இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Friday, February 25, 2011

097-நண்பனே எனதுஉயிர் நண்பனே

6 comments


படம் :   சட்டம் ( Sattam )
பாடல் :  
நண்பனே எனதுஉயிர் நண்பனே ( Nanbane Enathu Uyir Nanbane )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,திரு.மலேசியா வாசுதேவன்.
இசை :   கங்கை அமரன் 
வருடம் :
1983

இயக்குநர் : K.விஜயன்
நடிகர்கள் :
கமல் ஹாசன், மாதவி, சரத்பாபு மற்றும் பலர்




Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Nanbane_Enathu_Uyir.mp3


”என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல....”

என்று பாடிய உள்ளம் இன்று நிரந்தரமாக உறங்கிவிட்டது... இதை சொல்வதற்கு நமது உள்ளமும் தான் தாங்கவில்லை...

“தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா
கல்லாலே அணை போட்டு.. ஹோய் இந்த காவேரி அடங்காது “

உண்மைதான் சொல்ல வந்த சேதியை தன் குரலால், இசையின் மூலமாய் சொல்லத் தோன்றிய உமக்கு கல் மட்டுமின்றி எதன் மூலமும்
அணை போட முடியாது என்பதற்கு உமது ஆயிரக்கணக்கான பாடலே சாட்சி...


மறைந்த பின்னனி பாடகர் திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பலபேர் நெஞ்சில்
நீங்கா இடம் பிடித்திருக்கும் என்றால் அது மிகை அல்ல....


தமிழ் இசை வரலாற்றில் தன்னுடைய குரலால் அணைவரது நெஞ்சத்தையும் நெகிழ வைத்த மாபெரும் பின்னனி பாடகர் திரு.மலேசியா வாசுதேவன்
அவர்களின் உடல் இந்த மன்னுலகை விட்டு சென்றிருந்தாலும், அவரது குரல் என்றும் இந்த காற்றலைகளில் உலாவிக் கொண்டு தான் இருக்கும்.

திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு பேட்டியில் ஒரு சில பாடல்களாவது நான் பாட வேண்டும் என்ற கனவோடு தான் மலேசியாவில் இருந்து
இந்தியா வந்ததாகவும் நினைத்ததை விட பல பாடல்கள் வெற்றிப் பாடல்களாக பாடியதும், திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பல வெற்றிப்பாடல்கள்
பாடியதாகவும் அதற்கு தமிழ் மக்களுக்கும் இசைஅமைப்பாளர்களுக்கும் அவர் நன்றிக்கடன் பாட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
(தகவலுக்கு மிக்க நன்றி:ரேடியோ மிர்சி FM)

திரு.மலேசியா வாசுதேவன்  அவர்களுக்காக இந்த பாமாலை :

அந்த ”ஆகாய கங்கை ” இந்த “அள்ளி தந்த பூமி” தந்த எங்களது திரு.மலேசியா வாசுதேவன் அவர்களே ”ஒரு தங்க ரதத்தில்” மலேசியாவில் இருந்து இந்தியா வந்து “டெல்லி to மெட்ராஸ்” என்ற படத்தின் மூலம் பின்னனி பாடகராய் அறிமுகமாகி
”பொதுவாக என்மனசு தங்கம்” என்று வந்த ”(வா வா) வசந்தமே..சுகம் தரும் சுகந்தமே.. “  “சிங்கம் ஒன்று புறப்பட்டதே...” என்று புயலாய் எழுந்து
”தென் கிழக்கு சீமை” வரை தனது குரலால் ”பூ பூக்கும் ஓசை”யையும் கேட்க வைத்த ”செவ்வந்தி பூ முடிச்ச சின்னையா“ எங்களுக்காக மீண்டும் அந்த
“பூங்காற்று திரும்புமா.. “ ??? மீண்டும் உனது குரலில்... ???



”தத்து தந்த கன்னே உன்ன தப்பு சொல்லக் கூடாது... மனம் தாங்காது... (அடி ஆத்தாடி..)”
”தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி”
”பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்”
”தென்மதுரை வைகை நதி” பாலுஜியுடன் இணைந்து பாடிய பாடல்...
”பட்டுக்கோட்டை நம் ஆளு...” பாலுஜியுடன் இணைந்து பாடிய பாடல்...
”எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்...”
“ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை வா..”
“காதல் வைபோகமே... கானும் நன்னாளிலே...”
“காதல் வந்திடுச்சு... ஆசையில் ஓடி வந்தேன்..”
   
என்று அவர் பாடிய பல பாடல்கள் என்றும் அழியாதவை...

நம் பாலுஜி பாடிய “கல்யான மாலை கொண்டாடும் பெண்னே” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலிலும் சிறிய பாடலாக
புது புது அர்த்தங்கள் படத்திற்காக பதியப்பட்டது..


”என்னம்மா கன்னு செளக்கியமா... ஆமாம்மா கன்னு செளக்கியந்தான்...”

இந்த பாடலை பல மேடைக் கச்சேரிகளில் நமது பாலுஜியும், மலேசியா வாசுதேவன் அவர்களும் பாடியிருக்கிறார்கள்..
ஆனால் இந்த வரிகளுக்குப் பதிலாக

மலேசியா வாசுதேவன் அவர்கள்...

”என்னம்மா பாலு செளக்கியமா...”

 நம் பாலுஜி அதற்கு...

”ஆமாம்மா வாசு செளக்கியந்தான்...”

என்று பாடி அசத்திய நிகழ்வுகள் அருமையான தருணங்கள்...


தமிழ் இசை வரலாற்றில் தன்னுடைய குரலடி தடத்தை மிகச் சிறப்பாக பதித்து விட்டு மன்னுலகை விட்டு வின்னுலகிற்கு
சென்றிருக்கும் திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நம் பாலுஜியுடன் இணைந்து
அவர் பாடிய ஒரு அருமையான மெலோடி பாடல்.....

நம் பாலுஜி மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் நட்பை பிரதிபலிக்கும் பாடலுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.. கங்கை அமரன் இசையில்
1983ம் வருடம் சட்டம் என்ற படத்திற்காக இந்த பாடல் பதியப்பட்டது..

பாடலை எழுதியவர் பெயர் தெரியாவிட்டாலும் வரிகளை இருவரும் இணைந்து எதார்த்தமாகவும் ஒரு ரசனையுடனும் பாடியுருப்பது அவர்களது நட்பின்
ஆழத்தின் பிரதிபலிப்பு... இதோ அந்த பாடல்  நம் செவிக்காக இங்கே...இப்பொழுது...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


பாடல் வரிகள்



SPB    :    நண்பனே எனதுஉயிர் நண்பனே
                நீண்ட நாள் உறவிது...
                இன்று போல் என்றுமே தொடர்வது...ஆ
M.Vasudevan : நண்பனே எனதுஉயிர் நண்பனே
                        நீண்ட நாள் உறவிது...
                        இன்று போல் என்றுமே தொடர்வது...ஆ


சரணம் 1

SPB    :    ஒரு கிளையில் ஊஞ்சலாடும்
                இரு மலர்கள் மேனியாம்...
                பிரியாமல் நாம் உறவாடலாம்...
M.Vasudevan : ஒரு விழியில் காயம் என்றால்
                        மறு விழியும் கண்ணீர் சிந்தும்
                        உனக்காக நான்... எனக்காக நீ...
SPB    :     இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓசை


M.Vasudevan : இன்றும் என்றும் கேட்க வேண்டும் எனது ஆசை... ஹே...ஹே...
SPB    :      நண்பனே எனதுஉயிர் நண்பனே
                 நீண்ட நாள் உறவிது...
                 இன்று போல் என்றுமே தொடர்வது...



சரணம் 2

M.Vasudevan :யாரும் உண்னை சொந்தம் கொண்டால்
                       இடையில் வந்த உரிமை என்றால்
                      அதற்காக நான் வழக்காடுவேன்...
 
SPB    :           யாரும் உன்னை திருடிச் செல்ல...
                       பார்த்து நிற்கும் தோழன் அல்ல...
                       உனக்காக நான்... காவல் நிற்பேன்...
 
M.Vasudevan :எனது மனமும் எனது நினைவும் உனது வசமே... 
SPB    :            நமக்கு ஏது பிரித்து பார்க்க இரண்டு மனமே... ஹே...ஹே...

நண்பனே எனதுஉயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது...
இன்று போல் என்றுமே தொடர்வது...

லால லா லால லா... லாலலா.....



Visitors of This Blog