Monday, June 4, 2012
109- இசை வேந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று 66வது பிறந்தநாள் காணும் எங்கள் “பாடும் நிலா” பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு
”மதுரையின் பாடும் நிலா” குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாலுவின் பிறந்த நாள் பரிசாக அவர் பாடிய ஒரு நல்ல பாடலை(ஒண்ணா..? ஆயிரம் பாட்டு இருக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது..)
பதியலாம் என்று தான் நினைத்தேன்,.. ஆனால் அதை விட அவரைப் பற்றிய சில தகவல்களை பறிமாறினால் அது இன்னும்
சுவாரஷ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,..
ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் (தற்போது ஆந்திரப் பிரதேசம்) அன்றைய தேதியில் பிறந்த ஒரு மாமனிதன்
இசைத்தாயின் அருளால் 66 வருடங்களை (அதாவது இன்று) கடந்து இசை உலகில் ஒரு பாடும் நிலாவகா உலா வருவார் என்று அன்றைய தினம்
பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து
முன்னணிப் பாடகராகத் திகழ்ந்துவருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய "ஆயிரம் நிலவே வா" பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது
15 December 1966 அன்று தான் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் திரையுலக இசை சங்கமத்தில் பாட ஆரம்பித்த நாள். அவருடைய இசை குரு
திரு.S.P.கோதண்டபானி அவைகளின் இசையில் ”ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமனா” என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடினார்.
ஒரு பாடல் இசை போட்டியில் (super singer competition) திரு.S.P.கோதண்டபானி முதல் பாடகராக S.P.பாலசுப்பிரமணியம் அவர்களை தேர்ந்தெடுத்தார்.
தமிழ் இசை உலகில் 1969-ல் சாந்தி நிலையம் திரைப்படத்திற்காக ”இயற்கை என்னும் இளையக்கன்னி” என்ற பாடல் மூலம் தன்னுடைய குரல் தடத்தை பதித்த அவர் தமிழ் மொழி ரசிகர்கள் அணைவரையும் இன்று வரை தன் குரலால் வசியப்படுத்தி வைத்திருக்கிறார் என்றால் அது மிகாயாகாது...
ஒரே நாளில் 23 பாடல்களை பாடி சாதனை புரிந்தவர் நம் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள். அதில் 15க்கும் மேற்பட்ட பாடல் டூயட் பாடலாக P.சுசீலா அம்மாவுடன்
இணைந்து பாடியிருந்தார்.
கன்னட இசியமைப்பாளர் திரு.உப்பேந்திர குமார் அவர்களின் இசையில் 16 பாடல்களை 6 மணி நேரத்தில் பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.
திரு.ராம் லெஷ்மனன் இசியில் 6 பாடல்களை 4 மணி நேரத்தில் மும்ம்பையில் நடந்த ரெக்கார்டிங்கில் பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.
ஒரே நாளில் மூன்று இடங்களில் நடந்த ரெக்கார்டிங்கில் 17 பாடல்களை திரு.ஆனந்த் மிலிந்த் அவர்களுக்காக பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.
சங்கராபரன்ம் படத்திற்காக S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் பெற்ற நேஷனல் அவார்ட் விருது இன்றும் அவருக்கு மறக்க முடியாத விருதுகளில் ஒன்று என்று பலமுறை கூறியுருக்கிறார்.
கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும்
உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.
நான்கு சகாப்தங்களாக தொடர்ந்துவரும் ஒரு பாடகர் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை
இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்று “மதுரையின் பாடும் நிலா” குழு சார்பாக மீண்டும் ஒரு முறை வாழ்த்திகிறேன்.
Monday, February 27, 2012
109- ராக்கால வேளையில... ராசா நீ வாடயில...
படம் : மைதிலி என்னை காதலி (Maithili Ennai Kadhali)
பாடல் : ராக்கால வேளையில...ராசா நீ வாடயில... (Rakkala Veliyila)
பாடியவர்கள் : பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம் , ஜானகியம்மா
இசை : திரு.டி.ஆர்.விஜய ராஜேந்திரர்
வருடம் : 1986
இயக்குநர் : திரு.டி.ஆர்.விஜய ராஜேந்திரர்
நடிகர்கள் : திரு.டி.ஆர்.விஜய ராஜேந்திரர் , அமலா
அட உங்க கோபம் எனக்கு புரியுதுங்க... உங்களோட வேலைக்கு நடுவுளையும் நம் பாலுஜிக்காக உருவாக்கப்பட்ட இந்த தளத்தை எத்தனை தடவ வந்து பாத்திருப்பீங்க.. எந்த ஒரு புதுப் பதிவும் இல்லாம என்ன கொஞ்சம் திட்டி கூட இருப்பீங்க இல்லையா.. அட விடுங்க பாஸ்.. ஊருக்குள்ள நம்மள பத்திக் கேட்டுப்பாருங்க..
நாங்க அசிங்கப்படாத இடமே இல்ல...
நம்ம பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும்... ரொம்ப நாளாச்சே.. என்ன பாடல் பதியாலாம் என்று கடந்த வாரம் சனிக்கிழமை ரேடியோ மிர்சி எப்.எம்-ஐ டியூன் பண்ணிய போது இந்த பாடலை கேட்டேன்... கேட்டவுடன் நம் பாலுஜிதான் என்று உள்ளம் ஒரு படபடப்புடன் ரசிக்க தொடங்க, அடடா யாருடையது
இந்த பெண் குரல் ? ஒருவேளை ஜானகி அம்மா இப்படி ஏதாவது வித்தியாசமாக பாடியிருப்பாரோ என்று அருகில் இருந்த
என் அண்ணணிடம் கேட்க , ஒருவேளை இல்ல.. இது ஜானகி அம்மாவின் குரலே என்று அவன் சொல்லி முடிக்கவும்,
நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடல் பற்றிய தகவல்களைக் கொடுத்துவிட்டார்..
1986-ம் வருடம் திரு.டி.ஆர். ராஜேந்திரர் அவர்களின் இயக்கத்தில் அவரே இசையமைத்த படம் தான் “ மைதிலி என்னை காதலி ”. திரு.டி.ஆர். ராஜேந்திரர் அவர்களும் நம்முடைய அமலாவும் இணைந்து நடித்த இந்த படத்தில்தான் இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது..
ஒரு கிலு கிலுப்பான பாடல் என்றே சொல்லலாம்.. நம் பாலுஜிக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன ? இந்த பாடலை எவ்வாறு பாடுவது என்று..?
அவருக்கே உரிய தனி பானியில் கொஞ்சும் சுவையும் கொடுத்து அழகாக பாடியிருப்பார்.
உங்கலுக்காக இதோ அந்த பாடல்... கேட்டு ரசியுங்கள் அன்பர்களே......

Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Rakkala_Velaiyila_Maithili_Ennai_Kathali_SPB,Janaki.mp3
பாடல் வரிகள்
SPB :
ராக்கால வேளையிலராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது....அஹ்
இதம் தேடி போராடுது
ராக்கால வேளையிலே என்
ராசாத்தி ஆடையிலே
என் மேனி சூடாகுது
எத தேடி போறாடுது
ஏய்..ஏய்..ஏய்..ஏய்ய்.....ஏய்.ஏய்.ஏய்
ஆ..அட..ஓ..அட..ம்ம்..அட..ஏ.....ஹோ. ஹோ. ஹோ. ஹோ
தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ...ஹா..ஆ
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோ.வ்வ்..
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
என் மேனி சூடாகுது
எத தேடி போறாடுது
ஹே...தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ..ஆ..ஆஅ
ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோ வ்வ்
அடி ராக்கால வேளையிலே
என் ராசாத்தி நீ ஆடையிலே
இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
ராக்கால வேளையிலே
என் ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது
ஹ எத தேடி போராடுது
Saturday, December 17, 2011
108- தேவி நீயே... உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
படம் : ஆசைகள் ( Asaigal )
பாடல் : தேவி நீயே..உந்தன் திருகோயில் ( Devi Neeye Unthan )
பாடியவர் : பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை : சங்கர் கனேஷ்
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : ரவீந்தர் , சத்யகலா
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Devi Neeye_Asaigal.mp3
பாடல் : தேவி நீயே..உந்தன் திருகோயில் ( Devi Neeye Unthan )
பாடியவர் : பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை : சங்கர் கனேஷ்
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : ரவீந்தர் , சத்யகலா
சோக பாடலையும் ஒரு வித உணர்ச்சியோடு பாடுவதை தனது தனி பானியாகவே கொண்டிருக்கும் நம் பாலுஜி இந்த பாடலிலும் அதை
சிறப்பாகவே செய்திருக்கிறார்.
திரு.சங்கர் கனேஷ் அவர்கள் இசையில் அழகாக அமைந்த இந்த பாடலுக்கு மொத்தம் மூன்று சரணங்கள். படத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும் பாடலின்
மென்மை அருமை.
அருமையான ஒரு சோக பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே....
சிறப்பாகவே செய்திருக்கிறார்.
திரு.சங்கர் கனேஷ் அவர்கள் இசையில் அழகாக அமைந்த இந்த பாடலுக்கு மொத்தம் மூன்று சரணங்கள். படத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும் பாடலின்
மென்மை அருமை.
அருமையான ஒரு சோக பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Devi Neeye_Asaigal.mp3
பாடல் வரிகள்
SPB :
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே
தேவி நீயே...ஏஏஏஏ,,,,
சரணம் 1
இன்று உன் வாசல் நான் தேடி வந்தேன்
என்றும் உன் வாழ்க்கை பாதையில் நிழலாகுவேன்
உன்னைப்பார்த்தால் பொங்கும் இன்பம்
உன்னை நினைக்காத நெஞ்சத்தில் சுகமில்லையே
உந்தன் திருநாமமே என் திருமந்திரம்
உந்தன் திருநாமமே என் திருமந்திரம்
நித்தம் பூஜையும் வேதமும் உனக்காகவே
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே
தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏ
சரணம் 2
ஜென்மம் பலகோடி நான் கொண்டபோதும்
உந்தன் பூஞ்சோலை பூவென மனம் வீசுவேன்
எந்தன் வாழ்வின் ராகம் நீயே
உந்த அபிஷேகச் சந்தனமும் நானாகுவேன்
தென்றல் காற்றாகியே உன்னை நான் தீண்டுவேன்
தென்றல் காற்றாகியே உன்னை நான் தீண்டுவேன்
உன் வானத்தில் வெண்மதி நானாகுவேன்
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே
தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏ
சரணம் 3
என்னம் ஈடேற வழிகாட்ட வேண்டும்
மண்ணில் எந்நாளூம் மங்கலம் பெறவேண்டுமே
நெஞ்சில் ஆடும் ஆசைகள் கோடி அவை
நிறைவேறும் வேளையை எதிர்பார்க்கிறேன்
இன்று அதற்காகவே ஒரு வரம் கேட்கிறேன்
இன்று அதற்காகவே ஒரு வரம் கேட்கிறேன்
வண்ண மாமழை நீயென அருள் செய்வதேன்
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே
தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏஏஏஏ.

Thursday, September 15, 2011
107- பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
படம் : படிச்சபுள்ள (Padichapulla)
பாடல் : பூங்காற்றே இது போதும் (Poonkaatre ithu pothum)
பாடியவர் : K.S. சித்ரா, மனோ, S.P.பாலசுப்பிரமணியம்
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1989
இயக்குநர் : செந்தில்நாதன்
நடிகர்கள் : அர்ஜூன், சீதா
தயாரிப்பாளர் : கிஷோர்
எடிட்டிங் : ஷ்யாம்
வேலை பளு காரணமாக சில நாட்கள் பாடல்களை சரிவர பதிய இயலவில்லை...
ஒருவழியாக தம் பிடித்துக்கொண்டு என்ன பாடல் பதியலாம் என்று எனது நன்பர் திரு.சித்தார்த்திடம் கேட்டேன்...
அவரது விருப்பம்தான் இந்த பாடல்... நானும் எப்போதோ கேட்ட நியாபகம்... அருமையான பாடல்...
1989ம் ஆண்டு திரு.செந்தில்நாதன் அவர்களின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த ”படிச்சபுள்ள” என்ற திரைப்படத்திற்காக
நம் பாலுஜியும் குயில் பாட்டு சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல்...
பாலுஜி பாடலில் பூங்காற்றை தீண்ட வேண்டாம் என்று அவர் பாட்டுக்கு பாடி விட்டார்.. ஆனால் அவர் உடைய அந்த அமுத கானம்
அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் போராடிக்கொண்டுதான் இருக்கின்றது...
படத்தின் தகவல்கள் எனது நண்பருக்கும் சரிவர தெரியவில்லை..
அருமையான பாடலை இப்போது கேட்டு மகிழுங்கல் நண்பர்களே...
இந்த பாடலின் ஒளிப்பதிவு திரு.இளையராஜாவின் குரலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதியும் கேளுங்கள்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Poongatre_Ithu_Pothum.mp3
பாடல் வரிகள்
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
சரணம் 1
பூ பூத்த சோலை பொன் மாலை வேளை
பாடல் காற்றினில் கேட்டாயோ
ஏதேதோ எண்ணம் தானாக துள்ளும்
ஏக்கம் தான் அதை தீர்ப்பாயோ
நீதானே என் காதல் சங்கீதம்
நான் பாடும் பூமேடை உன் தேகம்
பொன் தாலிதான் தந்து நீ கூடு
என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
கண்ணே... கண்ணே...
வந்தேனே... நானே...
பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
சரணம் 2
காவேரி இங்கு ஓடோடி வந்து
காதல் சங்கமம் ஆகாதோ
பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ
நீ இன்றி பூந்தென்றல் வீசாது
நீ இன்றி என் ஜீவன் வாழாது
நான் என்றும் நீ என்றும் வேறேது
என் ஆசை எப்போதும் மாறாது
அன்பே... அன்பே...
என் வாழ்வே... நீயே...
பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
Sunday, June 26, 2011
106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
படம் : சிம்லா ஸ்பெஷல் ( Simla Special )
பாடல் : உனக்கென்ன மேலே நின்றாய் ( Unekenna Maele Nindrai )
பாடியவர் : பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1982
இயக்குநர் : முக்தா சீனிவாசன்
நடிகர்கள் : கமல்ஹாசன், எஸ்.வி .சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா
பாடல் வரிகள் : வாலி
காற்றில் தவழும் காலத்தால் அழிக்க முடியாத இசை கீதங்களின் முதல்வர் மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 83வது பிறந்த நாளின் சிறப்புப் தொகுப்பாக இந்த பதிவு.
இசை என்னும் வெள்ளத்தை தமிழ்நாட்டில் பாய வைத்த மெல்லிசை மன்னர் பிறந்தது கேரள மாநிலத்தின் பசுமை படர்ந்த பகுதிகளைக் கொண்ட பாலக்காட்டில்.
மெல்லிசை மன்னரின் முதலெழுத்தொப்பமான (M.S.) M என்பது அவருடைய பிறந்த வீட்டின் பெயரான "மனயங்கத்"-தின் சுருக்கம் தான். பினெழுத்தான S என்பது அவரது
தந்தையின் பெயரான "சுப்ரமனியன்". தனது நான்காம் வயதில் தனது தந்தையை இழந்த மெல்லிசை மன்னருக்கு அடுத்த சோகம் அவரது தாய் ரூபத்தில்... ஆம்.. அவரை வளர்க்க தன்னிடம் தெம்பு இல்லை எனக்கூறி இசைத்தாயகத்தை கொல்வதற்கு முடிவு எடுத்த தருணத்தில் அவரது தாத்தாவின் மூலம் காப்பாற்றப்பட்டு தனது இசை பயனத்தை ஒரு திரையரங்கில் இடை வேளையின் போது சிற்றுண்டி விற்பவராக தொடங்கினார் மெல்லிசை மன்னர்.(அந்த தாத்தாவிற்கும் திரையரங்கிற்கும் நாம் நன்றிக்கடன் பட்டவர்கள்தான்).
நீலகண்ட பாகவதரிடம் தனது இசைத் தேடலை முறையாக கற்று தனது 13வது வயதில் நாடக மேடை நடிகராக தனது பயணத்தை தொடங்கினார்.
இசை உலகில் ஒரு பாடகரவும் மற்றும் நடிகராகவும் ஆக வேண்டும் என்றுதான் திரு.C.R.சுப்புராமன் அவர்களை சந்திக்க ஹார்மோனியத்துடன் சென்றிருக்கிறார்..
அந்த சந்திப்பு தான் அருமையான சுவடுகளை வரலாற்றில் பதித்திருக்கிறது. அங்குதான் திரு.ராமமூர்த்தியை சந்த்தித்தார் விஸ்வநாதன்.
C.R.சுப்புராமன் அவர்களின் திடீர் மறைவால் அப்பொழுது அவர் ஏற்றுக்கொண்ட படத்தின் மீதி வேலைகளை முடிப்பதற்காக இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைந்தனர்.
ஆனால் அப்பொழுது வரை இருவரும் தொழில் ரீதியாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
A.L ராகவன் தயாரிப்பில் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் ”பணம்” என்ற படம் எடுக்க முடிவாகி A.L ராகவன் அவர்களின் முயற்சியால் இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு இசை வரலாற்றில் ஒரு இதிகாசத்தை பதித்தார்.இந்த படம் தான் இருவரும் இணைந்து இசை அமைத்த முதல் படமாக வெளிவந்தது. இந்த படம் தான் நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது படம்.
திரு.ராமமூர்த்தி அவர்கள் வயதில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை விட பெரியவராக இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று முதலில் விஸ்வநாதன்
பெயர் வருவதை புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டார் திரு.ராமமூர்த்தி.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரின் இசை மழையில் தமிழ் இசை ”பணம்” என்ற படத்தின் மூலம் 1952 முதல் நனைய ஆரம்பித்தது.இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருவராலும் இசையமைக்கப்பட்டது. 16 June 1963-ல் சிவாஜி கணேசனால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
9 July 1965-ம் ஆண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படம் வரை இணைந்து இசை அமைத்த இவர்கள் இப்படத்திற்கு பின் சற்று விலகி 29 வருடங்களுக்குப் பிறகு 1995-ல் சத்யராஜின் ”எங்கிருந்தோ வந்தான்” என்ற திரைப்படம் மூலம் இணைந்தனர்.

மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் "இசைக்காகத்தான் வாத்தியங்களே தவிர வாத்தியங்களுக்காக இசை கிடையாது.. இதுதான் என் பாடல்களின்
மென்மைக்கான ரகசியம்" என்றார்.
மென்மைக்கான ரகசியம்" என்றார்.
மொழிகள் பல கண்டும்,
பல தலைமுறைகள் கடந்தும்,
மாற்றங்கள் பல தந்தும்,
ஆயிரம் ஸ்வரங்கள் தொடுத்தும்,
பல பாடகர்களை கொடுத்தும்,
காலத்தால் அழிக்க முடியாத இசைகளை காற்றலைகளுக்கு தாரை வார்த்த இசைத்தாயின் தலை மகனாம் நம் மெல்லிசை மன்னர் பல்லாண்டு வாழ
”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
மெல்லிசை மன்னரும் பாடும் நிலாவும் இணைந்தது ”சாந்தி நிலையம்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “இயற்கை என்னும் இளையக்கன்னி”
என்ற பாடல் மூலம் தான். பாலுஜியின் தமிழ் திரைஉலக முதல் பாடலும் இதுதான். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே “அடிமைப்பெண்” படம் வெளி வந்துவிட்டது.
சிம்லா ஸ்பெஷல் (1982) ஒரு வெள்ளித் திரை நாடகம். முக்தா சீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் வந்த படம்.
நகைச்சுவைக் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத அருமையான படம். கமல்ஹாசன், எஸ்.வி சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா அவர்களின் நடிப்பு இன்றும் படத்தை நம்மிடையே திரையிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்றும் பலரது விருப்பம்.வாலி எழுதியதுபோல், திரு.விஸ்வநாதன் அவர்களே ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” என்றும் நீர் இசையமைத்தை பாடல்கள் உலகம் உள்ள வரைக்கும் ஒலிக்கும். வாலியின் அர்த்தம் பொதிந்த இனிய வரிகளில் பாலு அட்டகாசமாகப் பாடியிருக்கும் அருமையான பாடல் இதோ!

பாலு பாடும் போது வரிகளின் நடுவே உதிர்க்கும் சிரிப்புக்கே பல தடவை அந்த பாடலை விரும்பிக் கேட்கலாம்.. அப்படி இந்த பாடலிலும் ஒரு இடத்தில்
அவருடைய தனிச் சிறப்பை வெளிப்படுத்தியிருப்பார்.. கேட்டு ரசியுங்கள்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as... Song Download Link : Unakenna_Mele_Nindrai.mp3
இரண்டு இசை இமயங்களுக்கு ஒரு பொன் விழா...
பாலுவின் பொன்னான குரலில் அவரே பாடியிருக்கும் ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” மேடை பாடல்...
கமல்ஹாசன் நடிப்பில் சிம்லா ஸ்பெஷல் திரைப்படத்திற்காக...
பாடல் வரிகள்
SPB :
1......2........3........4..........
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் த
தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
உனக்கென்ன மே....லே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்
உனக்கென்ன மே....லே நின்றா......ய் ஓ...... நந்த....லா.......லா.........

Subscribe to:
Posts (Atom)