இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, June 4, 2012

109- இசை வேந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

6 comments




இன்று 66வது பிறந்தநாள் காணும் எங்கள் “பாடும் நிலா” பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு
”மதுரையின் பாடும் நிலா” குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

பாலுவின் பிறந்த நாள் பரிசாக அவர் பாடிய ஒரு நல்ல பாடலை(ஒண்ணா..? ஆயிரம் பாட்டு இருக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது..)
பதியலாம் என்று தான் நினைத்தேன்,.. ஆனால் அதை விட அவரைப் பற்றிய சில தகவல்களை பறிமாறினால் அது இன்னும்
சுவாரஷ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,..


ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் (தற்போது ஆந்திரப் பிரதேசம்) அன்றைய தேதியில் பிறந்த ஒரு மாமனிதன்
இசைத்தாயின் அருளால் 66 வருடங்களை (அதாவது இன்று) கடந்து  இசை உலகில் ஒரு பாடும் நிலாவகா உலா வருவார் என்று அன்றைய தினம்
பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து
முன்னணிப் பாடகராகத் திகழ்ந்துவருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய "ஆயிரம் நிலவே வா" பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது


15 December 1966 அன்று தான் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் திரையுலக இசை சங்கமத்தில் பாட ஆரம்பித்த நாள். அவருடைய இசை குரு
திரு.S.P.கோதண்டபானி அவைகளின் இசையில் ”ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமனா” என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடினார்.

ஒரு பாடல் இசை போட்டியில் (super singer competition) திரு.S.P.கோதண்டபானி முதல் பாடகராக S.P.பாலசுப்பிரமணியம் அவர்களை தேர்ந்தெடுத்தார்.

தமிழ் இசை உலகில் 1969-ல் சாந்தி நிலையம் திரைப்படத்திற்காக  ”இயற்கை என்னும் இளையக்கன்னி” என்ற பாடல் மூலம் தன்னுடைய குரல் தடத்தை பதித்த அவர் தமிழ் மொழி ரசிகர்கள் அணைவரையும் இன்று வரை தன் குரலால் வசியப்படுத்தி வைத்திருக்கிறார் என்றால் அது மிகாயாகாது...

ஒரே நாளில் 23 பாடல்களை பாடி சாதனை புரிந்தவர் நம் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள். அதில் 15க்கும் மேற்பட்ட பாடல் டூயட் பாடலாக P.சுசீலா அம்மாவுடன்
இணைந்து பாடியிருந்தார்.

கன்னட இசியமைப்பாளர் திரு.உப்பேந்திர குமார் அவர்களின் இசையில் 16 பாடல்களை 6 மணி நேரத்தில் பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

திரு.ராம் லெஷ்மனன் இசியில் 6 பாடல்களை 4 மணி  நேரத்தில் மும்ம்பையில் நடந்த ரெக்கார்டிங்கில் பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் நடந்த ரெக்கார்டிங்கில் 17 பாடல்களை திரு.ஆனந்த் மிலிந்த் அவர்களுக்காக பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.


சங்கராபரன்ம் படத்திற்காக S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் பெற்ற நேஷனல் அவார்ட் விருது இன்றும் அவருக்கு மறக்க முடியாத விருதுகளில் ஒன்று என்று பலமுறை கூறியுருக்கிறார்.

கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும்
உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.


நான்கு சகாப்தங்களாக தொடர்ந்துவரும் ஒரு பாடகர் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை


இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்று “மதுரையின் பாடும் நிலா”  குழு சார்பாக மீண்டும் ஒரு முறை வாழ்த்திகிறேன்.

Visitors of This Blog