Sunday, August 8, 2010
076- அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
படம் : அன்புள்ள மலரே ( Anbulla Malare )
பாடல் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்.... ( alai meedhu thadumaarudhae )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , வானி ஜெயராம்
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : B.R.ரவி சங்கர்
நடிகர்கள் : சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யா
பாடல் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்.... ( alai meedhu thadumaarudhae )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , வானி ஜெயராம்
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : B.R.ரவி சங்கர்
நடிகர்கள் : சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யா
பாடலாசிரியர்: வைரமுத்து
சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் B.R.ரவி சங்கர் இயக்கத்தில் 1984ம் வருடம் ”அன்புள்ள மலரே” என்ற திரைப்படம் மே மாதம் வெளிவந்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் நம் பாலுஜியும் வானி ஜெயராமும் சேர்ந்து ஒருஅழகான சோக பாடலை பாடியிருப்பார்கள்.
பாடலுக்கு வரிகளை தந்தது நம் வைரமுத்து... ஒரு நல்ல முத்தான வரிகள் என்றே சொல்ல்லாம்... நாம் என்ங்க சொல்றது.. அதான் அத சூப்பரா பாலுஜியும் வானி ஜெயராமும் சேர்ந்து பாடிட்டாங்களே...
சோகத்தில் ஒரு சுகத்தை காண இந்த பாடலை கேளுங்கள்.. கண்கள் இமை மூட செவி மட்டும் நம் பாடும் நிலாவுக்காக திறந்திருக்கட்டும்....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Alai_Meethu_Thadumaruthe.mp3
Song Download Link : Alai_Meethu_Thadumaruthe.mp3
பாடல் வரிகள்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சரணம் 1
கண்ணில் இன்னும் சிந்த கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண்ணை பெண்ணாய் காணும் காலம் இல்லை
போதும் போதும் தனிமை
பிள்ளை என்னும் கொடி முல்லை கண் வளர
இல்லை இல்லை கவலை
(ஆ..ஆ..ஆ..ஆ..) இந்த நேசம் சுகமாகுமே
இவள் வாழ்கை நிறம் மாருமே
என்றாலும் கண்ணோரம் ஓரு சோகமே
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சரணம் 2
ஜன்னல் எங்கும் கண்கள் பார்கின்றதே
ஏதோ சொல்லி சிரிக்கும்
தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
தானோ ஏணி தரும் மேலே ஏரவிடும்
மீண்டும் ஏணி பரிக்கும்
(ஆ..ஆ..ஆ..ஆ..) தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால்தான் பல காயங்கள்
கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த பாடலில் பாலுவின் வரிகள் இன்னும் செவிகளில் ஒலித்துக்க் கொண்டே இருக்கிறது.
ரொம்ப நாள் கழித்து மீண்டும் கேட்க செய்ததற்கு மிக்க நன்றி
மதுரை தமிழரசி
Post a Comment