இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, December 17, 2011

108- தேவி நீயே... உந்தன் திருகோயில் மணிதீபம் நான்

2 comments
படம் :   ஆசைகள்  ( Asaigal )
பாடல் :  
தேவி நீயே..உந்தன் திருகோயில் ( Devi Neeye Unthan )
பாடியவர் :    பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   சங்கர் கனேஷ் 
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் :
ரவீந்தர் , சத்யகலா



சோக பாடலையும் ஒரு வித உணர்ச்சியோடு பாடுவதை தனது தனி பானியாகவே கொண்டிருக்கும் நம் பாலுஜி இந்த பாடலிலும் அதை
சிறப்பாகவே செய்திருக்கிறார்.

திரு.சங்கர் கனேஷ் அவர்கள் இசையில் அழகாக அமைந்த இந்த பாடலுக்கு மொத்தம் மூன்று சரணங்கள். படத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும் பாடலின்
மென்மை அருமை.

அருமையான ஒரு சோக பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே....

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Devi Neeye_Asaigal.mp3




Devi Neeye | Upload Music


பாடல் வரிகள்


SPB : 
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏ,,,,

சரணம் 1

இன்று உன் வாசல் நான் தேடி வந்தேன்
என்றும் உன் வாழ்க்கை பாதையில் நிழலாகுவேன்
உன்னைப்பார்த்தால் பொங்கும் இன்பம்
உன்னை நினைக்காத நெஞ்சத்தில் சுகமில்லையே
உந்தன் திருநாமமே என் திருமந்திரம்
உந்தன் திருநாமமே என் திருமந்திரம்
நித்தம் பூஜையும் வேதமும் உனக்காகவே

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏ

சரணம் 2

ஜென்மம் பலகோடி நான் கொண்டபோதும்
உந்தன் பூஞ்சோலை பூவென மனம் வீசுவேன்
எந்தன் வாழ்வின் ராகம் நீயே
உந்த அபிஷேகச் சந்தனமும் நானாகுவேன்
தென்றல் காற்றாகியே உன்னை நான் தீண்டுவேன்
தென்றல் காற்றாகியே உன்னை நான் தீண்டுவேன்
உன் வானத்தில் வெண்மதி நானாகுவேன்

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏ

சரணம் 3

என்னம் ஈடேற வழிகாட்ட வேண்டும்
மண்ணில் எந்நாளூம் மங்கலம் பெறவேண்டுமே
நெஞ்சில் ஆடும் ஆசைகள் கோடி அவை
நிறைவேறும் வேளையை எதிர்பார்க்கிறேன்
இன்று அதற்காகவே ஒரு வரம் கேட்கிறேன்
இன்று அதற்காகவே ஒரு வரம் கேட்கிறேன்
வண்ண மாமழை நீயென அருள் செய்வதேன்

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏஏஏஏ.

Thursday, September 15, 2011

107- பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே

8 comments


படம் :   படிச்சபுள்ள (Padichapulla)
பாடல் :  
பூங்காற்றே இது போதும் (Poonkaatre ithu pothum)
பாடியவர் :   K.S. சித்ரா, மனோ, S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   இசைஞானி இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : செந்தில்நாதன்
நடிகர்கள் :
அர்ஜூன், சீதா
தயாரிப்பாளர் : கிஷோர்
எடிட்டிங் : ஷ்யாம்  



         
வேலை பளு காரணமாக சில நாட்கள் பாடல்களை சரிவர பதிய இயலவில்லை...
ஒருவழியாக தம் பிடித்துக்கொண்டு என்ன பாடல் பதியலாம் என்று எனது நன்பர் திரு.சித்தார்த்திடம் கேட்டேன்...
அவரது விருப்பம்தான் இந்த பாடல்... நானும் எப்போதோ கேட்ட நியாபகம்... அருமையான பாடல்...

1989ம் ஆண்டு திரு.செந்தில்நாதன் அவர்களின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த ”படிச்சபுள்ள” என்ற திரைப்படத்திற்காக
நம் பாலுஜியும் குயில் பாட்டு சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல்...

பாலுஜி பாடலில் பூங்காற்றை தீண்ட வேண்டாம் என்று அவர் பாட்டுக்கு பாடி விட்டார்.. ஆனால் அவர் உடைய அந்த அமுத கானம்
அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் போராடிக்கொண்டுதான் இருக்கின்றது...

படத்தின் தகவல்கள் எனது நண்பருக்கும் சரிவர தெரியவில்லை..

அருமையான பாடலை இப்போது கேட்டு மகிழுங்கல் நண்பர்களே...


இந்த பாடலின் ஒளிப்பதிவு திரு.இளையராஜாவின் குரலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதியும் கேளுங்கள்...





Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Poongatre_Ithu_Pothum.mp3



Poongatre idhu pothum | Online Karaoke


பாடல் வரிகள்



பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே

பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

சரணம் 1

பூ பூத்த சோலை பொன் மாலை வேளை
பாடல் காற்றினில் கேட்டாயோ
ஏதேதோ எண்ணம் தானாக துள்ளும்
ஏக்கம் தான் அதை தீர்ப்பாயோ
நீதானே என் காதல் சங்கீதம்
நான் பாடும் பூமேடை உன் தேகம்
பொன் தாலிதான் தந்து நீ கூடு
என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
கண்ணே... கண்ணே...
வந்தேனே... நானே...

பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

சரணம் 2

காவேரி இங்கு ஓடோடி வந்து
காதல் சங்கமம் ஆகாதோ
பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ
நீ இன்றி பூந்தென்றல் வீசாது
நீ இன்றி என் ஜீவன் வாழாது
நான் என்றும் நீ என்றும் வேறேது
என் ஆசை எப்போதும் மாறாது
அன்பே... அன்பே...
என் வாழ்வே... நீயே...

பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
 
 
 
 

Sunday, June 26, 2011

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

1 comments


படம் :   சிம்லா ஸ்பெஷல் ( Simla Special )
பாடல்
உனக்கென்ன மேலே நின்றாய் ( Unekenna Maele Nindrai )
பாடியவர் :  
பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் 
வருடம் : 1982
இயக்குநர் : முக்தா சீனிவாசன்
நடிகர்கள் :
கமல்ஹாசன், எஸ்.வி .சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா

பாடல் வரிகள் : வாலி


காற்றில் தவழும் காலத்தால் அழிக்க முடியாத இசை கீதங்களின் முதல்வர் மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 83வது பிறந்த நாளின் சிறப்புப் தொகுப்பாக இந்த பதிவு.







இசை என்னும் வெள்ளத்தை தமிழ்நாட்டில் பாய வைத்த மெல்லிசை மன்னர் பிறந்தது கேரள மாநிலத்தின் பசுமை படர்ந்த பகுதிகளைக் கொண்ட பாலக்காட்டில்.
மெல்லிசை மன்னரின் முதலெழுத்தொப்பமான (M.S.) M என்பது அவருடைய பிறந்த வீட்டின் பெயரான "மனயங்கத்"-தின் சுருக்கம் தான். பினெழுத்தான S என்பது அவரது
தந்தையின் பெயரான "சுப்ரமனியன்". தனது நான்காம் வயதில் தனது தந்தையை இழந்த மெல்லிசை மன்னருக்கு அடுத்த சோகம் அவரது தாய் ரூபத்தில்... ஆம்.. அவரை வளர்க்க தன்னிடம் தெம்பு இல்லை எனக்கூறி இசைத்தாயகத்தை கொல்வதற்கு முடிவு எடுத்த தருணத்தில் அவரது தாத்தாவின் மூலம் காப்பாற்றப்பட்டு தனது இசை பயனத்தை ஒரு திரையரங்கில் இடை வேளையின் போது சிற்றுண்டி விற்பவராக தொடங்கினார் மெல்லிசை மன்னர்.(அந்த தாத்தாவிற்கும் திரையரங்கிற்கும் நாம் நன்றிக்கடன் பட்டவர்கள்தான்).

நீலகண்ட பாகவதரிடம் தனது இசைத் தேடலை முறையாக கற்று தனது 13வது வயதில் நாடக மேடை நடிகராக தனது பயணத்தை தொடங்கினார்.

இசை உலகில் ஒரு பாடகரவும் மற்றும் நடிகராகவும் ஆக வேண்டும் என்றுதான் திரு.C.R.சுப்புராமன் அவர்களை சந்திக்க ஹார்மோனியத்துடன் சென்றிருக்கிறார்..
அந்த சந்திப்பு தான் அருமையான சுவடுகளை வரலாற்றில் பதித்திருக்கிறது. அங்குதான் திரு.ராமமூர்த்தியை சந்த்தித்தார் விஸ்வநாதன்.
C.R.சுப்புராமன் அவர்களின் திடீர் மறைவால் அப்பொழுது அவர் ஏற்றுக்கொண்ட படத்தின் மீதி வேலைகளை முடிப்பதற்காக இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைந்தனர்.
ஆனால் அப்பொழுது வரை இருவரும் தொழில் ரீதியாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.

A.L ராகவன் தயாரிப்பில் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் ”பணம்”  என்ற படம் எடுக்க முடிவாகி  A.L ராகவன் அவர்களின் முயற்சியால் இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு இசை வரலாற்றில் ஒரு இதிகாசத்தை பதித்தார்.இந்த படம் தான் இருவரும் இணைந்து இசை அமைத்த முதல் படமாக வெளிவந்தது. இந்த படம் தான் நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது படம்.


 திரு.ராமமூர்த்தி அவர்கள் வயதில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை விட பெரியவராக இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று முதலில் விஸ்வநாதன்
பெயர் வருவதை புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டார் திரு.ராமமூர்த்தி.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரின் இசை மழையில் தமிழ் இசை ”பணம்” என்ற படத்தின் மூலம் 1952 முதல் நனைய ஆரம்பித்தது.இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருவராலும் இசையமைக்கப்பட்டது. 16 June 1963-ல் சிவாஜி கணேசனால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
9 July 1965-ம் ஆண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படம் வரை இணைந்து இசை அமைத்த இவர்கள் இப்படத்திற்கு பின் சற்று விலகி 29 வருடங்களுக்குப் பிறகு 1995-ல் சத்யராஜின் ”எங்கிருந்தோ வந்தான்” என்ற திரைப்படம் மூலம் இணைந்தனர்.
மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் "இசைக்காகத்தான் வாத்தியங்களே தவிர வாத்தியங்களுக்காக இசை கிடையாது.. இதுதான் என் பாடல்களின்
மென்மைக்கான ரகசியம்" என்றார்.
மொழிகள் பல கண்டும்,
பல தலைமுறைகள் கடந்தும்,
மாற்றங்கள் பல தந்தும்,
ஆயிரம் ஸ்வரங்கள் தொடுத்தும்,
பல பாடகர்களை கொடுத்தும்,
காலத்தால் அழிக்க முடியாத இசைகளை காற்றலைகளுக்கு தாரை வார்த்த இசைத்தாயின் தலை மகனாம் நம் மெல்லிசை மன்னர் பல்லாண்டு வாழ
”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


மெல்லிசை மன்னரும் பாடும் நிலாவும் இணைந்தது ”சாந்தி நிலையம்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “இயற்கை என்னும் இளையக்கன்னி”
என்ற பாடல் மூலம் தான்.  பாலுஜியின் தமிழ் திரைஉலக முதல் பாடலும் இதுதான். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே “அடிமைப்பெண்” படம் வெளி வந்துவிட்டது.


சிம்லா ஸ்பெஷல் (1982) ஒரு வெள்ளித் திரை நாடகம். முக்தா சீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் வந்த படம்.
நகைச்சுவைக் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத அருமையான படம். கமல்ஹாசன், எஸ்.வி  சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா அவர்களின் நடிப்பு இன்றும் படத்தை நம்மிடையே திரையிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்றும் பலரது விருப்பம்.வாலி எழுதியதுபோல், திரு.விஸ்வநாதன் அவர்களே ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” என்றும் நீர் இசையமைத்தை பாடல்கள் உலகம் உள்ள வரைக்கும் ஒலிக்கும். வாலியின் அர்த்தம் பொதிந்த இனிய வரிகளில் பாலு அட்டகாசமாகப் பாடியிருக்கும் அருமையான பாடல் இதோ!


பாலு பாடும் போது வரிகளின் நடுவே உதிர்க்கும் சிரிப்புக்கே பல தடவை அந்த பாடலை விரும்பிக் கேட்கலாம்.. அப்படி இந்த பாடலிலும் ஒரு இடத்தில்
அவருடைய தனிச் சிறப்பை வெளிப்படுத்தியிருப்பார்.. கேட்டு ரசியுங்கள்...

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... Song Download Link  :   Unakenna_Mele_Nindrai.mp3


இரண்டு இசை இமயங்களுக்கு ஒரு பொன் விழா...




பாலுவின் பொன்னான குரலில் அவரே பாடியிருக்கும் ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” மேடை பாடல்...



கமல்ஹாசன் நடிப்பில் சிம்லா  ஸ்பெஷல்  திரைப்படத்திற்காக...





பாடல் வரிகள்


SPB :   
1......2........3........4..........

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் த
தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மே....லே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மே....லே நின்றா......ய்  ஓ...... நந்த....லா.......லா.........

Thursday, June 2, 2011

105- நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் - திரு.இளையராஜா விற்காக

10 comments






படம் :   மறுபடியும் ( Marupadiyum )
பாடல் :  
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.... ( Nalam Vazha )
பாடியவர் :   பத்மபூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இசைப்பிதாமகன் இசைஞானி திரு.இளையராஜா 
வருடம் : 1993
இயக்குநர் : பாலு மகேந்திரா
பாடலாசிரியர் :
வாலி

நடிகர்கள் : அரவிந்த்சாமி, ரேவதி, நிழல்கள் ரவி, ரோகினி

 

 
 
 
 
 
இசைப்பிதாமகன் இசைஞானி திரு.இளையராஜாவின் 67-வது பிறந்த நாள் பதிவாக நம் பாலுஜியின் அருமையான பாடல்....


பன்னைபுரம்” தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அருமையான கிராமம்.. அந்த கிராமம் உருவெடுக்கையில் நினைத்திருக்காது, ஒரு இசைப்பிதாமகனை பெற்றெடுக்கப்போகிறோம் என்று...

அப்படிப்பட்ட அந்த இசைத்தாயகத்திற்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அங்கு உள்ள பொம்மையாசுவாமி என்ற சிவன் ஆலயத்திற்கு சென்ற போதுதான் தெரிந்து கொண்டேன்,
இசை உலகிற்கு ஒரு உன்னதமான கலைஞனை அளித்த இசைத்தாயகம் என்பதை...

1976-ம் வருடம் தனது இசைத்திறனை முதன் முதலாக தமிழ் சினிமாவில் “அன்னக்கிளி” என்ற திரைப்படம் மூலம் ஆரம்பித்து இன்று வரை இசையில் யாரும் அறியமுடியாத
பரிமானத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்... பல ஆயிரம் பாடல்களை கொடுத்தும் இன்றும் பழமை மாறாத மனமுடன் இருப்பது அவரின் தனிச்சிறப்பு...

இளையராஜவும் நம் பாலுஜியும் இணை பிரியாத நண்பர்கள் என்றால் அது மிகையல்ல. ”பாலூட்டி வளர்த்த கிளி” என்ற படத்தில் ”நான் பேச வந்தேன்” என்ற
பாடல் மூலம் இணைந்த இந்த இரு பெரும் இசைநாயகர்கள் இசைக்கு மட்டும் அல்ல நமக்கும் ஒரு பொற்காசுகள்தான். (இந்த பாடல் விரைவில் இந்த தளத்தில் பதியப்படும்.)

 நம் பாலுஜி இளையராஜவை இசைபிசாசு மற்றும் இசை ராட்சஷன் என்று பல மேடையில்(சத்தியமா அவர் திட்டலங்க) கூறுவது அவர்களுக்கிடையில் உள்ள
அதீத நட்பின் இலக்கணம். பாலுஜியை யாரவது பாராட்டினால் அவர் சிரித்துக்கொண்டே இந்த பெருமையெல்லாம் இளையராஜா(சாமியார் என்றும் கூட கூறுவார்),
எம்.ஜி.ஆர் மற்றும் அவரது இசை குருவிற்கு தான் சேரும் என்று சொல்லுவார்..

இளையராஜா ஒரு பேட்டியில் ”இசையமைப்பாளர்கள் முதலில் இசையமைப்பதற்கு முன் அந்த பாடலின் தரம் பல ஆண்டுகளுக்கும் நிலைத்திருக்குமா என்று தன்
மனதுக்குள் இசையமைத்துவிட்டு பிறகு தான் அதை வெளிக்கொணர வேண்டும்...அதுபோல்தான் நான் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரீமிக்‌ஷாக வெளிவந்து ரசிகர்களை
மெய்சிலிர்க்க வைப்பதன் ரகசியம்” என்றார்.. இதுவே இப்பொழுதைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு நல்ல அறிவுரை...

இசைஞானி இளையராஜா இசையமைத்த செஞ்சுரி படங்கள்...

முதல்படம்           - அன்னக்கிளி
நூறாவது படம்      - மூடுபனி
இறநூறாவது படம் - ஆயிரம் நிலவே வா
முன்னூறாவது படம்   - உதயகீதம்
நானூறாவது படம்   - நாயகன்
ஐநூறாவது படம்  - அஞ்சலி
அறநூறாவது படம்  - தேவர்மகன்

மற்ற செஞ்சுரியிகளின் படங்கள் சரியாக தெரியவில்லை.

இசை உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய இசைப்பிதாமனுக்கு ”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

இளையாராஜாவின் பிறந்த நாள் பரிசாக நம் பாலுஜி பாடிய ஒரு அருமையான பாடல்.. இந்த பாடல் இசைஞானிக்கே சமர்ப்பனம்...

காதில் என்றும் ரிங்காரம் போல் ஒலிக்கும் இசையையும் அதைப் பாடவும் இளையராஜா மற்றும் நம் பாலுஜியை யால் தான் முடியும் என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி...


பாலுஜி இளையராஜாமேல் கொண்ட நட்பிற்கு இந்த வீடியோ சாட்சி...



இளையராஜவை ராஷ்கல் மற்றும் ராட்சசன் என்று பாலுஜி உணர்ச்சியுடன் கூறிய வீடியோ பதிவு..



”நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்” பாடலை பாலு நேயர்களுக்காக பாடிய ஒளிப்பதிவு...




Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Nalam_Vazha_Ennalum.mp3



Nalam Vala Ennalum | Upload Music



பாடல் வரிகள்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

சரணம் 1

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவது உண்டு
இதிலென்ன பாவம்... எதற்கிந்த சோகம்...
கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

சரணம் 2

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்




Visitors of This Blog