படம் : நிஜங்கள் ( Nijangal )
பாடல் : உன் காதோடு காதொரு சேதி...... ( Unkaathodu Kathoru sethi )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம், சைலஜா
இசை : எம்.பி.ஸ்ரீனிவாசன்
வருடம் : 1982
இயக்குநர் : K.S. சேதுமாதவன்
நடிகர்கள் : சிவகுமார், சுமன், S.V. சேகர், மேனகா, தீபா, சோ
Thursday, October 21, 2010
094- உன் காதோடு காதொரு சேதி
பாடலாசிரியர்: வாலி
வசனம் : வியட்நாம் வீடு சுந்தரம்
" நிஜங்கள் " 1982ல் வெளிவந்த திரைப்படம். படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்... அருமையான படமும் கூட..
இந்த படத்தை பற்றி எனது தந்தை மூலமாக தெரிந்து கொண்டேன்...
படத்தை K.S. சேதுமாதவன் இயக்கியுள்ளார். இந்த படம்தான் இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசனின் கடைசி தமிழ் படம்.
இது இவருக்கு கடைசி படமாக இருக்கும் என்று தெரியாமல் தானோ நம் பாலுஜியும் அவரது தங்கையும் இணைந்து இப்பாடலை ஒரு மிகப் பெரிய வெற்றி பாடலாக கொடுத்திருக்கிறார்கள்.
பாடலின் மயக்கம் நம்முள் ஏற்படுத்தும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.....
பாடல் வரிகள்
உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே
உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே
கை சேர்த்தாலென்ன யார் பார்த்தாலென்ன
நான் பாராட்டும் பூந்தென்றலே
ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே
ஒரு நானமும் அச்சமும் நெஞ்சினில் மிஞ்சிடும் வேளையிலே
மனம் போராடுமோ இரு பூவாடுமோ
உனக்கும் எனக்கும் மயக்கும் கொடுக்கும் இளமை தான்
உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே
இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்
மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்
உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே
தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு
இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு
உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எனது வலைப்பூவிற்கு வந்து
இந்தப் பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
எனது வலைப்பூவிற்கு வந்து
இந்தப் பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
http://kalaiyanban.blogspot.com/2010/11/nilavenna.html
Post a Comment