கொடியே..
படம் : ஸ்கூல் மாஷ்டர் ( School Master )
பாடல் : பூங்கொடியே.. பூங்கொடியே...... ( Poonkodiye Poonkodiye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S. ஜானகி
இசை : மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
வருடம் : 1973
பாடல் : பூங்கொடியே.. பூங்கொடியே...... ( Poonkodiye Poonkodiye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S. ஜானகி
இசை : மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
வருடம் : 1973
ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தில் வரும் ”பூங்கொடியே பூங்கொடியே” பாடல் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைப்பில் ஜானகியம்மா அவர்களுடன் இணைந்து நம் பாலுஜி பாடைய பாடல் இது....
பாடலில் அருமையான பின்னனி இசை மற்றும் பாலுஜியின் இனிமையான குரலில் மற்றுமொரு அழகான பாடல் இப்போது...
படத்தை பற்றிய தகவல்கள் அதிகம் தெரியவில்லை என்பதால் தெரிந்த நேயர்கள் சற்று பகிர்ந்து கொள்ளுங்கள்
பாடல் வரிகள்
பூங்கொடியே.. பூங்கொடியே..
யே.. யே.. யே.. ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..ஹோ.. ஹோ..
லலலாஆஆ.. லலலாஆஆஆஆஆஆ..
லலலாஆஆஆஆஆஆ..
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக..
பார்க்கவோ பறிக்கவோ
சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனது என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போததோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ
கண்களிலே நானம் வரும்
கைகளினால் மூடிவிட்டேன்
கைகளினால் மூடிவிட்டாய்
காதலுமா ஓடிவிடும்
கண்ணங்களில் என்னென்னவோ
மின்னல் விளையாடும்
தாங்கவோ
பருகவோ
உன்னவோ
உருகவோ
வருசம் மாசம் போகப்போக
மலரும் ஆசை தீராது தீராது தீராது
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
பூமியிலே வாணம் வந்து
போதைக்கொண்டு சேர்ந்துவிடும்
சேந்தவுடன் மழைபொழியும்
பூமியெங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்தினால் பிள்ளைகள் போல்
முல்லை விளையாடும்
எடுக்கவோ கொடுக்கவோ
தொடுக்கவோ முடிக்கவோ ஹோ ஹோ
பெண்ணின் மனதில் என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ
போதாதோ போதாதோ
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பு நிறை அருண்குமாருக்கு, தங்கள் வலைத்தளம் கண்டேன்.
//அவரின் சாதனைகளை பட்டியலிட எனக்கு வயது போதாது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கச் செய்யும் அளவிற்கு அவரது பாடல்கள் வந்துவிட்டன. அப்படியென்றால் அவர் இப்பொழுது பாடும் பாடல்களும் இன்னும் பாடப்போகும் பாடல்களும் எந்தத் தலைமுறைக்குச் சொந்தம் ? விடையை தேடிக் கொண்டிருக்கின்றேன். விடை கிடைக்காமலும், இன்னும் பல பாடல்கள் திரு.பாலுவின் குரலிலிருந்து வரவும் இறைவனை வேண்டுகிறேன்//
ஒரு படைப்பாளியை, அதிலும் பாட்டினால் நம் இதயமெலாம் நிறைந்த ஒரு பெருங் கலைஞனை பெருமைபடுத்துதல் என்பது, அவரின் சாதனைகளை இயன்றவரை தக்கவைத்தல் என்பது கடமை தான், உயர்வு தான்.
SPB-யின் உள்ளம் கரைத்த பாடல்கள் எத்தனை எத்தனையோ....., சொல்லிலடங்காது. பாடல் பொறுத்தவரை SPB நமக்கொரு வரம் என்று கூட சொல்லலாம்.
காதல் ஓவியம், சலங்கை ஒலி, சங்கராபரணம் என அவரின் திறனை சவாலாக உலகிற்கு காட்டிய படங்கள் கூட எண்ணற்றவை. அதி முக்கிய சிறப்பெனில், இன்றும், அவரின் ரசனை குறையாத அதே குரல்வளம் இறையின் கொடைதான் போல்.
இவை எல்லாவற்றையும் விட, SPB ஒரு மிக சிறந்த மனிதரென அறிந்துள்ளேன். தான் பெற்றவை தன பின்னால் வரும் இளைய தலைமுறையினரும் பெறவேண்டும் என்பதில் அதிக முனைப்புள்ள சமுக அக்கறை மிக்கவர்களில் SPB-யும் ஒருவர் என்பது குறிப்பிட தக்கது.
அவரின் குரல் ஜாலமும், மன ஓட்டமும் இதர கலைஞர்களுக்கும் இருக்கப் பெறட்டுமென அடிக்கடி நினைப்பேன். அப்படிப் பட்டவருக்கு பெருமை சேர்ப்பீர்களெனில் மகிழ்வேன்.
மிக்க வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும்...
அதில் மட்டுமே முழு கவனம் செலுத்த இயலாதெனினும், இயலும் போது கண்டிப்பாக வந்து பார்த்து, பார்த்தால் கண்டிப்பாக கருத்தும் இடுகிறேன் அருண். மிக்க பாராட்டுக்களும்.. நன்றிகளும்..
வித்யாசாகர்
வாங்க வித்யாசாகர் அவர்களே .... உங்கள் வருகைக்கும் நீங்கள் பதிந்த கருத்துக்களுக்களும் பாடும் நிலா பாலுவின் குழு சார்பாக என் நன்றிகள்.
தங்களது கருத்துக்கள் இந்த வலைத்தளத்திற்கு மற்றுமொரு வளர்ச்சிப்படியாக அமைந்திருக்கிறது ....
// இவை எல்லாவற்றையும் விட, SPB ஒரு மிக சிறந்த மனிதரென அறிந்துள்ளேன்.
தான் பெற்றவை தன பின்னால் வரும் இளைய தலைமுறையினரும் பெறவேண்டும் என்பதில் அதிக முனைப்புள்ள சமுக அக்கறை மிக்கவர்களில் SPB-யும் ஒருவர் என்பது குறிப்பிட தக்கது. //
நீங்கள் கூறியது போல SPB ஒரு மிக சிறந்த மனிதர் தான்...
அவரது ரசிகர்கள் கூட்டத்தில் அவர் பேசும் போது தன் பாட்டை ரசிப்பது போல அனைத்து பாடகர்களையும் ரசியுங்கள், நேசியுங்கள் என்று பலமுறை கூறுவார்...
ஒரு முறை பேட்டியில் SPB பேசுகையில் என் முகத்தை நாணே கண்ணாடியில் பார்க்க சில சமயம் சலிப்பு தட்டும்...
ஆனால் என் ரசிகர்கள் என் குரலை இன்றளவும் ரசிப்பது எனக்கு ஆச்சரியமாகவும், இந்த ரசிகர்கள் எனக்கு அபூர்வமாகவும் தெரிகிறார்கள் என்றார் ...
இவ்வளவு பெரிய மனிதரை நாம் எங்கும் பார்க்க முடியாது....
பெருமை கொள்வோம்.. ரசிகராய் இருப்பதற்கு.....
தங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .......
தங்களது கருத்துக்கள் இந்த தளத்தில் பதியப்படும் அனைத்து பாடல்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை....
மதுரை அருண்
Post a Comment