இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, June 26, 2011

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா



படம் :   சிம்லா ஸ்பெஷல் ( Simla Special )
பாடல்
உனக்கென்ன மேலே நின்றாய் ( Unekenna Maele Nindrai )
பாடியவர் :  
பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் 
வருடம் : 1982
இயக்குநர் : முக்தா சீனிவாசன்
நடிகர்கள் :
கமல்ஹாசன், எஸ்.வி .சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா

பாடல் வரிகள் : வாலி


காற்றில் தவழும் காலத்தால் அழிக்க முடியாத இசை கீதங்களின் முதல்வர் மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 83வது பிறந்த நாளின் சிறப்புப் தொகுப்பாக இந்த பதிவு.







இசை என்னும் வெள்ளத்தை தமிழ்நாட்டில் பாய வைத்த மெல்லிசை மன்னர் பிறந்தது கேரள மாநிலத்தின் பசுமை படர்ந்த பகுதிகளைக் கொண்ட பாலக்காட்டில்.
மெல்லிசை மன்னரின் முதலெழுத்தொப்பமான (M.S.) M என்பது அவருடைய பிறந்த வீட்டின் பெயரான "மனயங்கத்"-தின் சுருக்கம் தான். பினெழுத்தான S என்பது அவரது
தந்தையின் பெயரான "சுப்ரமனியன்". தனது நான்காம் வயதில் தனது தந்தையை இழந்த மெல்லிசை மன்னருக்கு அடுத்த சோகம் அவரது தாய் ரூபத்தில்... ஆம்.. அவரை வளர்க்க தன்னிடம் தெம்பு இல்லை எனக்கூறி இசைத்தாயகத்தை கொல்வதற்கு முடிவு எடுத்த தருணத்தில் அவரது தாத்தாவின் மூலம் காப்பாற்றப்பட்டு தனது இசை பயனத்தை ஒரு திரையரங்கில் இடை வேளையின் போது சிற்றுண்டி விற்பவராக தொடங்கினார் மெல்லிசை மன்னர்.(அந்த தாத்தாவிற்கும் திரையரங்கிற்கும் நாம் நன்றிக்கடன் பட்டவர்கள்தான்).

நீலகண்ட பாகவதரிடம் தனது இசைத் தேடலை முறையாக கற்று தனது 13வது வயதில் நாடக மேடை நடிகராக தனது பயணத்தை தொடங்கினார்.

இசை உலகில் ஒரு பாடகரவும் மற்றும் நடிகராகவும் ஆக வேண்டும் என்றுதான் திரு.C.R.சுப்புராமன் அவர்களை சந்திக்க ஹார்மோனியத்துடன் சென்றிருக்கிறார்..
அந்த சந்திப்பு தான் அருமையான சுவடுகளை வரலாற்றில் பதித்திருக்கிறது. அங்குதான் திரு.ராமமூர்த்தியை சந்த்தித்தார் விஸ்வநாதன்.
C.R.சுப்புராமன் அவர்களின் திடீர் மறைவால் அப்பொழுது அவர் ஏற்றுக்கொண்ட படத்தின் மீதி வேலைகளை முடிப்பதற்காக இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைந்தனர்.
ஆனால் அப்பொழுது வரை இருவரும் தொழில் ரீதியாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.

A.L ராகவன் தயாரிப்பில் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் ”பணம்”  என்ற படம் எடுக்க முடிவாகி  A.L ராகவன் அவர்களின் முயற்சியால் இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு இசை வரலாற்றில் ஒரு இதிகாசத்தை பதித்தார்.இந்த படம் தான் இருவரும் இணைந்து இசை அமைத்த முதல் படமாக வெளிவந்தது. இந்த படம் தான் நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது படம்.


 திரு.ராமமூர்த்தி அவர்கள் வயதில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை விட பெரியவராக இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று முதலில் விஸ்வநாதன்
பெயர் வருவதை புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டார் திரு.ராமமூர்த்தி.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரின் இசை மழையில் தமிழ் இசை ”பணம்” என்ற படத்தின் மூலம் 1952 முதல் நனைய ஆரம்பித்தது.இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருவராலும் இசையமைக்கப்பட்டது. 16 June 1963-ல் சிவாஜி கணேசனால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
9 July 1965-ம் ஆண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படம் வரை இணைந்து இசை அமைத்த இவர்கள் இப்படத்திற்கு பின் சற்று விலகி 29 வருடங்களுக்குப் பிறகு 1995-ல் சத்யராஜின் ”எங்கிருந்தோ வந்தான்” என்ற திரைப்படம் மூலம் இணைந்தனர்.
மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் "இசைக்காகத்தான் வாத்தியங்களே தவிர வாத்தியங்களுக்காக இசை கிடையாது.. இதுதான் என் பாடல்களின்
மென்மைக்கான ரகசியம்" என்றார்.
மொழிகள் பல கண்டும்,
பல தலைமுறைகள் கடந்தும்,
மாற்றங்கள் பல தந்தும்,
ஆயிரம் ஸ்வரங்கள் தொடுத்தும்,
பல பாடகர்களை கொடுத்தும்,
காலத்தால் அழிக்க முடியாத இசைகளை காற்றலைகளுக்கு தாரை வார்த்த இசைத்தாயின் தலை மகனாம் நம் மெல்லிசை மன்னர் பல்லாண்டு வாழ
”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


மெல்லிசை மன்னரும் பாடும் நிலாவும் இணைந்தது ”சாந்தி நிலையம்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “இயற்கை என்னும் இளையக்கன்னி”
என்ற பாடல் மூலம் தான்.  பாலுஜியின் தமிழ் திரைஉலக முதல் பாடலும் இதுதான். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே “அடிமைப்பெண்” படம் வெளி வந்துவிட்டது.


சிம்லா ஸ்பெஷல் (1982) ஒரு வெள்ளித் திரை நாடகம். முக்தா சீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் வந்த படம்.
நகைச்சுவைக் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத அருமையான படம். கமல்ஹாசன், எஸ்.வி  சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா அவர்களின் நடிப்பு இன்றும் படத்தை நம்மிடையே திரையிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்றும் பலரது விருப்பம்.வாலி எழுதியதுபோல், திரு.விஸ்வநாதன் அவர்களே ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” என்றும் நீர் இசையமைத்தை பாடல்கள் உலகம் உள்ள வரைக்கும் ஒலிக்கும். வாலியின் அர்த்தம் பொதிந்த இனிய வரிகளில் பாலு அட்டகாசமாகப் பாடியிருக்கும் அருமையான பாடல் இதோ!


பாலு பாடும் போது வரிகளின் நடுவே உதிர்க்கும் சிரிப்புக்கே பல தடவை அந்த பாடலை விரும்பிக் கேட்கலாம்.. அப்படி இந்த பாடலிலும் ஒரு இடத்தில்
அவருடைய தனிச் சிறப்பை வெளிப்படுத்தியிருப்பார்.. கேட்டு ரசியுங்கள்...

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... Song Download Link  :   Unakenna_Mele_Nindrai.mp3


இரண்டு இசை இமயங்களுக்கு ஒரு பொன் விழா...




பாலுவின் பொன்னான குரலில் அவரே பாடியிருக்கும் ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” மேடை பாடல்...



கமல்ஹாசன் நடிப்பில் சிம்லா  ஸ்பெஷல்  திரைப்படத்திற்காக...





பாடல் வரிகள்


SPB :   
1......2........3........4..........

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் த
தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மே....லே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மே....லே நின்றா......ய்  ஓ...... நந்த....லா.......லா.........

1 comments:

சண்முகம் said...

அருமையான தொகுப்பு... பகிர்விற்கு மிக்க நன்றி

சண்முகம்

Post a Comment

Visitors of This Blog