படம் : ஆனந்த பைரவி ( Anandha Bhairavi )
பாடல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்.... ( Siriththal Andha Sirippil Oru Moham )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா
இசை : ஆர். ராமுஜம்
வருடம் : 1978
தயாரிப்பாளர் : மோகன் காந்திராம்
நடிகர்கள் : ரவிசந்திரன், ஸ்ரீ வித்யா கே. ஆர். விஜயா
Monday, August 2, 2010
068- சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் என்ற பாடலுக்கேற்ப பல சிரிப்புகளை இந்த பாடலில் நம் பாலுஜி சிரித்து அசத்தியிருப்பார்.
ரவிச்சந்திரனின் நடிப்பு மக அற்புதமாக இருக்கும் இந்த படத்தில். ஆனால் படத்தின் முடிவுதான் சிலருக்கு பிடிக்காமல் போனதென்னவோ உண்மை.
இந்த படத்தின் இயக்குனர் மட்டும் யார் என்று தெரியவில்லை..
அருமையான பாடலை நீங்களும் இங்கு கேட்டு மகிழுங்கள்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Sirithal_Antha_Siripil.mp3
Song Download Link : Sirithal_Antha_Siripil.mp3
பாடல் வரிகள்
SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
Susheela: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்
SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
Susheela: உங்களின் அன்பு நினைவினிலே
என் மனம் வாழும் உலகினிலே
கண்களின் ஜீவ ஒளியினிலே
சொர்கம் தோன்றுமோ
SPB: தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
Susheela: அத்தான்...
SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
SPB: குங்கும கோலம் முகத்தினிலே
மங்கள தாலி கழுத்தினிலே
சந்தண பேழை அழகினிலே
தெய்வம் மயங்குமோ
Susheela: காலமே ஓடி வா
காவியம் பாடி வா
காலமே ஓடி வா
காவியம் பாடி வா
Susheela: உயிரில்
SPB: ம்ம்
Susheela: உணர்வில்
SPB: ஓஓஓ
Susheela: கலந்தே
SPB: ஆஆஆ
Susheela: மகிழ்வோம்
Susheela: உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
SPB: அன்பே...
Susheela: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
SPB: கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
SPB & Susheela : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அண்ணா அருமையான பாடல்.. இந்த பாடல் பற்றி நீங்க என் கிட்ட எதுவுமே சொன்னதே இல்ல... SPB sir-ன் குரல் ரொம்ப சூப்பரா இருந்துச்சுன்னா இந்த பாடல்ல...
அருமையான பதிவு..
அன்புடன்
ச்த்யா
நல்ல பாடல் அருண்... ரொம்ப நாள் கழித்து மீண்டும் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி..
பாலா SRM
அருண் நல்ல பாடலை பதிந்ததற்கு மிக்க நன்றி..
இதில்
// சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் //
என்று உள்ளது..
ஆனால்
// சிரித்தால் அந்த சிரிப்பில் ஒரு மோகம் // என்று வர வேண்டும்..
இப்படிக்கு
மதுரை நாகேந்திரன்
பாட்டு அருமையான பாட்டுதான். ஆனால், பாட்டு நடுவில் பலவிதமாகச் சிரித்து அசத்தியிருப்பார் என்றீர்களே, ஒரு இடத்தில்கூட எஸ்.பி.பி. சிரிக்கவே இல்லையே? நிற்க. யார் இந்தப் படத்துக்கு டைரக்டர் என்று கேட்டுள்ளீர்கள். இதைத் தயாரித்த மோகன் காந்திராமேதான் இயக்கவும் செய்தார்.
வணக்கம் ரவி பிரகாஷ் அவர்களே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நம் பாலுஜி சிரித்தாலே அது பாடல்தான்... (எப்புடியோ பாலுஜியை வைத்து தப்பித்து விட்டேன்..)
அன்புடன்
மதுரை அருண்
Idhuvarai Ketiraatha Paadalkalai Ketka Oru Vaaipu Alithathukku Nandri!
Sankaran
வாருங்கள் சங்கரன் அவர்களே.... வருகைக்கு மிக்க நன்றி..பதிவுக்கும் நன்றி..இதுபோல் நீங்கள் அதிகம் கேட்டிராத அணைத்து பாடல்களும் பதியப்படும்..
பொறுத்திருங்கள்... ஒவ்வொரு பதிவுக்கும் த்ங்களது கருத்துகளை திய வேண்டிகிறோம் நன்பரே....
மதுரை அருண்
Dear Arun.
Intha inimaiyana paadal PNB thalathil draftil rompa nallaka irunthathu. neengal munthikondirkal. melum intha paadalai koodiya viraivil PNB thalathi thodarpu kodukapokiren pathivaka. nandri
Post a Comment