இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, March 5, 2011

098- மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு



படம்        :   தாயம் ஒன்னு (Dhayam Onnu)
பாடல்       :  
மனதிலே ஒரு பாட்டு (Manadhile Oru Paatu)
பாடியவர்    :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா
இசை        :   இசைஞானி இளையராஜா 
வருடம்   :  
1988

இயக்குநர்    :  பீட்டர் செல்வகுமார்
நடிகர்கள்    
Arjun, Pallavi, Nirosha



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Manadhile_Oru_Pattu.mp3

 அருமையான மெலோடி பாடல்..
அலுவலக பணி முடிந்து  நேற்று வீடு திரும்பும் பொழுது Hello FM(106.4)ல் இந்த பாடலை கேட்டேன்.. கேட்டவுடன் தெரிந்து கொண்டது பாடியவர் நம் பாலுஜியேதான் என்று.
குரலின் இனிமை அந்த பேருந்து பயணத்தின் களைப்பையும் மறக்கச் செய்துவிட்டது.

1988ம் வருடம் இசைஞானியின் இசையில் நம் பாலுஜி மற்றும் பி.சுசீலா அம்மாவின் குரலில் தாயம் ஒன்னு என்ற படத்துக்காக இந்த பாடல் பதியப்பட்டது.
பாடலின் இனிமை நம்மை ஒரு தனி உலகிற்கே கொண்டு சென்று விடுவது போல் தோன்றும்.

இனிமையாக நம் பாலுஜியின் குரல் தேன் போல் பாய்ந்து கொண்டிருக்கையில் முதல் சரணத்தின் இறுதியில் பி.சுசீலா அம்மாவின் குரல் கேட்டவுடன்
மயக்கத்தின் உச்சத்திற்கே சென்று விட்டது போல் தோன்றும்... நீங்களும் இப்பொழுது இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்...



Manathile_Oru_Pattu | Online Karaoke

பாடல் வரிகள்



மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோளம்..
விழி பூவும் மலரும் காலை நேரம்...
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

சரணம் 1

காற்று பூவோடு கூடும்
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்
பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இமைகளில் பல காலம்
இசைகளில் அது கூறும்
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

சரணம் 2

நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம் பூவே...
இசையிலே அழைத்தேனே...
இனைமைகள் தொடர்கதை.. இனி சோகம் ஏது சேரும் போது...

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோளம்..
விழி பூவும் மலரும் காலை நேரம்...
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு



10 comments:

மதுரை பூபதி said...

அருமையான பாடல் பதிவு.. பாலுவின் குரல் பாடலின் மென்மையை மேலும்
மெருகேற்றியிருக்கிறது.. எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்....

வாழ்த்துக்களுடன்,
மதுரை பூபதி

Dasan said...

பாலுவின் குரலில் நான் அதிகம் விரும்பிக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..
பாலு மற்றும் சுசீலா அம்மாவின் பாடல் தொகுப்புகளில் இந்த பாடல் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்...

Anonymous said...

பாடலுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டம் மிக அர்மை அருண் அவர்களே..
பாடலை முதல் முறையாக கேட்கிறேன்.. உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்..

இப்படிக்கு ,
உங்களை வாழ்த்தும் உள்ளம்

Arun Kumar N said...

ஹலோ பூபதி எப்புடி இருக்கீங்க ? தங்களது பின்னூட்டத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.
செல்வா அண்ணா,பாண்டி அண்ணா எல்லோரும் எப்புடி இருக்காங்க ? அவர்களையும் பிளாக் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போகச் சொல்லுங்க...

Arun Kumar N said...

@Anonymous அவர்களே தங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி. அடிக்கடி வரவும்...
தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

அன்புடன்,
மதுரை அருண்

Hemalakshmi said...

அருமையான பாடல் பதிவு.. பாலுவின் குரல் பாடலின் மென்மையை மேலும்
மெருகேற்றியிருக்கிறது.. எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்....
நன்றி அருண் தம்பி....

Arun Kumar N said...

வாங்க Hemalakshmi மேடம்.. தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..
அடிக்கடி வரவும்..

பூபதி கொடுத்த கருத்தை தாங்கள் பங்கிற்கு அளித்தது மிக்க மகிழ்ச்சி...

@ Dasan பின்னூட்ட பதிவுக்கு மிக்க நன்றி...
நீங்கள் கூறியது போல் பாலுஜி மற்றும் சுசீலா அம்மாவின் பாடல்களில் இது பலரது விருப்பம்..

அன்புடன்
மதுரை அருண்

http://www.maduraispb.blogspot.com/

மதுரை பூபதி said...

ரொம்ப நன்றி அருண்....
செல்வா அண்ணாவிடம் உன்னோட நலம் விருப்பத்தை கூறினேன்... சந்தோஷப்பட்டார்...
அப்புறம் 100 வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
100வது பாடல் பாலுஜி,நம் மதுரை,மீனாஷி அம்மன் கோவில் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது நம்
மதுரை நன்பர்களின் விருப்பம்...
தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... அந்த பாடலை நம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த
இரவு இன்னிசை நிகழ்ச்சியில் பாலு பாடினார்.... அருமையான தருனம்....

அன்புடன்
மதுரை பூபதி

தமிழ்த்தோட்டம் said...

அருமையான பாடல் தொகுப்புங்கள்.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Arun Kumar N said...

வாருங்கள் தமிழ்தோட்ட மலர் திரு யூஜின் அவர்களே...

தங்களது வருகைக்கும் ப்திவிற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி வரவும்...


அன்புடன்
மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog