இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, September 21, 2010

092- திருத்தேரில் வரும் சிலையோ




படம் :   நான் வாழவைப்பேன் ( Naan Vazhavaipen )
பாடல் :   
திருத்தேரில் வரும் சிலையோ.... ( Thirutheril Varum Silaiyo )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  P.சுசீலா 
இசை :   மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா 
வருடம் : 1979
இயக்குநர் : D. யோகனந்த்
நடிகர்கள் :
செவாலியே சிவாஜி கனேஷன், ரஜினிகாந்த், K.R.விஜயா
தயாரிப்பு : வள்ளி நாயகி பிளிம்ஸ்






”நான் வாழவைப்பேன்” என்ற திரைப்படம் 1979ஆம் ஆண்டு வெளிவந்தது. திரு.யோகனந்த் டைரக்சனில், மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைப்பில் மோஹனம் ராகத்தில் ராஜா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
பத்ம ஸ்ரீ பாலுஜியும் பத்மவிபூசன் சுசீலா அம்மாவும் இணைந்து பாடிய “திருத்தேரில் வரும் சிலையோ” என்ற இப்பாடலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. இப்பாடலின் மதிப்பும் திருத்தேரில் வரும் சிலை போன்றது.

”நான் வாழவைப்பேன்” திரைப்படத்தில் செவாலியே சிவாஜி கணேஷன் அவர்கள் ரவீ என்ற கதாபாத்திரத்தில் ஊனமுற்ற தங்கைக்கு அண்ணணாகவும் ஒரு பயண முகவர் பணிமனை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளையில் இருக்கும் கட்டியால் சிறிது காலத்தில் இறந்து விடுவோம்
 என்று தெரிய வருவதும் குடும்பத்தை காப்பாற்ற இவர் எடுக்கும் முயற்சிகளும், ரஜினிகாந்த்தின் எதார்த்தமான நடிப்பும் திரைக்கதைக்கு வலுச்சேத்திருக்கும்.

1974ம் வருடம் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான மஜ்பூர் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

இந்த பாடலை நம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால் செவாலியே சிவாஜியே நம் காதருகே வந்து பாடி நடிப்பது போன்ற பிரம்மை தோன்றும். பாலுஜியின் குரலில் அந்த திருத்தேரில் வரும் சிலையோ வரிகள் தங்கத் தேரில் வரும் குரலோ என்று எண்ண வைக்கும்.. 

ஒரு அருமையான மெலோடி பாடலை இப்போது கேட்டு ரசியுங்கள்...


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Thiru_Theril_varum.mp3


பாடல் ஒளி வடிவம்



பாடல் வரிகள்




திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ..



Tamil Blogs & Sites





5 comments:

விஜய் மோகன் said...

அருமையான பாடல்... திருத்தேரில் வரும் நம் பாலுவின் குரல் இசைஞானி இளையராஜாவின் கை வண்ணத்தில் ஒரு அழகியாக சிலையாக வந்துள்ளது
பாடல் பதிவிற்கு மிக்க நன்றி

அன்புடன்
விஜய் மோகன்

வனிதா said...

பாலுவின் சிறந்த பாடல்களில் இந்த பாடலுக்கு அதிக மதிப்பென் கொடுக்கலாம்...
நல்ல பாடல் பதிவிற்கு நன்றி.....

அன்புடன்
வனிதா

Arun Kumar N said...

வனிதா அவர்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி... இந்த பாடலில் சிவாஜி அவர்களின் நடிப்பும் ஒரு தனி சுகம் தான்....
விஜய் மோகன் அவர்களே அடுத்த பாடல் பற்றிய தங்களின் மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி...

நேயர்கள் தங்களது விருப்ப பாடல்களை வலது பக்கத்தில் உள்ள நேயர் விருப்பத்தில் பதியலாம்..

மதுரை அருண்

முத்து கிருஷ்ணன் said...

பாடல் வரிகளின் பதிவு அற்புதம்... தங்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது...

வாழ்த்துக்களுடன்
முத்து கிருஷ்ணன்

Anonymous said...

என்னைக்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள்.

Post a Comment

Visitors of This Blog