இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, September 21, 2010

092- திருத்தேரில் வரும் சிலையோ

5 comments



படம் :   நான் வாழவைப்பேன் ( Naan Vazhavaipen )
பாடல் :   
திருத்தேரில் வரும் சிலையோ.... ( Thirutheril Varum Silaiyo )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  P.சுசீலா 
இசை :   மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா 
வருடம் : 1979
இயக்குநர் : D. யோகனந்த்
நடிகர்கள் :
செவாலியே சிவாஜி கனேஷன், ரஜினிகாந்த், K.R.விஜயா
தயாரிப்பு : வள்ளி நாயகி பிளிம்ஸ்






”நான் வாழவைப்பேன்” என்ற திரைப்படம் 1979ஆம் ஆண்டு வெளிவந்தது. திரு.யோகனந்த் டைரக்சனில், மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைப்பில் மோஹனம் ராகத்தில் ராஜா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
பத்ம ஸ்ரீ பாலுஜியும் பத்மவிபூசன் சுசீலா அம்மாவும் இணைந்து பாடிய “திருத்தேரில் வரும் சிலையோ” என்ற இப்பாடலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. இப்பாடலின் மதிப்பும் திருத்தேரில் வரும் சிலை போன்றது.

”நான் வாழவைப்பேன்” திரைப்படத்தில் செவாலியே சிவாஜி கணேஷன் அவர்கள் ரவீ என்ற கதாபாத்திரத்தில் ஊனமுற்ற தங்கைக்கு அண்ணணாகவும் ஒரு பயண முகவர் பணிமனை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளையில் இருக்கும் கட்டியால் சிறிது காலத்தில் இறந்து விடுவோம்
 என்று தெரிய வருவதும் குடும்பத்தை காப்பாற்ற இவர் எடுக்கும் முயற்சிகளும், ரஜினிகாந்த்தின் எதார்த்தமான நடிப்பும் திரைக்கதைக்கு வலுச்சேத்திருக்கும்.

1974ம் வருடம் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான மஜ்பூர் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

இந்த பாடலை நம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால் செவாலியே சிவாஜியே நம் காதருகே வந்து பாடி நடிப்பது போன்ற பிரம்மை தோன்றும். பாலுஜியின் குரலில் அந்த திருத்தேரில் வரும் சிலையோ வரிகள் தங்கத் தேரில் வரும் குரலோ என்று எண்ண வைக்கும்.. 

ஒரு அருமையான மெலோடி பாடலை இப்போது கேட்டு ரசியுங்கள்...


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Thiru_Theril_varum.mp3


பாடல் ஒளி வடிவம்



பாடல் வரிகள்




திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ..



Tamil Blogs & Sites





Monday, September 20, 2010

091- எந்தன் தேவனின் பாடல் என்ன

3 comments

படம் :   இறைவன் இருக்கின்றான் ( Iraivan Irukkindraan )
பாடல் :   
எந்தன் தேவனின் பாடல் என்ன ( Enthanin Thevan Paadal Enna )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா 
இசை :   சங்கர் கனேஷ்
வருடம் : 26-Jun-1973
இயக்குநர் : எச்.எஸ்.வேணு
நடிகர்கள் :
ஜெய்சங்கர், ஜெயா
வசனம் : V.C. குகநாதன்
தயாரிப்பாளர் : சோமு, மஹாகனபதி பிக்சர்ஸ்




“இறைவன் இருக்கின்றான்” என்ற திரைப்படத்தில் முந்தைய பதிவில் பதிந்த பாடலை விட ” எந்தன் தேவனின் பாடல் என்ன” என்ற இந்த பாடலை நம் பாலுஜியும் பி.சுசீலா அம்மாவும் இணைந்து பாடினார்கள்...   திரு. சங்கர் கனேஷ் அவர்களின் இசையமைப்பில் 1973ம் வருடம் இப்படம் வெளியானது.

பாடலில் நம் பாலுஜியின் உச்சரிப்பே தனியொரு சுகம்... 
// அள்ளவோ.... உண்ணவோ // 
// வஞ்சிக்கும் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே...// 
// வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ...// 
மேற்கண்ட வரிகளை நேயர்கள் கவனிக்கவும்.... அட எனக்குப் புரியுதுங்க.. கவனிக்க எங்க நேரம் இருக்கும்... அதுக்குள்ள அவர் மெய்மறக்கச் செய்திடுவாரே... இருந்தாலும் பரவாயில்ல... சற்று மறுபடியும் பாடலை ஓட விட்டு கேட்டுப் பாருங்க... அந்த உச்சரிப்புக்கே பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.... 

அற்புதமான அந்த பாடல்... இப்பொழுது.....


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Enthan_Devanin_Padal_Enna.mp3



    Get this widget |     Track details  | eSnips Social DNA    


பாடல் வரிகள்

எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ.... உண்ணவோ
அள்ளவோ.... உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன


தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சிக்கும் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே...
நீல வானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்...
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன


தண்ணீரும் மைவண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...
வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ...
எந்தன் தேவனின் பாடல் என்ன

லாலலாலாலாலா

ருதுருதுருதுருதுருதுருது....





Tamil Blogs & Sites




Visitors of This Blog