Friday, September 17, 2010
088- காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
படம் : வாழ்க்கை ( Vaazhkai )
பாடல் : காலம் மாறலாம் நம் காதல் மாறுமா.... ( Kaalam Maaralaam )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : C.V. ராஜேந்திரன்
நடிகர்கள் : சிவாஜி கனேஷன் , அம்பிகா
பாடல் : காலம் மாறலாம் நம் காதல் மாறுமா.... ( Kaalam Maaralaam )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : C.V. ராஜேந்திரன்
நடிகர்கள் : சிவாஜி கனேஷன் , அம்பிகா
வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ”காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்ற பாடலை பாலுஜியும் , வாணி ஜெயராம் அம்மாவும் இணைந்து பாடியிருப்பார்கள்...
இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்ததால் இந்த பாடலை பற்றி எந்தவொரு விமர்சனமும் பன்ன தேவையில்லை... அருமையான பாடல்...
நம் இதயத்தை அந்த வான் மேகங்களுக்குள் அழைத்துச் சென்று மீண்டும் இந்த பூமியில் கொண்டு வந்து விடும் பாடல் இப்போது உங்கள் செவிகளுக்காக....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Kalam_Maralam.mp3
பாடல் வரிகள்
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பார்வை போதும்
இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பார்வை போதும்
இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமோ
புல்லின் மீது பூ வீழ்ந்தால்
ஓசையென்ன கேட்குமோ
மல்லிகைக்கொடி தோளைச்சுற்றுதே
தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே
உடலில் காந்தம் கொண்டு
தழுவும் தங்கம் ஒன்று
இதழ்களில் ஈரமானதின்று
இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பாதை போதும்
இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் என்னும் தேனாற்றில்
நாமிரண்டு ஓடங்கள்
வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை
வையகத்தின் பாடங்கள்
உள்ளம் கைகளால் உன்னை மூடுவேன்
உன்னை காக்கவே மண்ணில் வாழுவேன்
வாழும் காலம் யாவும்
மடியில் சாய்ந்தால் போதும்
தோள்களில் தூங்கும் பாரிஜாதம்
இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பார்வை போதும்
இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இந்த பாடலை காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது...
அருமையான பாடல் பதிவிற்கு நன்றி அருண் அவர்களே
விஜய் மோகன்
சிங்கப்பூர்
அண்ணா அருமையான பாடல்.. முதல் முறையாக கேட்கிறேன்..
படம் பார்த்ததாக நினைவே இல்லை.. பாலு அங்கிள் குரல் அருமையாக இருந்தது இந்த பாடலில்...
அன்புடன்
சத்யா
//அண்ணா அருமையான பாடல்.. முதல் முறையாக கேட்கிறேன்.. //
இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் படியான குருஜீயின் குரல். காலம் மாறலாம் நம் குருஜியின் குரல் என்றும் மாறாது மேன் மேலும் மெருகேறும்.
அருமையான பாடல்... பாடலை அத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...
அன்புடன்
அமுதா
உண்மைதான் ரவீ அண்ணா .... பாலு அங்கிளின் குரல் வரும் தலைமுறைகளுக்கும் ஒரு வரப் பிரசாதம்.
பின்னனி பாடகி சுவர்னலாதாவின் மரணம் தாங்க முடியாத வருத்தம்.. அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரன்னலை
தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
சத்யா
ரவீ அண்ணா மற்றும் சத்யா சொன்னது போல் வரும் தலைமுறைகளுக்கு பாலுஜியின் குரல் வரப்பிரசாதம் தான்..
சுவர்ணலதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்புதான்.. மல்லிசை மன்னரின் கண்டுபிடிப்பல்லவா...
முதல் பாடாலான “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடல் தொடங்கி ரஹ்மானின் இசையில் பாடிய “போறாலே பொன்னுதாயி “ பாடலுக்கு
கிடைத்த தேசிவிருது உள்பட “ஆட்டமா தேரோட்டமா, ராக்கமா கையத்தட்டு, உசிலம்பட்டிபென்குட்டி”.. பாடல் அணைத்துமே வெற்றிப் பாடல்தான்...
நம் பாலுஜியுடன் இணைந்து பாடிய ”போவோமா ஊர்கோலம்” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது.. அந்த குரல் இப்பொழுது மின்னிமறைந்து விட்டது..
”மாலையில் யாரோ மனதோடு” பாட இனி யார் வருவார்கள்...
அன்புடன்
மதுரை அருண்
அருண்குமார் மற்றும் சத்யா..
ஸ்வர்னலதா குரலில் ஒரு வித மயக்கம் வித்தியாசம் காண முடியும் யாருடனும் ஒப்பிட்டு பார்க்கமுடியாத தனித்தன்மை வாய்ந்த நல்ல மெலொடியான குரல். மேலும் விபரங்களுக்கு வானொலியில் வந்த நிகழ்ச்சியின் கீழே சுட்டியில் தொகுப்பு நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள்.
http://paasaparavaikal.blogspot.com/2010/09/94.html
Post a Comment