இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, March 10, 2011

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்




படம்        :   மாதங்கள் ஏழு ( Mathangal ezhu )
பாடல்      
மணித்தூறல் போடும் மழைக்கால ( Manithooral Podum Mazhaikala)
பாடியவர்    :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை        :   வித்யாசாகர் 
வருடம்   :  
09-07-1993

இயக்குநர்    :  யூகி சேது
 தயாரிப்பாளர்        :   A.சுந்தரம்
பாடலாசிரியர்    :   வாலி
வசனம்            :   பாலகுமரன்
பதிப்பாளர்  :  
G.ஜெயசந்திரன்

படத்தொகுப்பு    :  நித்யன்
கலை        :  மோகனம்
நடிகர்கள்     Yogi sethu, Ramya Krishanan, Nazar, Poornam viswanathan, Manorama





இந்த பாடலின் ஒலி நாடாவையும்(MP3), படத்தின் தகவல்களையும் எனக்கு அளித்த திரு.விகாஷ் காம்ப்ளி(Vikas Kamble, Mumbai) அவர்களுக்கு என் முதல் நன்றி...

மனதை மயக்கும் ரம்மியமான இசைகலந்த பாடல்களை கேட்கும் போது அதற்கு என்ன விளக்கம், அதாங்க கருத்து  எழுதுவதென்றே புரியாது.
அப்படிப்பட்ட ரம்மையமான இசையோடு சேர்ந்து நம் பாடும் நிலாவின் குரல் சேர்ந்தால் என்ன செய்வது.
அப்படிதாங்க இந்த பாடலுக்கு நான் முழித்தேன். பாடலுக்கு கருத்து எழுத நினைத்தாலே பாடலும் பாடலின் இசையும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

யூகி சேது கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்றே இப்பாடலைக் கேட்டு படத்தின் தகவல்களை திரட்டும் போது தான் தெரிந்துகொண்டேன்.
அதோடு இப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார் என்பதும் அடுத்த ஆச்சரியம். படம் இயக்கும் அளவிற்கு அவர் திறமைவாய்ந்தவர் தான் என்றாலும் கதாநாயகன் என்பது அவரின் அதீத துனிச்சல்..
இப்பொழுதைய படங்களில் அவருடைய இணைக் கதாப்பாத்திரம் பலருக்குப் பிடித்தமான ஒன்று. அதுவும் அஜித் நடித்த அசல் படத்தின் காமெடியன் தோற்றம் அருமை.


Mani Thooral Podum-SPB-Mathangal ezhu | Upload Music


பாடல் வரிகள்



SPB : மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே.....
ஆஆஆஆஆஆஆ.....
மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்


சரணம் 1

யார் எதற்கு மூலம் என்று
யாரும் சொல்லத்தான் சாத்தியம்...
வேர்இருக்கும் இருக்கமெல்லாம்
வேரைக் கண்களால் பார்த்திடும்...
ஆயிரம் செடி, கொடி, நாளும் காக்குது
யார் நடும் விதை, இதை, யாரைக் கேட்பது...
ஒரு தாய் எனைச் சுமந்தாள்...
அவள் தந்தை பேர் சொல்ல மறந்தால்...
இது என் தவறா... குளிர் காற்றே கூறு....

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்


சரணம் 2

மாளிகையோ மண் குடிலோ
ரெண்டும் சொந்தம் தான் எங்களுக்கு...
பூக்கடையோ சாக்கடையோ (சிரிப்பு)
வேதம் இல்லையே தென்றலுக்கு...
நான் அதன் இனம் என நாளும் வாழ்கிறேன்
காற்றென தினம் தினம் கானம் சொல்கிறேன்...
நடு வீதியில் நடப்பேன்...
வானம் பாடி போல் இசைப் படிப்பேன்...
மனம் போல் பிழைக்கும்.. ஒரு ஜீவன் நான் தான்...

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே.....



9 comments:

skyflower said...

Super 9ice work

Arun Kumar N said...

வாருங்கள் skyflower அவர்களே...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....

அன்புடன்
மதுரை அருண்

விஜய் மோகன் said...

100வது பாடல் பதியபோவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அருண்...
இந்த பாடலில்
// பூக்கடையோ சாக்கடையோ //
என்ற வார்த்தைக்கு அப்புறம் பாலு சிரித்த சிரிப்பு பாடலுக்கு மேலும் ஒரு அழ்கைச் சேர்த்திருக்கிறது....

அன்புடன்
விஜய் மோகன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Word verification நீக்கிவிடுங்கள்

Arun Kumar N said...

தோழி பிரஷாவின் வருகை இத்தளத்திற்கு மேலும் ஒரு வலிமையை சேர்த்திருக்கிறது,...
வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி தோழி அவ்ர்களே....

// Word verification நீக்கிவிடுங்கள் //

இதற்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை தோழி...
சற்று தெளிவாக கூறுங்களேன்....

அன்புடன்
மதுரை அருண்

மதுரை பூபதி said...

அருமையான பாடல் .... செவிகளில் தேனமுதாக நம் பாலுவின் குரல்...

படத்தின் தகவல்கள் அணைத்தும் அருமை...

அன்புடன்
மதுரை பூபதி

வீரமணி said...

அருமையான பாடல்... மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி...
இப்பாடல் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்...

பாலுவின் குரல் இப்படி இன்னும் எத்தனை அறியாத படங்களில் புதைந்து கிடக்கிறதோ..?

அன்புடன்
வீரமணி

தமிழ்த்தோட்டம் said...

அருமையான பாடல் பகிர்வுக்கு ரொம்ப நன்றி

Arun Kumar N said...

மறுமொழிக்கு மிக்க நன்றி தமிழ்த்தோட்டம் யூஜின் அவர்களே...

@ நன்பர் வீரமணி அவர்களே கவலை படாதீர்கள்.. பாலுஜி பாடி வெளிவராத படங்களிலிருந்தும் பாடல்கள் உங்களுக்காக கத்திருக்கின்றன...
விரைவில் நேயர்களுக்காக இங்கே பதியப்படும்...

அன்புடன்
மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog