Monday, August 9, 2010
078- தலையை குனியும் தாமரையே
படம் : ஒரு ஓடை நதியாகிறது ( Oru Oodia Nathiyaagirathu )
பாடல் : தலையை குனியும் தாமரையே...... ( Thalaiyai Kuniyum Thamairaye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : ஸ்ரீதர்
நடிகர்கள் : ரகுவரன், சுமலதா
பாடல் : தலையை குனியும் தாமரையே...... ( Thalaiyai Kuniyum Thamairaye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : ஸ்ரீதர்
நடிகர்கள் : ரகுவரன், சுமலதா
"ஒரு ஓடை நதியாகிறது" என்ற தலைப்பு இந்த தலைமுறைக்கு எட்டாத ஒரு தலைப்பு. இப்படிப்பட்ட ஒரு கருத்துள்ள தலைப்பை இந்த காலத்தில் உள்ள இயக்குநர்களிடம் நாம் எதிர்பார்ப்பது மடத்தனம் என்றே சொல்லலாம். ஆனால் ஒரு மாறுபட்ட தலைப்பை இந்த காலக் கட்டத்தில் திரு.பார்த்திபன் தருவது ஒரு ஆறுதல்.(குடைக்குள் மழை, கண்ணாடிப் பூக்கள் இதுபோன்ற தலைப்பை வைத்துதான் கூறுகிறேன்.)
புதிதாக திருமணமான ஒரு ஆணும், பெண்ணும், அவ்ர்களுக்கே உரித்தான வெட்கத்துடனும், பரபரப்புடனும், இனம்புரியாத பயத்துடனும், ஆர்வத்துடனும், காதலுடனும், காமத்துடனும், புதிய வாழ்க்கையொன்றைத் துவங்குவதற்காக, ஏகமான கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும், சேர்ந்து ஒரு பாடலை ஸ்ரீதர் அவர்கள் நம் இளையராஜாவிடம் கேட்க அதை நம் பாலுஜியின் குரலில் கொடுத்த அற்புதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
முதலிரவன்று அறைக்குள் காத்திருக்கும் நாயகனை, நாணத்துடன் தலைகுனிந்து வரும் நாயகி சந்திப்பதும், தாம்பத்யம் தொடங்குவதையும், முடிவில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதையும் களமாக வைத்து இப்பாடலை இளையராஜா கொடுத்திருக்கிறார்.
பாலுவும், ராஜேஸ்வரியும் தங்களுக்குள் ஒரு அதீத உணர்வுகளைக் கொடுத்து இந்த பாடலை பாடியிருப்பார்கள். இளையராஜாவின் அந்த காலக்கட்ட்த்தில் பலமாக கருதப்பட்ட வயலினும், அதனைத் தொடர்ந்து புல்லாங்குழலும் சேர்ந்தொலிக்க, பாடல் முழுவதிலும் பாலுவும், ராஜேஸ்வரியும் உல்லாசமாக பாடி(பறந்தி)யிருப்பார்கள். இப்பாடலை நம் பாலுவுடன் இணைந்து பாடியது ராஜேஸ்வரியா அல்லது சசிரேகாவா என்பது ஒரு குழப்பமே... ஆனால் இணயத்தில் ராஜேஸ்வரி என்று பல இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நம் நாயகன் ரகுவரனின் புகைபடத்தை பார்த்து விட்டு நான் வேறு யாரோ என்றுதான் நிணைத்தேன். இணைய தளத்திலும் இந்த பாடலை இங்கு பதிய கேட்டு திரு.Anonymous அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் மூலமாகவும் தான் தெரிந்துகொண்டேன். இப்படத்தில் நடித்த கதாநாயகி சுமலதா தற்போதைய கன்னட நடிகர் திரு.அம்பரீஷின் மனைவியாக உள்ளார்.(அடுத்து யார் மனைவியாக இருப்பார் என்று நம் தமிழ்நாட்டு குறும்பை காட்டி சிரிக்கக் கூடாது.)
என்ன திரு.Anonymous அவர்களே தங்களது விருப்பப் பாடல்... (சரி..சரி.. நம் அணைவரின் விருப்பப் பாடல் தான்..) இங்கு பதியப்பட்டு விட்டது.. சந்தோஷம் தானே... பாடலை மற்றும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்.. இப்படத்தை பற்றியும், பாடலை பற்றியும் இங்கு பதிய காரணமாயிருந்ததற்கு மிக்க நன்றி.
இனி பாடலை கேட்போமே....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Thalaiyai_Kuniyum_Thamaraiye.mp3
Song Download Link : Thalaiyai_Kuniyum_Thamaraiye.mp3
பாடல் வரிகள்
தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ.......
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்கடலின் ஓரம் பள்ளிவைக்கும் நேரம்
பார்கடலின் ஓரம் பள்ளிவைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
சரணம் 1
காத்திருந்தேன் அன்பே இனி
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் இனி
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நானங்கள் இந்த
ஊமையின் வீனையில் இசை வருமா
நீயொரு பொன்வீனை அதில்
நுனிவிரல் தொடுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
ம்ம்ம்ம்.......வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா ?
இது சரியா ?
சரி சரி பூவாடைக் காத்து ஜன்னலை சாத்து
ஆஆஆஆ.....
பூவாடைக் காத்து ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தலிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தலிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இனைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அருமை அருண்..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. உடனடி பதிவிற்க்கு நன்றி.
நம் பாலுஜி பாடிய அணைத்து பாடல்களுமே ஒவ்வொருவருக்கு பிடித்திருக்கும்.. இந்த வகையில் இந்த பாடல் பலரதுவிருப்பமாக இரூக்கும் அண்ணா... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
அருமையான பாடல் அண்ணா... இந்த பாடலை நான் இப்போதுதான் கேட்கிறேன் என்று நினைக்கிறேன்..
நீங்கள் கூறிய அத்தனை நானங்களும் நம் பாலுஜியின் குரலில் உணர்ந்தேன்... பதிவிற்கு மிக்க நன்றி....
அன்புடன்
சத்யா.
ஹலோ Boss தேவையில்லாமல் சுமலதா அம்மாவின் வாழ்கையில் ஒரு twist தேவையா ? குசும்பையா உனக்கு....
ஆனால் உண்மையை சொன்னால் நான் அதை படிக்கும் போது அவ்வாறு தான் நினைத்தேன். அதை தாங்களே அடைப்புக்குறிக்குள் கொடுத்ததும் வாய் விட்டு சிரித்தேன்...
பாடல் வரிகளின் பதிவு அற்புதம்.. வாழ்த்துக்கள் இந்த சேவைக்கு..... பாலுஜியின் பார்வை இதில் விழ என் வாழ்த்துக்கள்
பாடலின் பின்னூட்டம் அருமையாக இருந்தது அருண் அவர்களே... பாடலையும் பாடல் பற்றிய நிகழ்வுகளையும் தொகுக்கும் விதமும் அருமை...
இப்பாடை சசிரேகா பாடியது அல்ல என்று மட்டும் தெரியும்... அவரது பாடல் தொகுப்பில் இந்த பாடல் கிடையாது...
மதுரை தமிழரசி
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியலே.... என்று தொடங்கும் படம் பெயர் மறந்து போன பாடல் கிடைக்குமா அருண் ஜி...?
கண்டிப்பாக ஸ்ரீராம் நன்பரே... உடனே உங்களது பாடல் பதியப்படும்.. தற்போது ஒரு பாடல் பதியப்பட்டு இருக்கிறது..கேளுங்கள் நம் குருஜியின் குரலை.
மதுரை அருண்
ஸ்ரீராம் நன்பரே நீங்கள் கேட்ட பாடல் சின்னஞ்சிறுசுகள் என்ற திரப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.. இந்த தகவலை எனக்கு பெங்களூரைச் சேர்ந்த திரு.R.G.நாராயணன் சார் தெரிவித்தார்...
தங்களது விருப்ப பாடல் வெகு விரைவில் இங்கு பதியப்படும்...
மதுரை அருண்
ஓ....நன்றி நண்பரே..... தரவிறக்கம் செய்யும் வசதியும் இருந்தால் மகிழ்ச்சி.SPB பாடல்களில் என்னிடம் இல்லாத ஒரு சில பாடல்களில் அதுவும் ஒன்று. தேடி விவரம் சொன்ன நண்பர் நாராயணனுக்கும் நன்றிகள். "மேகங்களே.. பாடுங்களேன்.... அந்தியிலே சூரியனாம்.. அஸ்தமனம் வைகறையாம்" பாடலும், தெலுங்கில் "மா தெலுகு தல்லிகி " என்ற ஃபோல்க் சாங், ஆனால் சுகாசினி நடித்த திரைப் படத்தில் இடம் பெற்ற தலைவரின் சோலோ சாங் தேவை. அவர் திரைப் படத்துக்கு என்று இல்லாமல் தனி ஆல்பத்தில் பாடிய பாடல் உள்ளது. ஆனால் திரைப் படத்தில் இடம் பெற்ற பாடல் டெம்போ வில் சுவை அதிகம். அதுவும் முடிந்தால் தேவை. ரொம்பவும் தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். (அதற்குள் அடுத்த நேயர் விருப்பமா என்று கோபிக்க வேண்டாம்...!!)
ஸ்ரீராம் நன்பரே எதற்காக இப்படி நினைக்கிறீர்கள்.....
பாலுவின் பாடலை தருவது என்பது தொந்தரவா ?.. இருக்கவே இருக்காது.. இது எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு...
அணைத்து பாடல்களும் பதிவிறக்கம் செய்யும் வசதிதான் இந்த தளத்தின் சிறப்பம்சமே...
நீங்கள் கேட்ட பாடல்கள் அணைத்தும் இங்கு பதியப்படும்..சற்று காலதாமதத்திற்கு மட்டும் மண்ணிக்கவும்...
உடனே பதிய முயற்சி செய்கிறேன்...
மதுரை அருண்.
///"மா தெலுகு தல்லிகி " என்ற ஃபோல்க் சாங்///
அடக் கெரகமே! இது ஒன்னும் ஃபோல்க் சாங் கிடையாது. நம் ஊரில் “நீராரும் கடலுடுத்த” மாதிரி எது தெலுங்கு வாழ்த்துப் பாடல்.
என்னுடைய விருப்பம் நிறைவேற்றப்படவே இல்லை!
மேகங்களே வாருங்களே பாடல் இதுவரையும் கிடைக்கவில்லை. என்ன படம் என்றும் தெரியவில்லை.
Post a Comment