இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, June 2, 2011

105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக







படம் :   மறுபடியும் ( Marupadiyum )
பாடல் :  
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.... ( Nalam Vazha )
பாடியவர் :   பத்மபூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இசைப்பிதாமகன் இசைஞானி திரு.இளையராஜா 
வருடம் : 1993
இயக்குநர் : பாலு மகேந்திரா
பாடலாசிரியர் :
வாலி

நடிகர்கள் : அரவிந்த்சாமி, ரேவதி, நிழல்கள் ரவி, ரோகினி

 

 
 
 
 
 
இசைப்பிதாமகன் இசைஞானி திரு.இளையராஜாவின் 67-வது பிறந்த நாள் பதிவாக நம் பாலுஜியின் அருமையான பாடல்....


பன்னைபுரம்” தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அருமையான கிராமம்.. அந்த கிராமம் உருவெடுக்கையில் நினைத்திருக்காது, ஒரு இசைப்பிதாமகனை பெற்றெடுக்கப்போகிறோம் என்று...

அப்படிப்பட்ட அந்த இசைத்தாயகத்திற்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அங்கு உள்ள பொம்மையாசுவாமி என்ற சிவன் ஆலயத்திற்கு சென்ற போதுதான் தெரிந்து கொண்டேன்,
இசை உலகிற்கு ஒரு உன்னதமான கலைஞனை அளித்த இசைத்தாயகம் என்பதை...

1976-ம் வருடம் தனது இசைத்திறனை முதன் முதலாக தமிழ் சினிமாவில் “அன்னக்கிளி” என்ற திரைப்படம் மூலம் ஆரம்பித்து இன்று வரை இசையில் யாரும் அறியமுடியாத
பரிமானத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்... பல ஆயிரம் பாடல்களை கொடுத்தும் இன்றும் பழமை மாறாத மனமுடன் இருப்பது அவரின் தனிச்சிறப்பு...

இளையராஜவும் நம் பாலுஜியும் இணை பிரியாத நண்பர்கள் என்றால் அது மிகையல்ல. ”பாலூட்டி வளர்த்த கிளி” என்ற படத்தில் ”நான் பேச வந்தேன்” என்ற
பாடல் மூலம் இணைந்த இந்த இரு பெரும் இசைநாயகர்கள் இசைக்கு மட்டும் அல்ல நமக்கும் ஒரு பொற்காசுகள்தான். (இந்த பாடல் விரைவில் இந்த தளத்தில் பதியப்படும்.)

 நம் பாலுஜி இளையராஜவை இசைபிசாசு மற்றும் இசை ராட்சஷன் என்று பல மேடையில்(சத்தியமா அவர் திட்டலங்க) கூறுவது அவர்களுக்கிடையில் உள்ள
அதீத நட்பின் இலக்கணம். பாலுஜியை யாரவது பாராட்டினால் அவர் சிரித்துக்கொண்டே இந்த பெருமையெல்லாம் இளையராஜா(சாமியார் என்றும் கூட கூறுவார்),
எம்.ஜி.ஆர் மற்றும் அவரது இசை குருவிற்கு தான் சேரும் என்று சொல்லுவார்..

இளையராஜா ஒரு பேட்டியில் ”இசையமைப்பாளர்கள் முதலில் இசையமைப்பதற்கு முன் அந்த பாடலின் தரம் பல ஆண்டுகளுக்கும் நிலைத்திருக்குமா என்று தன்
மனதுக்குள் இசையமைத்துவிட்டு பிறகு தான் அதை வெளிக்கொணர வேண்டும்...அதுபோல்தான் நான் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரீமிக்‌ஷாக வெளிவந்து ரசிகர்களை
மெய்சிலிர்க்க வைப்பதன் ரகசியம்” என்றார்.. இதுவே இப்பொழுதைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு நல்ல அறிவுரை...

இசைஞானி இளையராஜா இசையமைத்த செஞ்சுரி படங்கள்...

முதல்படம்           - அன்னக்கிளி
நூறாவது படம்      - மூடுபனி
இறநூறாவது படம் - ஆயிரம் நிலவே வா
முன்னூறாவது படம்   - உதயகீதம்
நானூறாவது படம்   - நாயகன்
ஐநூறாவது படம்  - அஞ்சலி
அறநூறாவது படம்  - தேவர்மகன்

மற்ற செஞ்சுரியிகளின் படங்கள் சரியாக தெரியவில்லை.

இசை உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய இசைப்பிதாமனுக்கு ”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

இளையாராஜாவின் பிறந்த நாள் பரிசாக நம் பாலுஜி பாடிய ஒரு அருமையான பாடல்.. இந்த பாடல் இசைஞானிக்கே சமர்ப்பனம்...

காதில் என்றும் ரிங்காரம் போல் ஒலிக்கும் இசையையும் அதைப் பாடவும் இளையராஜா மற்றும் நம் பாலுஜியை யால் தான் முடியும் என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி...


பாலுஜி இளையராஜாமேல் கொண்ட நட்பிற்கு இந்த வீடியோ சாட்சி...



இளையராஜவை ராஷ்கல் மற்றும் ராட்சசன் என்று பாலுஜி உணர்ச்சியுடன் கூறிய வீடியோ பதிவு..



”நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்” பாடலை பாலு நேயர்களுக்காக பாடிய ஒளிப்பதிவு...




Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Nalam_Vazha_Ennalum.mp3



Nalam Vala Ennalum | Upload Music



பாடல் வரிகள்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

சரணம் 1

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவது உண்டு
இதிலென்ன பாவம்... எதற்கிந்த சோகம்...
கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

சரணம் 2

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்




10 comments:

Anonymous said...

Thanks for the wonderful collections

Best Regards
P.Kunalan
Malaysia

Arun Kumar N said...

Welcome to Mr.P.Kunalan..

Thanks for your admiring words. you only sir first person write a comments for this blog from Malaysia.

visit regularly..

Regards,
Arun Kumar N
owner of "Maduraiyin Padum Nila Pathmabhusan Dr.SPB"

விஜய் மோகன் said...

ராஜ கைய வச்சா அது ராங்கா போனதில்ல..

இளையராஜாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அருண் இளையராஜாவின் பிறந்தநாள் பதிவு மிக அருமை... கலக்கீட்டீங்க போங்க...

அன்புடன்,
விஜய் மோகன்,
சிங்கப்பூர்

Saran Dev said...

Awesome Song.... Gud song has been sung by SPB'ji...

wt a singer.. no one is there instead of SPB...

he is a really rocks in all the song...

Such a nice music director like a Ilayaraja.. he is a father of music...
he having a keyboard in his brain..

Nice posting.. Hats of Arun...

Regards,
Saran Dev,
Hyderabad

சங்கர பாண்டியன் said...

அருமையான பதிவு..பதிவிற்கு வாழ்த்துக்கள் அருண்....

பாலு பாடிய பாடல்களில் நான் அதிக்ம் விரும்பிக் கேட்கும் பாடல்..
பாடல்களின் வரிகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும் வகையில் இசையமைக்க
இளையராஜாவாலும், அப்படி அந்த வரிகளை எழுத வாலி அண்ணாவாலும், அதை பாட
நம் பாலுவால் மட்டும் தான் முடியும்...

இளையராஜாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அன்புடன்
சங்கர பாண்டியன்,
மதுரை

Arun Kumar N said...

@ விஜய் மோகன்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

// “ ராஜ கைய வச்சா அது ராங்கா போனதில்ல.. “ //


இந்த பாடலை வாலி சார் எழுத கமல் சார் பாடியிருப்பார்..

இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எழுதிய இந்த வரிகளை இளையராஜா வாலியிடம் மாற்றி எழுதுமாறு
கேட்டிருக்கிறார்.. அவர் பெயர் வந்ததால்தான் அப்படி மாற்ற சொல்லியிருக்கிறார்..
ஆனால் வாலி இதுதான் சரியாக இருக்கிறது என்று சொல்ல விவாதம் வாக்குவாதமாக முற்ற கமலும் ஏதும் கூற முடியாத நிலையில்,
இறுதியில் வென்றது வாலி சார் தான்.. எப்படி என்றால் இந்த பாடல் இடம்பெற்ற அபூர்வ சகோதரர்கள் படத்தில்
கமலின் பெயர் ராஜா என்பதால் இளையராஜா இந்த வரிகளை ஏற்றுக் கொண்டாராம்...


அன்புடன்
மதுரை அருண்

Arun Kumar N said...

@ Saran Dev

Thanks for your valuable Comment.. come and visit regularly our Guruji site..

Best Regards,
Arun Kumar N

Arun Kumar N said...

@ சங்கர பாண்டியன்

வாங்க சங்கர பாண்டியன் அவர்களே... ஒரு வழியா தளத்திற்கு வந்தும் அதற்கு பின்னூட்டமும் அளித்து விட்டீர்கள்..
மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்
மதுரை அருண்

Sathya Bama said...

அருண் அண்ணா, அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள்..

பிரபலமான பாடல்களை பதியுங்கள் என்று சொல்லும் போதெல்லாம்,
அதிகம் கேட்காத பாடல்களையே பதிய விரும்பும் நீங்கள் இப்போது மட்டும் இந்த பாடலை பதிந்தது ஏனோ...

இளையராஜா சாரின் பின்னனிக் குறிப்பின் தொகுப்பு மிக அருமை..

அன்புடன்,
சத்யா

ilaiyaraja said...

raja sir very great

Post a Comment

Visitors of This Blog