படம் : படிச்சபுள்ள (Padichapulla)
பாடல் : பூங்காற்றே இது போதும் (Poonkaatre ithu pothum)
பாடியவர் : K.S. சித்ரா, மனோ, S.P.பாலசுப்பிரமணியம்
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1989
இயக்குநர் : செந்தில்நாதன்
நடிகர்கள் : அர்ஜூன், சீதா
தயாரிப்பாளர் : கிஷோர்
எடிட்டிங் : ஷ்யாம்
வேலை பளு காரணமாக சில நாட்கள் பாடல்களை சரிவர பதிய இயலவில்லை...
ஒருவழியாக தம் பிடித்துக்கொண்டு என்ன பாடல் பதியலாம் என்று எனது நன்பர் திரு.சித்தார்த்திடம் கேட்டேன்...
அவரது விருப்பம்தான் இந்த பாடல்... நானும் எப்போதோ கேட்ட நியாபகம்... அருமையான பாடல்...
1989ம் ஆண்டு திரு.செந்தில்நாதன் அவர்களின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த ”படிச்சபுள்ள” என்ற திரைப்படத்திற்காக
நம் பாலுஜியும் குயில் பாட்டு சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல்...
பாலுஜி பாடலில் பூங்காற்றை தீண்ட வேண்டாம் என்று அவர் பாட்டுக்கு பாடி விட்டார்.. ஆனால் அவர் உடைய அந்த அமுத கானம்
அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் போராடிக்கொண்டுதான் இருக்கின்றது...
படத்தின் தகவல்கள் எனது நண்பருக்கும் சரிவர தெரியவில்லை..
அருமையான பாடலை இப்போது கேட்டு மகிழுங்கல் நண்பர்களே...
இந்த பாடலின் ஒளிப்பதிவு திரு.இளையராஜாவின் குரலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதியும் கேளுங்கள்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Poongatre_Ithu_Pothum.mp3
பாடல் வரிகள்
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
சரணம் 1
பூ பூத்த சோலை பொன் மாலை வேளை
பாடல் காற்றினில் கேட்டாயோ
ஏதேதோ எண்ணம் தானாக துள்ளும்
ஏக்கம் தான் அதை தீர்ப்பாயோ
நீதானே என் காதல் சங்கீதம்
நான் பாடும் பூமேடை உன் தேகம்
பொன் தாலிதான் தந்து நீ கூடு
என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
கண்ணே... கண்ணே...
வந்தேனே... நானே...
பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
சரணம் 2
காவேரி இங்கு ஓடோடி வந்து
காதல் சங்கமம் ஆகாதோ
பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ
நீ இன்றி பூந்தென்றல் வீசாது
நீ இன்றி என் ஜீவன் வாழாது
நான் என்றும் நீ என்றும் வேறேது
என் ஆசை எப்போதும் மாறாது
அன்பே... அன்பே...
என் வாழ்வே... நீயே...
பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
8 comments:
Nice Song.. After a Long time come back with Wonderful song Arun..
Nice to hear... Hats off....
Regards,
Vaishnav
அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் போராடிக்கொண்டுதான் இருக்கின்றது...
அருமையான பாடல் ..நான் இப்போதான் முதன் முறையா ரசிக்கிறேன்...நன்றி அருண் தம்பி
அருமையான பாடல்த் தெரிவு .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
@Hemalakshmi அக்கா
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..
// அருமையான பாடல் ..நான் இப்போதான் முதன் முறையா ரசிக்கிறேன் //
உண்மையை சொல்லுங்க.. முதல் முறை என்றாலும் எத்தனை தடவை கேட்டீர்கள்..?
கடந்த இரண்டு நாட்களாக எனது ஹம்மிங் பாடலே இந்த பாடல்தான்..
இசைஞானிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....
அன்புடன்,
அருண் குமார்.
@ அம்பாளடியாள் தோழிக்கு
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..
இது தங்களின் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....
அடிக்கடி வரவும் தோழியே...
அன்புடன்,
அருண் குமார்.
அருமையான பதிவிற்கு முதலில் நன்றி அண்ணா...
இந்த பாடல் மனோ சார் பாடியது என்று என் அலுவலக நண்பர்கள் கூறுகிறார்கள்...
என்னாலும் இந்த குரலை மனோ சாருடையது என்று முழுமையாக நம்ப முடியவில்லை..
சற்று தெளிவுபடுத்துங்களே....
அன்புடன்,
சத்யா
அருமை சத்யா...
எனது அலுவலக நண்பர் திரு.கிருபா சாரும் கூட என்னிடம் இது மனோவின் பாடல்தான்
என்று வெகு நேரம் வாதம் செய்தார்...
பிறகு எனக்கே ஒரு சிறு சந்தேகம் வந்துவிட்டது...
பாலுஜியின் யாஹூ(Yahoo) குழுமம் மூலம் நான் பதிந்திருக்கும் இந்த பாடல்
நம் பாலுஜியின் குரலில் பதியப்பட்டது தான்..
ஆனால் படத்தில் மனோ பாடிய பாடல் இடம் பெற்றிருக்கிறதாம்..
எப்பொழுதும் பாலுஜியின் சாயலில் பாடிய மனோவின் பாடல்களை கேட்டு விட்டு
முதல் முறையாக மனோவின் சாயலில் பாலு பாடியிருப்பது மிக அருமை...
@ திரு.கிருபா சார்.. சந்தேகம் தீர்ந்ததா.. ??
இன்னமும் இல்லை எனில் இன்னொரு முறை பாடலை கேட்டுப் பாருங்கள்...
அதுவும்..முதல் சரணத்தில்....
// நீதானே என் காதல் சங்கீதம் //
என்ற வரியில் வரும் ”சங்கீதம்” என்ற வார்த்தையில் வரும் தொடர் சந்ததியை உற்று கவனியுங்கள்...
பாலுவுக்கே உரிய தனி முத்திரை தெரியும்...
இந்த தகவல் அணைத்தையும் எனக்கு அளித்த திரு.மனோகர்(சிவகாசி) அவர்களுக்கு மிக்க நன்றி...
அன்புடன்,
மதுரை அருண்
Post a Comment