இந்த தளத்தின் ஒவ்வொரு பதிவிற்கும் வந்து தனது கருத்தையும் முழு ஆதரவையும்(சத்தியமா அவர் பொட்டி எதுவும் வாங்கல.. நானும் எதுவும் கொடுக்கல.. நம்புங்க மக்களே...) தந்து கொண்டிருக்கும்
ஹேமாலெஷ்மி மேடத்தின் விருப்ப பாடலாக இந்த பாடலை பதிகிறேன்....
1982ம் ஆண்டு திரு.விஜய T.ராஜேந்தர் அவரின் இயக்கத்தில் வெளியான படம் ”ராகம் தேடும் பல்லவி”.
Friday, April 1, 2011
102- மூங்கினிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்
படம் : ராகம் தேடும் பல்லவி ( ragam thedum pallavi )
பாடல் : மூங்கினிலே பாட்டிசைக்கும் ( moonginile paattisaikkum )
பாடியவர் : பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை : திரு.விஜய T.ராஜேந்தர்
இயக்குநர் : திரு.விஜய T.ராஜேந்தர்
பாடலாசிரியர் : திரு.விஜய T.ராஜேந்தர்
வருடம் : 12-03-1982
நடிகர்கள் : சங்கர், ரூபா மற்றும் பலர்
தயாரிப்பு : N.பாலகிருஷ்ணன்
எடிட்டிங் : தேவராஜன்
போட்டோகிராபி : A. சோமசுந்தரம்
இந்த தளத்தில் சற்றைய தினங்களுக்கு முன் பதிந்த என் 100வது பதிப்பான ”வாசமில்லா மலரிது..வசந்தத்தைத் தேடுது” என்ற பாடல் ”ஒரு தலை ராகம்” என்ற படத்தில் நடித்த கதாநாயகன் சங்கர் தான் இந்த படத்திலும் கதாநாயகன்.. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் திரு.விஜய T.ராஜேந்தர் மீண்டும் அவரை வைத்து ”ராகம் தேடும் பல்லவி” என்ற படத்தை இயக்கினார்.. படமும் அமோக வெற்றி பெற்றது...
இயக்குனர்,தயாரிப்பாளர், வசனகர்ததா, நடிகர், இசையமப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய திரு. விஜய் டி.ராஜேந்தர் இசையில்
நமது பாலுஜி பாடிய ஒரு அருமையான மெலோடி பாடல்..
குத்து பாடல்கள் மட்டுமல்லாமல் ஒரு மெலோடி பாடலிலும் தனது ஏற்ற இறக்க பேச்சு நடையை திரு.விஜய T.ராஜேந்தர் அழகாக வடிவமைக்கும் திறன் படைத்தவர்..
இந்த பாடலில் நம் பாலுஜியின் குரலில் மென்மையான ரிதத்தை உணர முடியும்....
பாடலின் இரண்டு சரணங்களும் முடியும் வரியில் திரு.விஜய T.ராஜேந்தரையா அல்லது பாடும் நிலா பாலுஜியை பாராட்டுவதா என்று மனதிற்கு புரியவில்லை..
இருவரும் செய்த ஜாலத்தில் மனம் மயங்கியதால்தான் இந்த குழப்பம்...
// மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது
ஹை ஹை ஹை ஹைய்ய்
அவள் வரம் தரவே செந்நிறமானது //
இந்த வரிகளை உண்ணிப்பாக கேட்டுப் பாருங்கள்.. முதல் சரணத்தின் ரிதத்திதிற்கும் இதற்கும் சற்று சிறிய வித்தியாசத்தி இந்த வரிகளில் நம் பாலுஜி
கொடுத்திருப்பார்...
அருமையான பாடலை விருப்பமாக கேட்டதற்கு ஹேமாலெஷ்மி மேடத்திற்கு என் நன்றிகள்...
பாடலின் கிடார் இசை மற்றும் அருமையான வயோலின் இசையோடு கலந்து நம் பாலுஜியின் குரலைக் கேட்கும் போது அந்த பௌர்னமியை ரசிக்க யாருக்குத்தான் மனம் வரும்...?
அப்படிப்பட்ட அருமையான மெலோடி பாடலை இப்பொழுது கேட்டு ரசியுங்கள்....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Moonginile_Pattisaikkum.mp3
moonginile paattisaikkum | Musicians Available
பாடல் ஒளிக்கோப்பு
பாடல் வரிகள்
SPB : மூங்கினிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை
மூங்கினிலே பாட்டிசைக்கும்ம்ம்ம்ம்ம்
காற்றலையைய்ய்ய்ய்ய்ய் தூதுவிட்டேன்
சரணம் 1
இரு விழி கவிதை நான் தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை ஆஆஆஆ
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
புதுப்புது வார்த்தை தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள் ஆஆஹாஆ
நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கினிலே ஹ ஹ ஹ ஹ ஹ
பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
காற்றலையை ஹே ஹே ஹே ஹே
தூதுவிட்டேன் தரத தரத தரத தரத
சரணம் 2
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ ஆஆஆஆ
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே
இனிப்பென்னும் சுவையை கற்றுக்கொண்டது ஹாஆஆ
மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது
ஹை ஹை ஹை ஹைய்ய்
அவள் வரம் தரவே செந்நிறமானது
மூங்கினிலே ஏ ஏ ஏ ஏ
பாட்டிசைக்கும் ம் ம் ம்
காற்றலையை இ இ இ இ
தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
லர ரா ரா ரா ரா ரா ரா ராஆஆஆஆ
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை
மூங்கினிலே பாட்டிசைக்கும்ம்ம்ம்ம்ம்
காற்றலையைய்ய்ய்ய்ய்ய் தூதுவிட்டேன்
சரணம் 1
இரு விழி கவிதை நான் தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை ஆஆஆஆ
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
புதுப்புது வார்த்தை தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள் ஆஆஹாஆ
நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கினிலே ஹ ஹ ஹ ஹ ஹ
பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
காற்றலையை ஹே ஹே ஹே ஹே
தூதுவிட்டேன் தரத தரத தரத தரத
சரணம் 2
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ ஆஆஆஆ
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே
இனிப்பென்னும் சுவையை கற்றுக்கொண்டது ஹாஆஆ
மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது
ஹை ஹை ஹை ஹைய்ய்
அவள் வரம் தரவே செந்நிறமானது
மூங்கினிலே ஏ ஏ ஏ ஏ
பாட்டிசைக்கும் ம் ம் ம்
காற்றலையை இ இ இ இ
தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
லர ரா ரா ரா ரா ரா ரா ராஆஆஆஆ
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
Lyrics in English
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
avaL muga vadivai manam paarthapinney
andha pournamiyai ivan rasipathillai (2)
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
avaL muga vadivai manam paarthapinney
andha pournamiyai ivan rasipathillai (2)
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
Saranam 1
Iru vizhi kavidhai dhinasari padithen
poruL athai ariya vazhi yethum illai aaa aaa.....
pudhu pudhu vaarthai dhinam dhinam thedi
paarvayil amudhaai avaL vadithaaL
neer alai polave neela vizhi kolangaL
nenjai neeratave nerudi thaalatave
enn karpanaiku vidhai thoovinaaL oi oi oi
enn karpanaiku vidhai thoovinaaL
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
Saranam 2
aadai ondru eduthu thendralukku udutha
minnalena neLindha menagayo aaa.........
sengarumbuchaarum sevidhazhil thaney
inipennum suvayai katru kondadhu
maadhu idhazh idathile maadhulangani
muthai sivapaakavey maadhavam seidhadhu
avaL varam tharave senniramanadhu oioioi
avaL varam tharave senniramanadhu
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
avaL muga vadivai manam paarthapinney
andha pournamiyai ivan rasipathillai lalala.......
Iru vizhi kavidhai dhinasari padithen
poruL athai ariya vazhi yethum illai aaa aaa.....
pudhu pudhu vaarthai dhinam dhinam thedi
paarvayil amudhaai avaL vadithaaL
neer alai polave neela vizhi kolangaL
nenjai neeratave nerudi thaalatave
enn karpanaiku vidhai thoovinaaL oi oi oi
enn karpanaiku vidhai thoovinaaL
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
Saranam 2
aadai ondru eduthu thendralukku udutha
minnalena neLindha menagayo aaa.........
sengarumbuchaarum sevidhazhil thaney
inipennum suvayai katru kondadhu
maadhu idhazh idathile maadhulangani
muthai sivapaakavey maadhavam seidhadhu
avaL varam tharave senniramanadhu oioioi
avaL varam tharave senniramanadhu
Moongilile paatisaikum
kaatralayai thoodhu viten
avaL muga vadivai manam paarthapinney
andha pournamiyai ivan rasipathillai lalala.......
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அருமையான பாடல்... வெகு நாட்கள் கழித்து கேட்கும் வாய்ப்பை தந்ததற்கு மிக்க நன்றி அருண்..
அன்புடன் ,
விஜய் மோகன்
சிங்கப்பூர்
அருண் தம்பி.... மிகவும் மகிழ்ச்சி......இந்த பாடல் கேட்கும் போது என்னையே நான் மறந்து விடுவேன்.....பாலு சார் வாய்ஸ்...சான்சே இல்ல....இன்னும் ரம்மியமான பாடல்களை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டுகிறேன்....அன்புடன் அக்கா.....
அருண் அண்ணா அருமையான பாடல் பதிவு...
பாடலை நேயர் விருப்பமாக கேட்டதற்கு Hemalakshmiஅக்காவிற்கு மிக்க நன்றி...
ஒரு பாடலை முதன் முறையாக கேட்கும் போதே பிடிக்கிறதென்றால் அது
பாலு சாரின் குரலில் வந்த பாடலாகத்தான் இருக்க முடியும்...
பாலு சாரின் மீது உள்ள அதீத அன்பினால் அப்படி கூறி விட்டேன்...
மற்ற பாடகர்களின் பாடல்களும் ஒரு இமயம் தான்...
அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி
அன்புடன்,
சத்யா
@விஜய் மோகன்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...
//வெகு நாட்கள் கழித்து கேட்கும் வாய்ப்பை தந்ததற்கு மிக்க நன்றி அருண்..//
எனக்கும் அந்த வாய்பை கொடுத்ததற்கு ஹேமாலெஷ்மி அக்காவிற்கு மிக்க நன்றி...
அன்புடன்,
மதுரை அருண்
@ஹேமாலெஷ்மி அக்காவிற்கு...
பாசமுடன் அருண் தம்பி என்றும் அன்புடன் அக்கா என்றும் உறவு தந்தமைக்கு மிக்க நன்றி...
பாலுஜியின் குரலில் மூழ்கி இத்தனை நாள் ஒரு மயக்கத்தை ரசித்திருக்கிறேன்...
இப்பொழுது நல்ல உறவுகளையும், பாசத்தையும் ருசித்துக் கொண்டு இருக்கிறேன்...
கோவை ரவீ அண்ணா, தோழி பிரஷா, சிங்கப்பூர் விஜய் அண்ணா, கோவை கோபாலகிருஷ்ணன் சார், கோவை கீதா நாராயணன் மேடம்,
அபர்ணா மேடம், நிறம் மாறாதா பூக்கள் என்று வரும் அன்பர், மதுரை ராமு, மதுரை செல்வா அண்ணா, மதுரை பூபதி என பல உறவுகள் இத்ல் அடக்கம்.
குறிப்பிட மறந்த மற்ற உறவுகள் என் இதயத்தில் மறந்து போகவில்லை...
//இந்த பாடல் கேட்கும் போது என்னையே நான் மறந்து விடுவேன்.....
பாலு சார் வாய்ஸ்...சான்சே இல்ல....
இன்னும் ரம்மியமான பாடல்களை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டுகிறேன்//
இப்படி மயங்கிய பல பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்கா பதிகிறேன்... ஊக்கத்திற்கும் , பாசத்திற்கும் மிக்க நன்றி ஹேமாலெஷ்மி அக்கா
அன்புடன்,
மதுரை அருண்
@சத்யா
//பாலு சாரின் மீது உள்ள அதீத அன்பினால் அப்படி கூறி விட்டேன்... //
என் தங்கை அல்லவா... அப்படித்தான் இருப்பாய்...
அன்புடன்,
மதுரை அருண்
இன்னும் ரம்மியமான பாடல்களை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டுகிறேன்....அன்புடன் sree
வாங்க sree...
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க.. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...
அன்புடன்,
மதுரை அருண்
Post a Comment