Saturday, August 14, 2010
080- தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
படம் : ஜெய்ஹிந்த் ( Jaihind )
பாடல் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி.... ( Thayin manikkodi )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : வித்யாசாகர்
வருடம் : 1994
இயக்குநர் : அர்ஜூன்
நடிகர்கள் : அர்ஜூன், ரஞ்சிதா, ச்ந்திரசேகர், கவுண்டமனி, செந்தில்
தயாரிப்பு : செயின் ராஜ் செயின்
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : வித்யாசாகர்
வருடம் : 1994
இயக்குநர் : அர்ஜூன்
நடிகர்கள் : அர்ஜூன், ரஞ்சிதா, ச்ந்திரசேகர், கவுண்டமனி, செந்தில்
தயாரிப்பு : செயின் ராஜ் செயின்
INDIAN FLAG.. JAI HIND |
INDIAN EMBLEM |
நேயர்கள் அணைவருக்கும் இந்திய தேசத்தின் 64வது சுத்ந்திர தின வாழ்த்துக்கள்.
இத்தருனத்தில் இங்கு நம் பாலுஜி பாடிய ஒரு தேசப்பற்று மிகுந்த பாடலை பதிகின்றேன்.. அதற்கு முன் சற்று இந்திய தேசத்தை நாம் பின்னோக்கி பார்ப்போம்.
சுதந்திர போராட்ட வீரர்கள் ( Indian Freedom Fighters )
இந்த படத்தை எனக்கு அனுப்பி இங்கு பதிய விருப்பம் தெரிவித்து மிகவும் உறுதுனையாக இருந்த என் நன்பர் திரு.தினேஷ் (SRM University) அவர்களுக்குஎன் நன்றி.
இந்தியா எப்பொழுது, எப்படி சுதந்திரம் பெற்றது என்ற பழைய கதைகளை கூறி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை... அது அணைவரும் அறிந்த ஒன்று.
இந்தியா உலகில் ஏழாவது மிகப்பெரிய நாடாகவும், தலைநகரமாக டில்லியும், பரப்பளவில் மும்பை முதலிடத்திலும், மொத்தம் இந்திய அரசாங்கத்தால் 22 மொழிகள் வழக்கில் இருப்பதாகவும், தேசிய மொழியாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287,240 km2 ‡ மற்றும் தண்ணீர் பகுதி 9.56 சதவிகிதமும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களும் ஏழு யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
NATIONAL FAVOURS | DESCRIPTION | தேசிய சின்னங்கள் | தேசிய சின்னங்கள் |
Flag | Tricolour | கொடி | மூவர்ணம் |
Emblem | Sarnath Lion Capital | அடையாள சின்னம் | மூன்று முக அசோக சின்னம் |
Anthem | Jana Gana Mana | தேசிய கீதம் | ஜன கன மன |
Song | Vande Mataram | தேசிய பாடல் | வந்தே மாதரம் |
Animal | Royal Bengal Tiger | விலங்கு | புலி |
Bird | Indian Peacock | பறவை | மயில் |
Aquatic animal | Dolphin | கடல் விலங்கு | டால்ஃபின் |
Flower | Lotus | தேசிய பூ | தாமரை |
Tree | Banyan | தேசிய மரம் | ஆல மரம் |
Fruit | Mango | தேசிய கனி | மாம்பழம் |
Sport | Field hockey | விளையாட்டு | ஹாக்கி |
Calendar | Saka | காலண்டர் | சக |
River | Ganges | ஹேசிய நதி | கங்கை நதி |
இவை அணைத்தும் இந்தியாவின் தனிச்சிறப்புகள்.
நம் பாரத தேசத்தின் 64வது சுத்ந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருனத்தில் நம் இந்தியாவின் தன்மை உலக நாடுகளிடையே எவ்வாறான பார்வையில் இருக்கிறது. இந்தியா இன்னும் 10 வருடத்தில் வல்லரசாகிவிடும் என்று அணைத்து நாடுகளும் ஆருடம் கூறினாலும் நம் இந்திய மக்களை என் மனதில் நிறுத்தி என்னிய போது அவர்கள் இதோ இதோ எனேக் கூறுவது போல் இன்னும் பல நூறு வருடங்கள் நாம் கண்டாலும் அது நிறைவேறுமா ? அது கனவாகிவிடக் கூடாது என்பதே என் விருப்பம்.
இந்திய சுதந்திரத்தில் எத்தனையோ எண்ணிலடங்காதவர்களின் உழைப்பு இன்று நாம் சுவாசிக்கும் இந்த காற்றே சாட்சி. ஆனால் என் மனம் என்னவோ நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என்ற ஒரு மாபெரும் வீரனையே சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அவர் போக்கில் சுதந்திர இந்தியா இன்று இருந்திருந்தால் நினைத்தவனெல்லாம் தன்னுடைய பலத்தைக்காட்ட இதை பிரித்துக் கொடுங்கள் அதை பிரித்துக் கொடுங்கள் என்று கொடி தூக்கியிருக்கமாட்டான். மகாத்மா காந்திஜியின் பங்கு இந்த சுதந்திரத்தில் பெரும் ஆற்றலுக்குறியது என்றாலும் காந்திஜியின் சில போக்குகள், அவரைப் பற்றிய கருத்துகள் எனக்கு எதிர்மாறாகவே உள்ளது.. பாகிஸ்தான் பிரியவும் நேதாஜியின் பல நடவடிக்கைகள் தடை படவும் அவர் காரணமாயிருந்திருக்கிறார். இருந்தாலும் அவரது வெற்றியை என் மனம் ஒப்புக்கொள்கிறது. (தவறாக எழுதி விட்டு மழுப்புவதாக என்ன வேண்டாம்).
சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் என் இந்திய நாயகன் நேதாஜியை நினைவு படுத்தியதற்கு இயக்குநர் விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி.. இந்திய பிரஜைகளிலே அவருக்கு மட்டும்தான் இறப்பு சான்றிதழ் பல வருடங்கள் தரப்படாமல் இருந்தது.(இப்பொழுதும் தரப்பட்டதா ? எந்த அரசாங்கத்தால் தரப்பட்டது என்பது யாம் அறியேன்) இன்னும் அவர் மரனத்தில் இருக்கும் மர்மங்கள் ஒரு புதிர்தான்.
தற்போதைய இந்தியாவின் அரசியல் எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதே புரியவில்லை.. சாமானிய மக்கள் இதுதான் விதி என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.. பணம் படைத்தவர்கள் இதை உலக வளர்ச்சி என்கிறார்கள். தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். தங்களது பலத்தை காட்ட பேரனி, கடை அடைப்பு, பொதுக்கூட்டம், மாநாடுகள் என்று நடத்திவருகிறார்கள்.
என்னவோ தினமும் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்களை சந்தித்தாலும் நேரம் கிடைக்கும் சமயத்தில் கேட்கும் இசைதான் எனக்கு சுதந்திர இந்தியாவாகத் தெரிகிறது. நம் பாலுஜியின் குரலை கேட்காத நாட்கள்(இதுவரை அவ்வாறு நிகழ்ந்ததில்லை) எனக்கு சுதந்திரத்திற்கு முன் இந்தியாவை புரிய வைக்கிறது.
சுதந்திரத்திற்கு பாடு பட்ட அணைத்து நல்ல மனிதர்களுக்கும், அவர்களின் தற்போதைய சந்ததியினருக்கும், அதை இப்போது பயன்படுத்தும் மற்றும் பயன் படுத்த தெரியாத அணைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் ஒரு முறை என் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனி நம் பாலுஜியின் அட்டகாசமான இந்த சுதந்திர தாக பாடல் ஜெய்ஹிந்த் என்ற திரைப்படத்தில் வித்யாசாகரின் இசையமைப்பில் அர்ஜூன் மற்றும் புகழ் பெற்ற ரஞ்சிதாவும் நடித்த படம் 1994ல் வெளி வந்தது.பாலுஜியின் குரலில் வந்ததால் என்னவோ ஒரு இனம் புரியாத உற்சாகம் இந்த பாடலை கேட்கும் போது இந்தியாவின் மீது வருகின்றது. பாலுஜியின் குரலில் என்ன ஒரு சுதந்திர வேட்கை ??
பாடலின் ஒலி,ஒளி வடிவம் இங்கு பதியப்பட்டு உள்ளது... கேட்டு மகிழுங்கள்.
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமி இது
ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்
வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ
தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ
பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ
சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக புயல் போல் விரைக
அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவின்று புதிய இந்தியா
சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமி இது
ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
குடியரசு தின வாழ்துக்கள்....
பாடலை கேட்கும் போது சுதந்திர தாகம் அதிகரிக்கின்றது...
எங்களைப் போல் வெளிநாட்டவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த தளம்....
பதிவிற்கு மிக்க நன்றி அருண் அவர்களே....
Venkatesh Mohan
Singapore
இந்த நாளுக்கு பொருத்தமான பாடல்/// ஆயினும் ஜனவரி இருபத்தாறுக்கு இது இன்னும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் என்ன செய்ய வேறு சுதந்திர தின அல்லது தேசபக்திப் பாடல் இவர் குரலில் எனக்கும் வேறு நினைவுக்கு வரவில்லை. ஏழாவது மனிதனில் ஒரு பாரதியார் பாடல் உள்ளதோ...?
கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே ....
என்ன இப்படி சொல்லீட்டீங்க ... நம் பாலுஜி பாடிய இன்னொரு சுதந்திர கருத்துள்ள பாடல் இந்தியன் திரைப்படத்தில் "கப்பலேறி போயாச்சு" இருக்கிறதே... சொல்ல போனால் அந்த பாடலை தான் இன்று பதிந்திருக்க வேண்டும். கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு... எங்கு போகப் போகிறது.. வரும் தினத்தில் பதிந்திடலாம் ...
இந்த வலை தளத்தை பற்றி தங்களது நண்பர்களிடமும் கொஞ்சம் தெரிவியுங்கள் ....
அடுத்து என்ன பாடலை பதியலாம்... உங்கள் விருப்பங்களை maduraispb@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்...
மதுரை அருண்
Happy independence day wishes......Jus atarted going thro tis blog....its reallly interesting....tis is jus to start wit....wil receive more comments a s i go deeper more.....
Regards,
Jenin
சுதந்திர தின வாழ்துக்கள்....
டேய் அருண்... நீ இன்னும் காந்திஜி பற்றிய கருத்துக்களை மாற்றிக் கொள்ளவே இல்லையா.. அதை இங்க வேற பதிஞ்சிட்ட...
பரவாயில்ல.. நேதாஜி ஒரு மிகச்சிறந்த இந்திய நாயகன்...
பாடல் அற்புதம்... பதிவும் அற்புதம்...
கார்த்திக் ராஜசேகரன்
பாடலை கேட்கும் போது 5 நிமிடம் சுதந்திரத்திற்காக போராடிய உணர்ச்சி ஏற்ப்ட்டது... அதுவும் நம் பாலுவின் குரலில் கேட்பதால்
கூட கொஞ்சம் தேசபற்று அதிகரிக்கின்றது...
அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி
மதுரை அமுதா
ur blog is so super i like ur blog and i like the song so much
வருக ஜெனின், அமுதா மற்றும் ரம்யா அவர்களே...
தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி...
ஹலோ கார்த்தி எப்புடி இருக்கீங்க ? வரும் போதே காந்திஜியை பற்றி பேசனுமா ? ஒரு நாள் முழுதும் நாம ஆர்கிவ் பன்னினது போதாதா ?
எப்புடியோ அன்னைக்கு அடிதடி இல்லாம முடிஞ்சுடிச்சு... அது மறக்க முடியாத நினைவுகள் கார்த்தி..
அமுதா மேடம் கூறியது போல் இந்த பாடலை நம் பாலுஜியின் குரலில் கேட்கும் போது தேசபற்று அதிகரிப்பது உண்மைதான்...
Venkatesh Mohan அவர்களுக்கும் நன்றிகள் இங்கு அவர் கருத்தை பதிவு செய்ததற்காக....
மதுரை அருண்
அன்பின் அருண்...
ஒரு வழியாய் பின்னூட்டங்களை அதே பக்கத்தில் கொண்டு வந்துட்டீங்க வாழ்த்துக்கள். நாம் ஒரு பதிவு செய்தவுடன் நல்லதோ கெட்டதோ ஒரு மறுமொழி வரும் போது உண்டாகும் உற்சாகம் இருக்குமே. அது தான் சுதந்திரமான மகிழ்ச்சி அதுக்கு ஈடு இணையே இல்லை. அதுசரி எப்போதும் எங்கு பதிந்தாலும் விணாக்களை (பாடல்கள் லிஸ்ட்) அவுட் செய்யாதீங்க தளத்தின் வெற்றியின் ரகசியம். ஒரு ஸ்வாரசியம் இல்லாமல் போய்விடும் சரிதானே? இது என் குரு பா.நி.பா சுந்தர் செப்பியது. ஹி.. ஹி... மொத்ததில் உணர்ச்சிகளை தூண்டும் உன்னதமான பாடல். வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு... வாழ்துக்கள் அருண் அவ்ர்களே....
@ ஸ்ரீராம் நன்பருக்கு.. இந்த பாடல் குடியரசு தினத்தை விட சுதந்திர தினத்துக்கு மிகப் பொருத்தமான பாடலே... கீழ் கண்ட வரிகளை கவணியுங்கள்...
// தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம் //
// சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் //
இந்த வரிகள் நம் பாடும் நிலா பாலுவின் குரலில் நம் மனதில் தனித்து நிற்கச் செய்கிறது...
இதமான இசை... உதயமான குரல்.. அருமையான பாடல் வரிகள்..
பதிவிற்கு நன்றி.....
விஜயகுமாரி
அண்ணா so sorry.. lightly busy with my work... beleive me pls....
அருமையான பாடல்.. அதோடு உங்கள் சுதந்திர தின கருத்தும் சூப்பர்... கோவை ரவீ அண்ணா பற்றி நீங்கள் சொன்னதை அவருடைய பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.
நம் பாலுஜியின் குரலில் எந்த பாடலை கேட்டாலும் சரி.. அது சூப்பர்தான்.. அதற்கு இந்த பாடல் மட்டும் என்ன விதிவிலக்கா ?
இங்கு சுதந்திர தினம் உண்மையிலேயே அருமையாக கொண்டாடினார்கள்... வீடியோ பதிவுகளை சி.டி யில் அனுப்பி வைக்கிறேன்.. பாருங்கள்....
Jaihind... Jaiho.....
சத்யா
அருமையான பதிவு ..... நல்ல பாடல்...
அருண் நம்ம வாத்தியாருக்கு நம் பாலுஜி பாடிய ஏதாவது பாடல்களை கொஞ்சம் பதியுங்களேன்...
நாகேந்திரன்
சுதந்திர தின சிறப்பு பாடல்... மிக அருமை...
வாழ்துக்கள்
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment